வாழ்க்கை டிஜே
ஆச்சாரிSep 14, 2012
பென்னி தயாலின் முதல் தமிழ் தனி கோப்பான(album) இது சார்லஸ் பாஸ்கர் மற்றும் பென்னி தயாலால் இசை அமைக்கப்பட்டு, கிறிஸ்டோபர் பிரதீப்பின் வரிகளில் மெருகூட்டப்பட்டு வாழ்க்கை என்ற பெயரில் தமிழ்பாப் பாடலாக உருவெடுத்திருக்கிறது. இதில் அனைத்து பாடல்களும் பென்னி தாயாலின் பலபரிமாண குரலிலே ஒலிக்கின்றன.
மேலும் இக்கோப்பில் பல விதமான இசை கூறுகளை பரிசார்த்த முறையில் கையாண்டுள்ளனர் அவை நன்றாகவும் அமையபெற்றிருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. அதிலும் இதில் கையாண்டிருக்கும் ஒலிக்கும் யுத்தி(Stereo effect) குறிப்பிடத்தக்க ஈர்ப்பை கொண்டுள்ளது.
இடி தாங்கும் நெஞ்சம் – என்ற வாழக்கையை இயல்பான கண்ணோட்டத்தில் பார்க்கும் நோக்கில் அமைந்த வரிகளை கொண்ட இப்பாடல்<energetic> பென்னிதயாலின் இளமை துள்ளும் குரலில் பாடல் ரசிக்க வைக்கிறது மேலும் கேட்க கேட்க பிடித்துவிடும் ரகம். [ஒலிக்கும் நேரம்: 3.18]
நெனைச்சுட்டா சிந்திச்சிட்டா- எனும் இப்பாடல் மென்மையான முறையில் வாழ்க்கை மேல் பழி போடாதே என்று பறைசாற்றுகிறது. பாப் மர்லி(bob marley)யின் பாடலை நினைவூட்டும் வகையில் அமைத்திருந்தாலும் பிரதீப் பின் வரிகளால் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது இப்பாடல். [4.06]
ஊரென்ன பேரென்ன – என்று பென்னிதயாலின் குரலுடன் கூடிய தோல்வகை கருவிகளின்(percussions) சங்கமத்தில் புத்துணர்ச்சிமிக்க குத்துப் பாடலாகவே அமைந்திருக்கிறது. [3.58]
புது நிலவரமோ- என்னும் ரம்மியமான இசையில் அமைந்திருக்கும் இப்பாடல் முதல் காதலின் அனுபவத்தை கூறும் பாடலாக இனிக்கிறது பென்னி யின் குரலில். இக்கோப்பின் சிறந்த பாடல் என்று கூட கூறலாம் இசை, வரிகள், முனகல்(hum) என அனைத்தும் அற்புதம். [4.26]
சுவாசமும் நீயே – என்று நம் தாயகத்தின் பெருமையை ஒலிக்கும் பாடலாக வெஸ்டர்ன் மெல்லிசையில் அனைவரும் ரசிக்கப்படும்வகையில் அமைந்திருக்கிறது. [3.06]
ஏ வா இங்கே – இசைகலவை(music(dj) mix) அதிகம் கொண்ட இப்பாடலில் வரிகளைவிட இசை உரக்க ஒலிக்கிறது. பார்ட்டி ரக இசை என்று பார்த்தால் இது நன்றாகவே இருக்கின்றது. ஆனால் பாடலாக பார்த்தால் அவ்வளவு குறிப்பிடத்தக்க வகையில் இது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். [4.05]
தமிழில் தனி கோப்புக்கள் வருவதே அரிது அதிலும் வாழ்க்கை டிஜே போன்று நல்ல பல கலவையான கோப்புகள் வருவது அதைவிட அரிது. அந்த வகையில் இந்த வாழ்க்கை (டிஜே) ரசிக்கத்தக்கதே.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாழ்க்கை டிஜே”