மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மூட்டுவலி பிரச்சினைக்குத் தீர்வு- இறுதி பகுதி

சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

Aug 16, 2014

arunchinnaiahமூட்டுவலி வருவதற்கான முக்கியமான காரணம் வாய்வு மிகுதல் மற்றொன்று பித்த மிகுதல். இந்த வாய்வும்,பித்தமும் மிகுதலானால்தான் வாதம் மிகுதலே உண்டாகும். உடலில் வாதநாடியினுடைய அளவு அதிகரிக்கிறது. எனவே ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ வாதமோ,பித்தமோ மிகுதியாக இருக்கும்பொழுது உடல் வெப்பத்தோடு இருக்கும். எனவே மூட்டுவலி இருப்பவர்களுக்கு வலி, வலி அடிப்படையில் தூக்கம் இல்லாத சூழல் உண்டாகும். அதேபோல் Concentration மாறுபடும். வலியினால் பதற்றம் இருக்கும்,மனஅழுத்தம் இருக்கும். ஆக இந்த மூட்டுவலியால் வரக்கூடிய உடல்ரீதியான பாதிப்புகள் அதிகமாக இருக்கும். ஆக இந்த மூட்டுவலி என்பது உடம்பிலே வரக்கூடிய ஒரு விசயம். உடம்பில் ஆற்றலை தக்கவைக்கவேண்டும் என்றால் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரக்கூடிய உணவுப்பொருட்களைத் தேடித்தேடி அடையாளம் கண்டு சாப்பிட வேண்டும். உடல்பற்றாக்குறையால் வருகிறது என்றால் அதற்கு அத்திப்பழம், பேரீச்சம்பழம், அண்ணாசிப்பழம், பப்பாளிப்பழம், மாதுளை, ஆப்பிள் இவற்றையெல்லாம் விடாமல் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் உடல்ரீதியாக பற்றாக்குறையால் வரக்கூடிய நோய்கள் சரியாகும்.

moottuvali2-3நிறைபேருக்கு மூட்டுவலிக்கான காரணம் என்னவென்றால் வாரத்தில் ஏழுநாளும், தினசரி ஒருவேளையாவது இட்லியையும், தோசையையும் சாப்பிடுவது. அது புளிப்பான பொருள், புளிப்பான மாவுப்பொருள். இந்த மாதிரி சாப்பிடும்பொழுது என்னவாகும் என்றால் உடலில் புளிப்பு மிகுதியாகி, பித்தம் மிகுதியாகும். யார் ஒருவருக்கு பித்தம் அதிகமாகிறதோ அதாவது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி சாப்பிடுவது, உருளைக்கிழங்கு வகையறாவை நிறைய சாப்பிடுவது, அதேபோல் ஆரவள்ளிக்கிழங்கு மற்றும் சக்கரவள்ளிக்கிழங்கு போன்ற வாயுவை அதிகரிக்கக்கூடிய உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது. அதை எடுத்துக்கொள்வதோடு இல்லாமல் அதன் கூடவே டீ, காபி போன்ற பொருட்களை மிக அதிகமாக சாப்பிடுவது ,வாரத்திற்கு இரண்டு நாட்கள் மற்றும் 3 நாட்கள் ஆண்கள் தொடர்ந்து மது அருந்துவது, இவையனைத்துமே உடலுக்கு ஆதாரமான எலும்புகள் உருக்குலைந்து போகக்கூடிய ஒரு சூழலை உண்டாக்கும்.

