மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செட்டிநாட்டு நாட்டுக்கோழி சமையல்

ஆச்சாரி

Jul 19, 2014

நாட்டுக்கோழி வெள்ளை மசாலா

naattukkoli1

தேவையான பொருட்கள்:

நாட்டுக்கோழி –½கிலோ

சின்ன வெங்காயம் – ¼கிலோ

பூண்டு – 100 கிராம்

கொத்தமல்லி இலை –சிறிது

கறிவேப்பிலை –சிறிது

பச்சைமிளகாய் – 50 கிராம்

உப்பு –தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் – 1 கோப்பை

சோம்பு – 2 தேக்கரண்டி

கசகசா – 2 தேக்கரண்டி

முந்திரிபருப்பு – 2 தேக்கரண்டி

சீரகம் – 2 தேக்கரண்டி

தாளிக்க:

பட்டை – 2

சோம்பு –½தேக்கரண்டி

உளுந்தம்பருப்பு –½தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • அரைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட பொருட்களை நன்றாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
  • கறியை நன்றாக சுத்தம் செய்து எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும்.
  • வெங்காயம்,பூண்டு,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கிக் கொள்ளவேண்டும்.

சட்டியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி பட்டை,சோம்பு,உளுந்தம்பருப்பு இவற்றை பொரிய விடவும். பின் வெங்காயம்,பச்சைமிளகாய்,பூண்டு,கருவேப்பிலை இவற்றை நன்கு வதக்கவும். பின் கறியையும் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். அரைபதம் வெந்தவுடன் உப்பு மற்றும் அரைத்த மசாலாவையும் சேர்த்து வேகவிடவேண்டும். வெந்தவுடன் கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கி விடவும்,சுவையான நாட்டுக்கோழி வெள்ளை மசாலா தயார்.

நாட்டுக்கோழி தெரக்கல்

naattukkoli2

தேவையான பொருட்கள்:

நாட்டுக்கோழி –½கிலோ

சின்ன வெங்காயம் – ¼கிலோ

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

மல்லித்தூள் – 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

உப்பு –தேவையான அளவு

தக்காளி – 2

எண்ணெய் – தேவையான அளவு

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை –சிறிது

தாளிக்க:

பட்டை – 2

சோம்பு –½தேக்கரண்டி

உளுந்தம்பருப்பு –½தேக்கரண்டி

அரைக்க:

தேங்காய் – 1 கோப்பை

சோம்பு – 2 தேக்கரண்டி

கசகசா – 2 தேக்கரண்டி

முந்திரிபருப்பு – 2 தேக்கரண்டி

சீரகம் – 2 தேக்கரண்டி

செய்முறை:

  • அரைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட பொருட்களை நன்றாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
  • கறியை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • வெங்காயம்,தக்காளி இவற்றை நறுக்கிக் வைத்துக்கொள்ள வேண்டும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை,சோம்பு,உளுந்தம்பருப்பு சேர்த்து பொறிய விடவும். பின் நறுக்கிய வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கி பின் மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,மஞ்சள்தூள், அரைத்த மசாலா மற்றும் தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்தவுடன் கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கவும். சுவையான நாட்டுக்கோழி தெரக்கல் தயார்.

In recent years it has been recognised that students engage better with the student-centred learning which projects provide, and often develop a deeper approach http://writemyessay4me.org to learning

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செட்டிநாட்டு நாட்டுக்கோழி சமையல்”

அதிகம் படித்தது