தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பத்து வழிகள்
ஆச்சாரிJul 5, 2014
- பாத்திரங்கள் கழுவும்பொழுது நீர்க்குழாயைப் பயன்படுத்தாமல் தனி ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி கழுவுதல்.
- சமைப்பதற்கு ஏற்ற அளவான பாத்திரங்களை பயன்படுத்தலாம். ஏனெனில் சிறிய அளவு சமைக்க பெரிய பாத்திரத்தை பயன்படுத்தினால் நீர் அதிகம் செலவாகும்.
- பழங்களையோ அல்லது காய்கறிகளையோ பயன்படுத்தும்பொழுது ஒரு தனி பாத்திரத்தில் நீர் எடுத்துக்கொண்டு கழுவுவது.
- துவைக்கும் பொழுது அதிக அளவு நுரைகள் தரக்கூடியவற்றை தவிர்த்து தரமான சோப்புகளையோ அல்லது பவுடர்களையோ பயன்படுத்தலாம்.
- துணி துவைக்கும் இயந்திரம் பயன்படுத்தும்பொழுது இயந்திரம் முழுவதும் துணிகள் நிரம்பிய பிறகு பயன்படுத்துவது.
- செயல்திறன் மிக்க சலவை இயந்திரத்தைப் பயன்படுத்துவதால் அதிக நீரை சேமிக்கலாம்.
- துணி துவைத்த நீரை கழிப்பறைகளில் ஊற்ற பயன்படுத்தலாம்.
- பல் துலக்கும்பொழுதும், சவரம் செய்யும்பொழுதும் நீர் குழாயை அடைத்து விடலாம்.
- சோப்பு நுரையுடன் கைகளைக் கழுவும் பொழுது நீர் குழாயிலிருந்து வரும் நீரின் அளவை குறைத்துக் கொள்வது.
- நீர் உபயோகம் முடிந்தவுடன் நீர்குழாயை நன்றாக அடைக்க வேண்டும். (ஒரு துளி அளவும் வீணாகாமல்)
In real-life and work-related contexts, people consult a wide range of different information sources every day, https://www.justbuyessay.com without always making conscious judgments about whether the source is reliable and why
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பத்து வழிகள்”