எப்படி ஒரு கட்டிடம் நல்ல உறுதியாக இருக்கவேண்டும் என்றால் அந்த கட்டிடத்தில் விரிசல் இருக்கக்கூடாது,கட்டிடத்தில் விரிசல் இல்லாமல் இருக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக அந்த கட்டிடத்திற்கு பயன்படுத்தப்பட்ட சிமெண்ட் தரமாக இருக்க வேண்டும்,கலவை சரியாக இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால்தான் கட்டிடம் பார்ப்பதற்கு ஒரே சீராக,அழகாக புது கட்டிடம் போல தெரியும். அதே மாதிரிதான் நம்முடைய உடல் உறுப்பிலேயும் ஒரு மனிதனுக்கு எலும்பு எந்த அளவிற்கு வலுவாக இருக்கிறதோ அந்த எலும்பை வைத்துத்தான்,எலும்பின் ஆதாரத்தைத் வைத்துத்தான் ஒரு மனிதனுடைய நரம்பு வலுவாக இருக்கும். ஒரு மனிதனுடைய எலும்பு,நரம்பு ஆதாரத்தை வைத்துத்தான் தசை மண்டலம் மிக வலுவாக ஒழுங்காக இருக்கும். ஆக எலும்பு,நரம்பு,தசை இந்த மூன்றையும் வலுவாக எந்தவொரு ஆண்மகன் வைத்திருக்கிறானோ,எந்த பெண் இந்த மூன்றையும் ஒழுங்காக வைத்திருக்கிறாளோ அவளுடைய இரத்த ஓட்டம்,இரத்த சுழற்சி ஒழுங்காக,முறையாக இருக்கும். எங்கேயும் தேக்கமும்,தடையும் இருக்காது. ஆரோக்கியமான சீரான வாழ்க்கைக்கு ஒரு அடிப்படையாக எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். அது சார்ந்த உணவுப்பொருட்களை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

moottuvali2-1இப்பொழுது சாதாரணமாக கிடைக்கக்கூடிய முடக்கத்தான் கீரை. முடக்கத்தான் என்றால் முடக்கு + அறுத்தான் என்று சொல்வோம். இந்த முடக்கத்தான் கீரையோடு சிறிது சீரகம் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து அதை காலையில் தோசைமாவோடு கலந்து தோசையாக வார்த்து சாப்பிடலாம். இல்லையென்றால் கிராமங்களில் முடக்கத்தான் ரசம் என்று வைப்பதுண்டு. முடக்கத்தான், சீரகம், பூண்டு, புளி எல்லாமே சேர்த்து ரசம் மாதிரியும் பண்ணலாம். அந்தமாதிரி முடக்கத்தானை சாப்பிடக்கூடிய ஆண்,பெண் இருவருக்குமே மூட்டுவலி சார்ந்த எல்லா பிரச்சினையும் சரியாகும்.

அதே போல் வாதநாராயணா. வாதநாராயணா என்பது சாலை ஓரங்களில் புளிய இலை போல் இருக்கக்கூடிய ஒரு வகையான மரம். இந்த இலை இன்றைக்கும் கிராமங்களில் அதீதமான புகழ்பெற்ற ஒரு அற்புதமான மருந்து என்று சொல்லலாம். இந்த மூட்டுவலியில் முடக்கு வாதம் என்ற ஒரு வகை உண்டு. இது வந்தால் அது கண்டிப்பாக இதய நோயோடு சேர்ந்த ஒரு வாதமாக மாறுவதற்கு ஒருவாய்ப்பு உண்டு. இன்னும் சில மூட்டுவலிகள் தோல் நோயோடு சம்பந்தமான மூட்டுவலிகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. இவைகளை முழுமையாக சரிசெய்வதற்கு மூட்டுவலியோடு உள்தொடர்புடையதாக வரும் பட்சத்தில் மூட்டுவலியையும் சரிசெய்து, வாதநோயையும் சரிசெய்து, அந்த வாதநோய் அடிப்படையில் வரக்கூடிய வேறு சில பிரதான நோய்களையும் சரிசெய்யக்கூடிய ஒரு அற்புதமான மூலிகைப்பொருள் வாதநாராயணா.

