மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மகிழ்வில்லாத மகிழ்வன்கள்….

ஆச்சாரி

May 31, 2014

magizhivillaadha 1“கே”(gay) என்ற சொல்லுக்கு தமிழ் பதம் “மகிழ்வன்” (மகிழ்ச்சியாக இருப்பவன்)… அந்த அர்த்தத்திற்கு ஏற்ப அனைத்து ஒருபால் ஈர்ப்பாளர்களும் மகிழ்வாக இருக்கப்போகும் நாளைதான் ஒவ்வொருவரும் இங்கே எதிர்நோக்கிகாத்திருக்கிறோம்… “இப்போ நீங்க மகிழ்வாக இல்லையா?” என்று கேட்பார்கள்சிலர்… உள்ளத்தின் உண்மைகளை மறைத்தும், உதட்டளவில் புன்னகையைஉதிர்த்தும் வாழும் இரட்டை வாழ்க்கை முறையில் உண்மையான மகிழ்ச்சி எங்கேஇருக்கிறது?…. சட்டமும் சமுதாயமும் இந்த பால் ஈர்ப்பு உரிமையைமுழுமையாக அங்கீகரிக்கும் நாளில்தான் உண்மையான “மகிழ்வனாக” இங்கேஅனைவரும் இருந்திடுவர்….

சட்ட ரீதியான உரிமை என்பது காலத்தின்கட்டாயம், விரைவில் அது கிடைத்தே தீரும்… ஆனால், முழுமையான அங்கீகாரம்என்பது சமுதாயத்தின் பார்வையில் உண்டாக வேண்டிய மாற்றம்…. இங்கே பலரதுமனதிலும் ஓடும் எண்ணங்களிலும், “இது இயற்கைக்கு (அல்லது, இறைவனுக்கு)எதிரானது” என்ற கருத்து…. அவர்களை நான் கேட்பதெல்லாம், “எது இயற்கை?, நீங்கள் இயற்கைக்கு வகுத்திருக்கும் எல்லைகள் என்ன?” என்பதுதான்… இயற்கை என்றால் என்ன? என்று கூட புரியாமல், இதை இயற்கைக்கு புறம்பானதுஎன்று சொல்பவர்களை என்ன சொல்வது?….

இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் ஒருஅர்த்தம் இருக்கும்… அதை நம் அறிவியலும், விஞ்ஞானமும் கூட பலநேரங்களில்தாமதமாகவே உணர்கின்றன… என்னை ஒருபால் ஈர்ப்பு உணர்வுடன் படைத்ததும் அதேஇயற்கைதான்… அப்படிப்பட்ட இயற்கையின் படைப்பை குற்றம் சொல்பவர்கள்தான், இயற்கைக்கு புறம்பானவர்கள்…. இந்த உண்மையை நம் அறிவியல் நாற்பதுவருடங்களுக்கு முன்புதான் முழுமையாக ஏற்றுக்கொண்டது…. “ஒருபால் ஈர்ப்புஎன்பது மனநோய் அல்ல, அது இயல்பான மனித உணர்வின் மாற்று வடிவம்தான்” என்றுமருத்துவமும், அறிவியலும் ஏற்றுக்கொண்ட பிறகும்கூட, “தான் பிடித்தமுயலுக்கு மூன்றே கால்” என்று பிடிவாதம் பிடிக்கும் மக்கள், உண்மையைஉணரவேண்டும் என்பதுதான் நம் ஆதங்கம்…. சமுதாயம் இதை உணரும் முன்பு, ஒவ்வொரு ஒருபால் ஈர்ப்பு நபர்களும் இதனை தவறல்ல என்பதை உணரவேண்டும்…

