மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய பயணிகள் விமானம்

ஆச்சாரி

Jul 19, 2014

malaysian flight1மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17 விபத்துக்குள்ளான செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்ற வியாழக்கிழமை (17-07-2014) நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்ட்ராமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்குப் புறப்பட்டுச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17 உக்ரைன் நாட்டிற்கு மேலே சென்று கொண்டிருந்த பொழுது ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் 280 விமானப்பயணிகளும்,   15 ஊழியர்களும் உயிரிழந்தனர். ரசிய எல்லைக்கு 50 கிலோமீட்டருக்கு முன்னால் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபொழுது திடீரென்று ‘ராடார்’கருவி பார்வையிலிருந்து மறைந்தது. சற்றுநேரத்தில் விமானம் தீப்பிடித்தபடி வானிலிருந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது என்று இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

malaysian flight6ரசியாவிற்கு அருகில் உள்ள உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில், ரசியாவிற்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள் ரசியாவுடன் இணைய விரும்புகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் உக்ரைன் அரசுப்படைகளுடன் சண்டையிட்டு வருகிறார்கள். இக்கிளர்ச்சியாளர்களுக்கு ரசியா உதவி செய்துவருவதாக கருதப்படுகிறது.

இந்த தீவிரவாதசெயல் பற்றி பேசிய உக்ரைன் அதிபர் பெட்ரோ புரோசென்கோ, அந்த விமானத்தை, உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தவில்லை என்று கூறினார். சிலவாரங்களாக உக்ரைன் விமானங்கள் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது என்று உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்த மலேசியன் விமான விபத்திற்கான குற்றச்சாட்டை கிளர்ச்சியாளர்களின் தலைவர் அலெக்சாண்டர் போராடாய் மறுத்துள்ளார். உக்ரைன் விமானப்படைதான் சுட்டுவீழ்த்தியதாக ரசிய அரசு,தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். இதனை உக்ரைன் அரசு மறுத்துள்ளது. இவ்வாறு மாறிமாறி குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக் டுவிட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

Najib Razak, the prime minister of Malaysiaமலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தேன். இதுகுறித்து உடனடியாக விசாணைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் 8ந்தேதி மலேசியாவிலிருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று திடீரென மாயமானது. அதில் பயணித்த 5 இந்தியர்கள் உட்பட 239 நபர்கள் பலியானதாக அஞ்சப்படுகிறது. அதைப்பற்றிய தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் இந்த கோர தீவிரவாத செயல் மலேசியாவை மட்டுமல்ல அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த அப்பாவிமக்களின் பலிகள் வேதனைஅளிக்கிறது. இந்த கோர தீவிரவாத செயலின் பின்னணியில் சதித்திட்டம் ஏதும் இருப்பின் அதனை சிறகு வன்மையாக கண்டிக்கிறது.

“தங்கள் குடும்பத்தினரை இழந்து வாடும் அனைத்து நெஞ்சங்களுக்கும் சிறகு இணைய இதழ் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.”

Educating parents just like when we www.trackingapps.org were children, often kids have their own language and with all of today’s technology, the same thing is happening in the digital world

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய பயணிகள் விமானம்”

அதிகம் படித்தது