moottuvali2-2இந்த வாதநாராயணா இலையை இன்றைக்கும் சில கிராமங்களில் கை-கால் வலியாக இருக்கிறது,மூட்டுவலி வீக்கமாக இருக்கிறது, மூட்டு பழுத்து உள்ளது என்றால் இந்த வாதநாராயணா இலையை அப்படியே அரைத்து சாறெடுத்து அந்த சாறை துணியில் நனைத்து,அதை சுற்றும்பொழுது அதிலேயே இந்த வலி முழுமையாக சரியாகக்கூடிய ஒரு அற்புதமான குணம் இதற்கு உண்டு. ஒரு சில ஆண்களுக்கு இரைப்பையின் மேல் துவாரம் (cardia) பிரச்சினையில் சேர்ந்துவிடும். அதாவது மார்பிலேயும் வலி வரும், அதே வலி வலது கால் மூட்டிலேயும், இடது கால் மூட்டிலேயும் வரும். அப்படி இருக்கும் பொழுது ஒரு ஆணோ,பெண்ணோ துடித்துப்போகக்கூடிய ஒரு சூழல் உண்டாகும். அந்த மாதிரி தருணங்களில் கிராமங்களில் பயன்படுத்தக்கூடிய மிக எளிமையான முறை என்னவென்றால் இந்த வாதநாராயணா இலை ஒரு கைப்பிடி, 3 பல் பூண்டு, 4 சிட்டிகை மஞ்சள் தூள் அவ்வளவுதான். இதனை நன்றாக விழுதாக அரைத்து,இந்த விழுதை ஒரு அரை எலுமிச்சங்காய் அளவிற்கு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது. 21 நாட்கள் விடாமல் கொடுத்தால் எப்பேற்பட்ட முடக்கு வாதமாக இருந்தாலும் சரி,மூட்டுவாதமாக இருந்தாலும் சரி,இடுப்பு வாதமாக இருந்தாலும் சரி,எந்த வாதமாக இருந்தாலும் அடியோடு விரட்டக்கூடிய தன்மை வாதநாராயணாவுக்கு உண்டு. சிலருக்கு பக்கவாதம் (paralysis) மாதிரி பாதிக்கபடும். இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதனடிப்படையில் நடுக்கு வாதம் வரலாம். திடீரென்று பேச்சு வராமல்; போகலாம். பேச்சில் தெளிவு இருக்காது,இந்த மாதிரி இருக்கக்கூடிய எல்லாருக்குமே இந்த வாதநாராயணா இயற்கை கொடுத்த,நமது சித்தர்கள் கொடுத்த ஒரு அற்புதமான வரப்பிரசாதம் என்று சொல்லலாம். எனவே அதையும் தொடர்ந்து விடாமல் சாப்பிடும்பொழுது அற்புதமான பலனை ஒவ்வொரு ஆணும்,பெண்ணும் பெறலாம்.

