கனவுகளும், கற்பனைகளும் (கவிதை)
ராஜ் குணநாயகம்Nov 20, 2021
கனவுகளையும்
கற்பனைகளையும்
தடைகள், வேலிகள் போட்டு
தடுத்து விடவேண்டாம்
அவை பிரபஞ்சங்கள் தாண்டியும்
வியாபிக்கட்டும்.
அதன் சிறகுகளை ஒடித்து
கூண்டுக்குள் அடைத்து விடவேண்டாம்
அவை சுதந்திரமாய் எல்லைகள் தாண்டி
சிறகடித்து பறக்கட்டும்.
கஞ்சத்தனத்தால் அடக்கிட வேண்டாம்
அவை பிரவாகித்து பரந்து விரியட்டும்.
அவை-
புதிய உலகம் ஒன்றை
உருவாக்கிவிட தூண்டுதலாய் அமைந்திடலாம்.
புத்தம்புதிய சிந்தனைகள்
பிறந்திட வழிசெய்யலாம்.
இதுவரை நீங்களே அறியாத
தனித்துவமான உங்களை
அடையாளம் காணலாம், அடையாளப்படுத்தலாம்.
ஈழன்.
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கனவுகளும், கற்பனைகளும் (கவிதை)”