மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மின்சாரத்தை சிக்கனப்படுத்த பத்து வழிகள்

ஆச்சாரி

Aug 2, 2014

minsaaram1

  1. நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ளவாறு வீடு அமைத்தால் பகல் வேளைகளில் பெருமளவு மின்சாரத்தை சிக்கனப்படுத்தலாம்.
  2. வீட்டினுள் வண்ணம் பூசும் பொழுது வெளிர் நிறத்தில் வண்ணம் பூசினால் மின்னொளியில் நல்ல வெளிச்சமாக இருக்கும்,மாறாக பெரிய அறையாக இருந்தால் இரண்டு விளக்கு பயன்படுத்த வேண்டிய இடங்களில் ஒன்றை மட்டுமே பயன்படுத்தலாம்.
  3. உபயோகப்படுத்தாத நேரங்களில் மின்விசிறி மற்றும் மின் விளக்குகளை அணைத்து வைத்துவிடுங்கள்.
  4. படுக்கையறையில் உள்ள மாற்றுக்குமிழை(Switches) படுக்கையின் அருகில் வைப்பதால் இரவில் நம் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மின்விசிறியின் வேகத்தைக் குறைக்க மற்றும் அணைப்பதன் மூலம் மின்சாரத்தை சிக்கனப்படுத்தலாம்.
  5. அதிக மின்சாரத்தை வீணாக்கும் குண்டு விளக்குகளை விடுத்து,மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் குழல் விளக்குகள் அல்லது CFL விளக்குகளை பயன்படுத்தலாம்.
  6. ஒவ்வொரு அறைக்கும் தகுந்தவாறு விளக்குகளை பயன்படுத்தி மின்சாரத்தை சிக்கனப்படுத்தவும். உதாரணமாக: படுக்கை மற்றும் தொலைக்காட்சி பெட்டி இருக்கும் அறையிலும் மெல்லிய வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் போதுமானது.
  7. குளிரூட்டிகள் மற்றும் குளிர் பதன பெட்டிகள் இருக்கும் இடங்களில் வெப்பம் அதிகம் வெளியிடாத மின்விளக்குகளை பயன்படுத்தவும். காரணம்: மின்விளக்குகளால் ஏற்படும் வெப்பத்தால் இச்சாதனங்களின் மின் செலவு அதிகரிக்கிறது.
  1. குளிர்சாதனப்பெட்டியை அடிக்கடி திறந்து மூடாதீர்கள். காரணம்: திறக்கும் ஒவ்வொருமுறையும் மின்சாரம் அதிகம் வீணாகிறது.
  1. தண்ணீர் சூடேற்றும் கருவியை(Water Heater) முடிந்தவரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது ஏனெனில் இதில்தான் அதிக மின்செலவு ஆகிறது.
  2. வானொலி கேட்க விரும்புவோர் அதனுடைய ஒலியின் அளவை தங்களுக்குத் தகுந்தாற்போல் வைத்துக்கொள்ளலாம் ஏனெனில் ஒலியின் அளவு அதிகரிக்க மின்செலவும் அதிகரிக்கிறது.

மின்சாரத்தை சேமிப்பீர்; சுற்றுச்சூழல் பாதுகாப்பீர்

Zum anderen best-ghostwriter.com/ dient das research proposal auch dazu, das vorhaben mit dem betreuenden dozenten abzusprechen

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மின்சாரத்தை சிக்கனப்படுத்த பத்து வழிகள்”

அதிகம் படித்தது