moottuvali2-4அதே போல் தலுதாலை என்றொரு மூலிகை இருக்கிறது. இந்த தலுதாலை மூலிகையை தொடர்ந்து சாப்பிடும் பொழுது கை-கால் வலியிலிருந்து, அசதியிலிருந்து, சோர்விலிருந்து, மூட்டுத்தேய்விலிருந்து, vertigo பிரச்சினையிலிருந்து அதாவது vertigo என்றால் சிலருக்கு கழுத்து எலும்பு தேய்ந்து போகும். நிறைய கம்ப்யூட்டர் பார்க்கக்கூடிய சூழல் இருக்கிறது. இந்த vertigo பிரச்சினைக்கு தொடர்ந்து விடாமல் ஆங்கில மருந்தில் painkillers-ஐ எடுக்கக்கூடிய சூழல் இருக்கிறது. இந்த vertigo பிரச்சினையையும் சரிசெய்யக்கூடியது தலுதாலை. சாதாரணமாக vertigo பிரச்சினை இருக்கிறது ஒரு சிலருக்கு சிறிதுநேரம் ஒரு பொருளை பார்த்துக்கொண்டே இருந்தால் கூட முன்னால் ஒரு ஆள் பிடித்து தள்ளுவது போல் இருக்கும்,மயக்கம் வரக்கூடிய சூழல் உண்டு,வெர்டிக்கோ அதிகமாக இருக்கக்கூடிய ஆண்களுக்கு உடலுறவில் ஈடுபடும்பொழுது அந்த நேரத்தில் தலையே சுற்றக்கூடிய சூழல் உண்டு. அவ்வாறு ஈடுபட்டு முடிந்த பிறகு படாதபாடு, தொல்லைப்படக்கூடிய ஆண்கள் நிறைய உண்டு. அந்த மாதிரி இருக்கக்கூடிய ஆண்களுக்கு அக்ரகாரம் என்றொரு வேர் உண்டு. இதனையும்,பாதாம் பருப்பையும் சமஅளவு எடுத்து தூள் செய்து சாப்பிட்டுப் பாருங்கள் வெர்டிக்கோ பிரச்சனை பத்தே நாளில் சரியாகிவிடும் என்பதை முழுக்க உணர முடியும். இந்த மருந்தை பத்து நாளுக்குப் பிறகு சாப்பிடக்கூடாதா என்று கேட்கக்கூடாது. இந்த மருந்து ஒரு உணவுப்பொருள்,பாதாம் பருப்பு,அக்ரகார வேர் இவையிரண்டையும் தொடர்ந்துகூட சாப்பிட்டுக்கொண்டு வரலாம். மிக அற்புதமான பலன் தரக்கூடிய ஒரு அற்புதமான மருந்து. கழுத்து சார்ந்த எலும்பு கோளாறு, இடுப்பு சார்ந்த எலும்பு கோளாறுக்கும் பலன் தரும். அதே நேரத்தில் உணர்வு நரம்புகளை தூண்டக்கூடிய தன்மை இந்த அக்ரகாரம் பாதாம் பருப்புக்கு உண்டு.

ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் சில மலைப் பிரதேசங்களில் எலும்பு ஒட்டி இலை என்ற மூலிகை கிடைக்கும். இது மிக அற்புதமாக கேட்கக்கூடிய மருந்து. மூட்டு சார்ந்த எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடம்பை நன்றாக வன்மைப்படுத்தி, வளப்படுத்தி, திடப்படுத்தி, உடம்பிலிருக்கும் ஒவ்வாமை, உடம்பிலிருக்கும் மற்ற விசயங்களை சரிசெய்து, எலும்புக்கு நல்ல ஊட்டமும், ஆற்றலும் கொடுக்கக்கூடிய அற்புதமான பொருள் இந்த எலும்புஒட்டி இலை. இன்றைக்கு நிறைய ஆதிவாசிகளாக இருக்கக்கூடிய பழங்குடியின மக்கள் பயன்படுத்தக்கூடிய மூட்டுவலிக்கான பொருள் எது என்று பார்த்தால் இந்த எலும்புஒட்டி இலைதான். செஞ்சி மலைக்குச் சென்றால் துவரை இலை மாதிரியே இந்த இலை கிடைக்கும். அந்த இலையை உருவி அதை மென்று சாப்பிட்டால் வளவளவென்று வெண்டைக்காய் போல் இருக்கும். அந்த இலையை தொடர்ந்து ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் சாப்பிட்டுப்பாருங்கள். எப்பேற்பட்ட மூட்டுத்தேய்மானமும் முழுமையாக சரியாகும்,அந்த அளவிற்கு அற்புதமான மருந்து. ஆனால் அது சார்ந்த ஆய்வுகளை நமது சித்தமருத்துவர்கள் மேற்கொண்டால் மிகவும் நல்லது. அது சார்ந்த ஆய்வுகளை எலும்புஒட்டி இலையிலிருந்து என்னவெல்லாம் செய்யலாம்,அதை எப்படியெல்லாம் கொண்டுவந்து மக்களுக்கு சேர்க்கலாம் என்பதை மத்தியசுகாதார துறை சார்ந்த அமைப்புகள் ஒரு ஆய்வுக்கு உட்படுத்தி அதன் பலனை கண்டறிந்து அதை மக்களுக்குக் கொடுத்தால் மிகப்பெரிய ஒரு விசயமாக இருக்கும்.

