மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அமெரிக்காவில் தமிழ் இசை விழா

ஆச்சாரி

Apr 19, 2014

அமெரிக்காவில் தமிழிசை முழங்கிய தமிழ்த்தளிர்கள்:  

அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்தில் உள்ள டல்லாசு (Dallas)நகரில் இயங்கிவரும் அவ்வைத் தமிழ் மையம் தமிழ் இசை விழாவினைக்  கடந்த சனிக்கிழமை, (ஏப்ரல் 12 ஆம் நாள்) பிற்பகல் 2மணி முதல் மாலை 6 மணி வரை லிபர்டி உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடத்தியது.

அவ்வைத் தமிழ் மையம் என்பது முற்றிலும் தன்னார்வலர்களால் (volunteers) உருவாக்கப்பட்ட, இலாப நோக்கமற்ற, தமிழ்க் கல்விக்கான தொண்டு நிறுவனமாகும். (non-profit organization).அவ்வைத் தமிழ் மையமானது தமிழ் மொழி கற்கும் குழந்தைகளுக்கு இரண்டாம் மொழிக் கற்றலுக்கான மதிப்பீட்டுப் புள்ளிகளைப் பெறுதல் (accreditation) என்ற தொலை நோக்குத் திட்டத்துடனும், அமெரிக்க சூழ்நிலைக்கேற்ற எளிமையான முறையில் பொதுப் பாடத்திட்டத்துடன் ( common structure syllabus) கூடிய தமிழ்க் கல்வியை அளித்தல் என்ற உடனடித் திட்டத்துடனும் டல்லாசு நகரில் நடத்தப்படுகின்றது. இந்தமையம் தமிழ்க் கல்விப்பணியை மட்டும் செய்வதுடன் அமையாமல்தமிழிசைப் பணியையும் செய்வதை அண்மையில் அமெரிக்காவில்டல்லாசு நகரில் நடத்திய தமிழிசை விழா நமக்கு எடுத்துரைக்கின்றது.

போட்டிகள் ஏதும் இல்லாமல், குழந்தைகளின் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு மேடையாக இவ்விழா நடத்தப்பட்டது. 5 வயது முதல் 17 வயதுவரை உள்ள குழந்தைகள், இளையோர்கள் கிட்டத்தட்ட120 பேர் கலந்து கொண்டு குழுவாகவும், தனியாகவும் மொத்தம் 47தமிழிசைப் பாடல்களைப் பாடினர். பங்கேற்ற குழந்தைகள்,பெற்றோர்கள், இசை ஆசிரியர்கள், தமிழ் இசை, பாடல் ஆர்வலர்கள்,நண்பர்கள் என சற்றொப்ப 400 பேர்களுடன் அரங்கம் நிரம்பியது.

தொடர்ந்து, டல்லாசு நகரில் உள்ள பல்வேறு இசைப்பள்ளிகளிலிருந்தும், இசைக்குழுக்களிலிருந்தும், தனியாகவும் பதிவு செய்திருந்து வந்திருந்த குழந்தைகள் கலந்து கொண்டு 4 மணி நேரம் இடைவிடாத இசை மழையைப் பொழிந்தனர். பல்வேறுஇராகங்களில் அமைந்த பக்திப் பாடல்கள், சங்க இலக்கியப்பாடல்கள்,இசை அறிஞர்களின் பாடல்கள், பாரதியார், பாரதிதாசன், வேதாத்ரி மகரிசி பாடல்கள் எனப் பல பிரிவுகளிலிருந்தும் பாடல்களைப் பாடிய விதம் கேட்போர் மனதைக் கவர்ந்த வண்ணம் இருந்தது. தேவாரம்,திருவாசகப் பாடல்களோடு கோசுபல் தேவாலய இசைக்குழுவைச் சேர்ந்த சிறுவன் பாடிய கிறித்தவக் கீர்த்தனைப் பாடல் இசைக்கும்,மொழிக்கும் எவ்வித தடைகளும் இருக்க முடியாது எனஎடுத்துக்காட்டியது.

“தமிழே இனிமை. மழலைத் தமிழ் அதனினும் இனிமை. பாடல்இனிமையானது. குழந்தைகள் பாடும் தமிழ்ப்பாட்டு அதனினும்இனிமையானது” என அரங்கில் பாடிய குழந்தைகள் அனைவரும்உணர்த்தினர்.

தமிழைசைப் பாடல்களின் வரிசையில் இறுதிப்பாடலாக,வேதாத்ரி மகரிசி அவர்களின் “உலகமெலாம் பருவ மழை பெய்யட்டும்” என்கிற உலக நல வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது.

விழாவின் நிறைவு நிகழ்வாக, தமிழ் இசை விழாவில் பங்கேற்றுப் பாடல்களைப் பாடிய அனைத்துக் குழந்தைகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்ட பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

பரிசு வாங்கிய குழந்தைகளின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியும்,ஆரவாரமும் பெற்றோர்களையும், இசை ஆசிரியர்களையும்,விழாவிற்காக உழைத்த அனைத்துத் தன்னார்வலர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

விழாவிற்கான இணையதளம்: http://avvaitamil.org/tamil-music-festival.html

இது போன்ற தமிழ் இசை விழா உலகெங்கும் நடத்தப்பட வேண்டும். தமிழிசையை வளர்க்க வேண்டும்.

When used www.besttrackingapps.com right, monitoring creates a link between parents and a child’s online presence that enables honest communication and teaches safe online habits

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்காவில் தமிழ் இசை விழா”

அதிகம் படித்தது