மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செட்டிநாட்டு சமையல் – மல்லிக்கறி, உளுந்தஞ்சட்டினி

ஆச்சாரி

Aug 2, 2014

மல்லிக்கறி

336466_coupe dinner plates set of 4

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கறி–½ கிலோ

சின்ன வெங்காயம் – 50 கிராம்

பச்சை மிளகாய் – 10

இஞ்சி–2 துண்டு

பூண்டு – 6 பல்

மல்லித்தழை – சிறிது

மல்லித்தூள் – 2 தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

பட்டை – 3

பிரிஞ்சி இலை – 1

உப்பு – தேவையான அளவு

உளுந்தம்பருப்பு – ½ தேக்கரண்டி

அரைக்க:

தேங்காய் – 1 கோப்பை

சோம்பு – 2 தேக்கரண்டி

கசகசா – 2 தேக்கரண்டி

முந்திரி பருப்பு – 2 தேக்கரண்டி

 

செய்முறை:

ஆட்டுக்கறியை நன்றாக சுத்தம் செய்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

அரைப்பதற்காக கொடுக்கப்பட்ட பொருட்களை அரவை இயந்திரத்தில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, பிரிஞ்சி இலை, உளுந்தம்பருப்பு சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் ஆட்டுக்கறியை சேர்த்து நன்கு வதக்கவும். பின் சிறிது மல்லித்தூள் மற்றும் தண்ணீர் சேர்க்கவும் முக்கால் பதத்திற்கு வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் மல்லித்தழை சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான மல்லிக்கறி உண்ண ருசியாக இருக்கும்.

உளுந்தஞ்சட்டினி

samayal2

தேவையான பொருட்கள்:

உளுந்து – 2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 2

மிளகாய்ப்பொடி – 2 தேக்கரண்டி

மஞ்சள்பொடி – ¼ தேக்கரண்டி

கடுகு – சிறிது

சோம்பு – சிறிது

பட்டை – சிறிது

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிது

 

செய்முறை:

* சட்டியில் எண்ணெய் ஊற்றாமல் உளுந்தை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அவற்றை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இப்பொடியை சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

* தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளக்காய்ப்பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதித்த உடன் இறக்கி விடவும்.

இதனுடன் கலந்து வைத்த கலவையை சேர்க்கவும். சுவையான உளுந்தஞ்சட்னி தயார். இட்லி, தோசைக்கு ஏற்றவை.

If you thought spy to mobile with http://www.spyappsinsider.com/ being popular in school was tough, though, then you haven’t seen anything yet

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செட்டிநாட்டு சமையல் – மல்லிக்கறி, உளுந்தஞ்சட்டினி”

அதிகம் படித்தது