magizhivillaadha 4ஒவ்வொரு நாளும் தாழ்வுமனப்பான்மையிலும், குற்ற உணர்ச்சியிலும்சிக்கித்தவிக்கும் நிலைமையில் நித்தமும் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர் பலர்…. நம் தமிழகத்தில் அப்படி ஒருபால் ஈர்ப்பு நபர்களில்மன அழுத்தத்திற்கும், சிதைவுக்கும் ஆளாகும் பலர் தற்கொலை எண்ணங்கள் வரைசெல்வதை நாம் பார்க்க முடிகிறது… நித்தமும் அப்படி நிகழும் தற்கொலைகள், சமூகத்தின் தவறான பார்வையால் செய்யப்படும் கொலைகள்…. இதுவும்ஒருவகயிலான “கௌரவ கொலைகள்” தான்…. மனநோயாளிகளையும், இளைஞர்களின்தற்கொலைகளையும்தான் இந்த சமுதாயம் தன் பிடிவாதத்தால் அதிகப்படுத்திவருகிறது… பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்த கிரேக்க மற்றும்ரோமானிய கலாச்சாரங்களில் ஒருபால் ஈர்ப்பு இயல்பான ஒன்றாக இருந்ததை நாம்அறிய முடிகிறது… அதன்பிறகும் பல காலம் இது இயல்பாக நடைமுறையில்இருந்ததை வரலாற்றில் நாம் அறியமுடிகிறது…. அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம் என்று பலவும், இப்போது ஒருபால் ஈர்ப்பு “இயல்பானது” என்பதைஆழமாக, ஆணித்தரமாக சொல்கிறது… இதனை ஏற்ற பல நாடுகளும் தங்கள் நாட்டில்ஒருபால் ஈர்ப்பை அங்கீகரிக்க தொடங்கிவிட்டன…. இன்னும் நம் நாட்டில் மட்டும்தான் இதனை குற்றமாக பார்க்கிறார்கள்… “எதற்காக குற்றமாக பார்க்கிறார்கள்?” என்ற கேள்விக்கு பதில் தெரியாமலேயே குற்றம் சுமத்துகிறார்கள்… பலரும் இதை மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் என்று சொல்கிறார்கள்…. அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், “உண்மையில் ஒருபால் ஈர்ப்பை பற்றிய மக்களின் தவறான எண்ணமும், புறக்கணிப்பும் உண்டாககாரணமே மேற்கத்திய தாக்கம்தான்”… ஆம், ஆங்கிலேய ஆட்சியில்தான் சமூகரீதியாகவும், சட்ட ரீதியாகவும் ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான மனநிலை நம்மக்களிடம் தீவிரமாக கொண்டுசேர்க்கப்பட்டது…. இன்று அவர்கள் நாட்டில், தங்கள் தவறை உணர்ந்து ஒருபால் ஈர்ப்பை அங்கீகரித்துள்ள நிலையில், நாம்மட்டும் அவர்கள் சொன்ன பழைய கதைகளை பேசிக்கொண்டே இருப்பது மடமையாகதோன்றுகிறது….

magizhivillaadha 3மாவீரன் அலெக்சாண்டரின் வீரம், டாவின்சியின் ஓவியங்கள், அரிஸ்டாட்டில், பிளாட்டோ, சாக்ரட்டிஸ் போன்றோரின் தத்துவங்கள், சேக்ஸ்பியரின் இலக்கியம், மைக்கேல் ஏஞ்சலோவின் சிற்பம் மற்றும்ஓவியங்கள், ஆலன் தூரிங்கின் கணினி அறிவு போன்ற பலவற்றை கொண்டாடும் நாம், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை தவறென்று சொல்வது நியாயமா?… இத்தனை திறமைகள் உடைய மனிதர்கள் நமக்கருகிலும் இருக்கிறார்கள், இந்த சமூகம் உருவாக்கிய தாழ்வுமனப்பான்மையால் தங்கள் திறமைகளை காட்டிக்கொள்ள முடியாமல் முடங்கி கிடக்கிறார்கள்…. “பெரும்பாலான நபர்கள் வலது கை பழக்கம் உடையவர்கள் என்பதால், இடது கை பழக்கம் உள்ளவர்களை இயற்கைக்குஎதிரானவர்கள் என்று சொல்ல முடியுமா?… அதே போலத்தான் ஒருபால் ஈர்ப்புநபர்களும் இயற்கைக்கு எதிரானவர்கள் இல்லை” ஹர்ஷ்பீல்ட் சொன்ன இந்தவார்த்தைகளைவிட, ஒரு சாமானியன் கூட எளிதாக புரிந்துகொள்ளும் ஒரு உண்மையைவேறு யாராலும் சொல்லிவிட முடியாது….

“கே உரிமை என்பது ஒரு மனிதனின்அடிப்படை உரிமை, அந்த உரிமையில் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை” என்று சொன்னது அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரிகிளின்ட்டன்… மிகவும் ஆழமான உண்மை…. இந்த உண்மைகளை புரிந்து நம்மக்களும் ஒருபால் ஈர்ப்பை அங்கீகரித்து வளமான, நலமான ஒருபால் ஈர்ப்புசமூகத்தை உருவாக்கும் நாளில் நாம் நிச்சயம் “மகிழ்வனாகவே” இருக்கலாம்….

Students also commented on the lectures expanding beyond just engineering into social and political issues, with the tutor www.homework-writer.com being happy to discuss the impact of engineering on society

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மகிழ்வில்லாத மகிழ்வன்கள்….”

அதிகம் படித்தது