எலும்பு உடைந்திருந்தால் கூட புத்தூர் கட்டு என்று கட்டுவார்கள். இந்த எலும்புஒட்டி இலையோடு சேர்த்து உளுந்து,முட்டையின் வெள்ளைக்கரு இதையெல்லாம் சேர்த்து கட்டும்பொழுது உடைந்த எலும்புகள் கூட ஒட்டக்கூடிய ஒரு தன்மை உண்டு. இதை நான் நேரடியாக கள ஆய்வுகளில் சென்று பார்த்து இருக்கிறேன். மிக அற்புதமாக செய்கிறார்கள். புத்தூர் கட்டு தைலம், புத்தூர் தைலம், இது எல்லாவற்றுக்கும் மூலப்பொருள் எதுவென்றால் இந்த எலும்புஒட்டி இலை. ஆக இந்த எலும்பு ஒட்டிஇலையை அரைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு காலை மற்றும் இரவு வேளைகளில் தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது மூட்டுவலி சார்ந்த பிரச்சினைகள் எல்லாமே சரியாகும். ஆக உணவை வைத்து மறுபடியும் உடலை உறுதிப்படுத்துகிற பொழுது கண்டிப்பாக ஒரு நோய் போய்விட்டபொழுது என்றால் அது மறுபடியும் வருவதற்கு எந்தவித வாய்ப்பும் முகாந்திரமும் கிடையாது. மூட்டுவலியும் அப்படித்தான். கழுத்து வலி போய் திருகு வலி வருகிறது என்பார்கள் அதுபோல மூட்டுவலியை Pain Killers கொண்டு விரட்டுவதால் ஒரு வலி போய் இன்னொரு வலி வரும். ஆக அங்கே வலிகள் அடைக்கப்படுவதில்லை. எனவே அவையெல்லாம் இல்லாமல் நல்ல தரமான உணவுகள், சித்தர்கள் மூலிகைகளாகச் சொன்ன சில மூலிகைகளை மருந்தாக மாற்றி தொடர்ந்து சாப்பிடும்பொழுது எப்பேற்பட்ட மூட்டுவலியையும் முழுமையாக விரட்ட முடியும்.

moottuvali2-7இன்றைக்கு இருக்கக்கூடிய தென் தமிழகத்தில் அதாவது நாகர்கோவில் போன்ற இடங்களில் காயத்ரிமேனி எண்ணெய் என்று ஒரு எண்ணெய் உண்டு. இந்த எண்ணெயை ஒவ்வொரு வீடுகளிலுமே செய்த காலமாக அன்று இருந்தது. இன்றைக்கும் பார்த்தீர்கள் என்றால் இந்த காயத்ரிமேனி,நொச்சி,பேய்புரள் இப்படி ஏகப்பட்ட கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட பொருட்களை சேர்த்து அந்த காயத்ரி மேனி எண்ணெயை செய்வார்கள். அதே எண்ணெயை உள்ளே குடிக்கலாம் வலி போகும். அதே எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்க்கலாம் வலி போகும். அப்பயெல்லாம் மிக அற்புதமான நிவாரணப் பொருட்கள்,மிக அற்புதமான நிவாரணம் தரக்கூடிய மருந்துகள்,உணவுகள் எல்லாமே நம்முடைய சித்த மருத்துவத்தில் உண்டு. ஆக சித்தமருத்துவத்தில் இருக்கக்கூடிய உணவுகளையும் மருந்துகளையும் ஒரே சீராய் விடாமல் முழுமுயற்சியோடு பயன்படுத்தி வந்தால் மூட்டுவலியை ஓட ஓட முழுமையாய் விரட்டலாம்.

நன்றி

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா

எண்: 155, 94  வது தெரு,

15 வது செக்டார், கே.கே.நகர்,

சென்னை – 78

அலை பேசி: 98840 76667


சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மூட்டுவலி பிரச்சினைக்குத் தீர்வு- இறுதி பகுதி”

அதிகம் படித்தது