மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரிசர்வ் வங்கி விதிமுறையை மீறி இயங்கும் தனியார் அடகுக்கடைகள்

ஆச்சாரி

Jul 5, 2014

People walk in front of RBI building in Kolkataதமிழகத்தில் அப்பாவி மக்களை சுரண்டும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்தியாவில், தமிழகத்தில் அதுவும் குறிப்பாக தென்மாவட்டங்களில் தான் நிதி நிறுவனங்கள் நாளுக்கு நாள் கடையை திறந்து வருகிறது. இதற்கு காரணம் இங்குள்ள அதிகாரிகள் லஞ்சபணத்தில் கூத்தடிப்பதுதான். ஒரு வங்கியை அல்லது நிதி நிறுவனம் திறக்கவேண்டும் என்றால் பல்வேறு நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. இந்த விதிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு அப்பாவி மக்களையும் அப்பாவி மக்களின் நகைகளையும் சுரண்டி வருகிறது.

ரிசர்வ் வங்கி விதிப்படி ஒரு வங்கியில் அல்லது மற்றொரு தனியார் வங்கியில் வைத்த நகைகளை மீட்கவோ அல்லது மறுஅடகு வாங்கவோ அனுமதியில்லை. அந்த பணியில் ஒரு சில நிதி நிறுவனம் செய்து வருகிறது. மேலும் நகையை அளவீடும் தராசு ஒரு வங்கிக்கு ஒரு தராசுதான் வைக்கவேண்டும். அந்த தராசு வாங்கவேண்டும் என்றால் அதற்கு பலவித நிபந்தனைகள் உள்ளது. ஆனால் நிதி நிறுவனங்களில் இரண்டு தராசுகள் ஒவ்வொரு கிளையிலும் வைத்துள்ளது. இவை தவிர தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த வங்கியில் பணிபுரிகிறார்கள் என்று பணிக்கான நியமன ஆணையை வழங்குவதில்லை. ஒவ்வொரு நிதியிலும் கண்டிப்பாக நகை மதிப்பீட்டாளர் அதாவது தேர்ச்சி பெற்ற மதிப்பீட்டாளர் நியமனம் செய்யவேண்டும். அந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

reserve 1இவை தவிர ஒரு ஊரில் வங்கியை திறக்கவேண்டும் என்றால் எந்தளவிற்கு நகையை அடகு வாங்குகிறார்களோ அந்தளவிற்கு ரிசர்வ் வங்கிக்கு வைப்பு நிதி செய்யவேண்டும். இல்லையெனில் எந்தநேரத்திலும் அவர்கள் ஓடிப்போகின்ற வாய்ப்பு உள்ளது. அப்போது பொதுமக்களின் நகைகளுக்கு உத்தரவாதம் இல்லை. இவை தவிர தமிழக அரசின் விடுமுறை நாட்களில் இந்த வங்கிகள் இயங்கும். அண்டை மாநிலமான கேரளாவில் எந்த நாளில் விடுமுறை அளிக்கப்படுகிறதோ அந்த விடுமுறைதான் தமிழகத்திலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை கண்காணிக்கவேண்டிய லேபர் அதிகாரி, நகை மதிப்பீடும் தராசுகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு கண்டும் காணாமல் விடுகிறார்கள். இவை தவிர கனரா வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைத்த நகைகள் ஏலம் போகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டு அந்த நகைகளை திருப்பி மறு அடகு வாங்குவார்கள். அதன் பின்னர் அந்த நகை தரமாக இருந்தால் விட்டுவிடுவார்கள். இல்லையெனில் தரம் குறைந்தது அல்லது மச்சம் கம்மியாக உள்ளது எனக்கூறி வாடிக்கையாளர்களை அச்சுறுத்தியும், அடியாட்கள் மற்றும் காவல்துறை மூலம் மிரட்ட துவங்கிவிடுவார்கள். இதனால் இவர்களால் பாதிக்கப்பட்ட பலர் ஊரை விட்டே ஓடியுள்ளனர்.

reserve 10மேலும் நகை அடகு வைக்கும்போது வட்டியை மூன்று விதமாக பிரிக்கிறார்கள். சாதாரண வட்டி, அதிகவட்டி என பல வட்டிகளை பிரித்து அதன்படி நகைகளை வாங்குகிறார்கள். ரிசர்வ் வங்கி விதிப்படி 2 சதவீதம் வட்டிதான் வாங்கவேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் இருந்த வட்டிகடைக்காரர்கள் இந்த விதிமுறைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அடாவடி நிதி நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. மேலும் நகைகளை திருப்பும்போது நகைகளுக்கான அசல் மற்றும் வட்டிக்கான ரசீது தருவதில்லை. பெரும்பாலும் கூட்டுவட்டி பின்பற்றப்படுகிறது. இங்கு நகைகளை அடகுவைத்தால் அதிகபட்சம் 6 மாதமானால் நகைகளை ஏலம் விட்டுவிடுவார்கள். அதுவும் கொசமற்றம் தலைமையகத்தில்தான் இந்த நகைகளை ஏலம் விட்டு அவர்களாகவே உருக்கி விடுகிறார்கள். இதன் சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டால், “தலைமையகத்தில் கேட்டுக்கொள்ளுங்கள்” என்ற பதில்தான் திரும்பத்திரும்ப ஒலிக்கிறது.

இதன் சம்பந்தமாக சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது நான் ஒரு நகையை அடகு வைக்கச்சென்றேன். 6மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் வட்டி அதிகமாக போட்டார்கள். இதன் சம்பந்தமாக ரசீது கேட்டால் ரசீது தரவில்லை என்றார். இதே போல மற்றொரு சிட்பண்ட் நிறுவனமும் நகைகளை மறு அடகு என்ற பெயரில் அடகு வாங்கி வைத்து அந்த நகைகளை வாடிக்கையாளர்களுக்கு தராமல் மொத்தமாக உருக்கி விற்றுவிடுகிறார்கள். இதன் சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

reserve 6இதில் பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது, நான் கரூர் வைஸ்யா வங்கி, முத்தூட் நிதி நிறுவனம், கனரா வங்கிகளில் நகை அடகு வைத்தேன். அந்த நகைகள் ஏலம் போகுமளவிற்கு சென்றது. அப்போது தனியார் நிதி நிறுவனம் மறுஅடகு வைப்பதாகக்கூறி என்னை அணுகினார்கள். அப்போது, நிதிநிறுவனத்தில் பணிபுரியும் மதிப்பீட்டாளர் மற்றும் சிப்பந்திகள் வந்து நகைகளை மறு அடகுவைத்துநிதிநிறுவனத்தில் அடகுவைத்துவிட்டார்கள். அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து நகையில் மச்சம் குறைவாக உள்ளது எனக்கூறி நகைகளை திருப்பச் சொன்னார்கள். அப்போது என்னிடம் இருந்த மேலும் 10 பவுன் நகைகளை ஏலம் என்ற பெயரில் உருக்கி விற்றுவிட்டார்கள் என்றார். எனவே ரிசர்வ் வங்கி விதிமுறை மீறும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அப்பாவி மக்களிடம் இருந்து பெறப்பட்ட நகைகளை மீட்கவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரிசர்வ் வங்கி விதிமுறையை மீறி இயங்கும் தனியார் அடகுக்கடைகள்”

அதிகம் படித்தது