மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செட்டிநாட்டு சமையல் – தினை அரிசி பாயாசம்

ஆச்சாரி

Jun 14, 2014

thinai arisi paayaasam1தேவையான பொருட்கள்:

தினை அரிசி –¼கோப்பை

வெல்லம் – ½கோப்பை

ஏலக்காய் – 2

முந்திரிப்பருப்பு – 5

பாதாம் பருப்பு – 4

நெய் – 2 தேக்கரண்டி

தேங்காய் – சிறிதளவு

உலர் திராட்சை – 5

உப்பு –ஒரு சிட்டிகை

செய்முறை:

தேங்காயை அரைத்து பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வெல்லத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

முந்திரிப்பருப்பு மற்றும் காய்ந்த திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தினை அரிசியை கழுவி தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். தினை அரிசி நன்றாக வெந்தவுடன் இதனுடன் பொடி செய்த வெல்லத்தை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பின் நெய்யில் வறுத்து எடுத்து வைத்துள்ள உலர் திராட்சை மற்றும் முந்திரிப்பருப்பையும் இதில் சேர்க்க வேண்டும். அடுத்ததாக ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கிளறவேண்டும். கடைசியாக எடுத்து வைத்த தேங்காய் பால் ஊற்றி,கிளறி இறக்கிவிடவும். சத்துள்ள மற்றும் சுவையான தினைஅரிசி பாயாசம் தயார்.

Several narrative chapters or http://essayprofs.com/ individual chapters on materials, methods, and results

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செட்டிநாட்டு சமையல் – தினை அரிசி பாயாசம்”

அதிகம் படித்தது