மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பொறியியல் துறை வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரும் NDT கல்வி

ஆச்சாரி

Oct 15, 2012

நம் நாட்டில் தற்பொழுது வேலைகளின் தேவை என்பது அதிகரித்துக்கொண்டே உள்ளது,படித்து முடித்து விட்டு வேலை கிடைக்கவில்லையே இனி என்ன செய்வது என்று அறியாமல் இருக்கும் மாணவருக்கு இக்கட்டுரை ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

NDT (Non Destructive Testing) எனப்படும் பரிசோதனை சார்ந்த இப்படிப்பில் மொத்தம் மூன்று நிலைகள் உள்ளன, இதில் முதல் இரண்டு நிலைகளை முடித்தாலே வேலை வாய்ப்பிற்கு போதுமானதாகும்.

இப்படிப்பில் மொத்தம் இருபத்திரண்டு பிரிவுகள் உள்ளன. அவற்றில் பதினொன்று பிரிவுகள் முக்கியத்துவம் கொண்டவை, அதிலும் தற்பொழுது இருக்கும் பெரும்பாலான தொழில்நிலையங்களில் நான்கு பிரிவுகளைத்தான் அதிகம் உபயோகப்படுத்துகின்றனர், அவை முறையே :UT-Ultrasonic Testing, MT-Magnetic Testing, RT-Radiographic Testing மற்றும் PT-Penetrant Testing ஆகும்.

D.M.E, B.E/B.Tech இயந்திரவியல் (Mechanical) மற்றும் அறிவியல் பட்டதாரிகள் இப்படிப்பை படிக்க தகுதியானவர்கள் ஆவர். இப்படிப்பின் மூலம் வேலைவாய்ப்பு தரும் துறைகள்: Oil & Natural Gas, Power Plant, Ship Building, Automobiles, Aeronautical மற்றும் Steel Plants ஆகும்.

வேலைவாய்ப்பு என்பது இந்திய மற்றும் வெளிநாடுகளில் சிறப்பாக உள்ளது, குறிப்பாக வளைகுடா நாடுகள்  எனப்படும் துபாய், சவுதி அரேபியா,குவைத்,பஹ்ரைன்,மற்றும் ஆஸ்திரேலியா என பல நாடுகளில் இப்படிப்பு முடித்தவர்களின் தேவை அதிகமாக உள்ளது. NDT முடித்தவர்கள் தொழிற்சாலையில் தரக்கட்டுப்பாடு பிரிவில் தரம் உயர்த்து பொறியாளர் (Quality Engineer) அல்லது தரம் உயர்த்து நிபுணர் (Quality Professional) ஆக இருக்கின்றனர்.

தரக்கட்டுப்பாடு துறை என்பது Quality Assurance (QA) மற்றும் Quality Control (QC) என இரு பிரிவாக உள்ளது. இதில் Quality Assurance (QA) என்பது Corporate Level எனப்படுவது. இதில், Quality Policy பின்பற்றுவது, நிறுவனத்தின்  நடைமுறை எப்படி இருக்கவேண்டும் என்று ஆய்வு செய்வது, ISO பின்பற்றுவது முதலியவை அடங்கும். தரக்கட்டுப்பாட்டுத் துறையில் வேலைகள் மொத்தம் மூன்று உட்பிரிவுகள் உள்ளன Receiving Inspection, Process Inspection, மற்றும் Final Inspection ஆகும். இந்த மூன்று துறைகளிலுமே இப்படிப்பை முடித்து வேலை செய்யலாம்.

இத்துறையில் பணிபுரிபவற்கு நல்ல ஊதியம் வெளிநாட்டில் கிடைப்பதால் இது ஒரு சிறந்த துறையாகவே கருதப்படுகிறது. இதில்  இரண்டு அல்லது மூன்று ஆண்டு அனுபவத்திற்கு பின்னர்  ஒரு லட்சம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

மேலே கூறியுள்ள அனைத்து தகவல்களும் திரு.உமா சங்கர், SDLINC பயிற்சி நிறுவன உரிமையாளர் அவர்களிடம் சிறகு சார்பாக நேர்காணல் எடுக்கும் பொழுது கூறியவை.
இந்த பயிற்சி நிறுவனத்தில் Non Destructive Testing (NDT) Certified By (ASNT-American Society of Non Destructive Testing), QA, QC, Welding Inspector Certified By (American Welding Society) மற்றும் (British-CSWIP), Nebosh-(Safety Course), Nace-(Painting Inspector), 6sigma போன்ற பயிற்சிகள் தரப்படுகின்றன. மற்றும் Diploma in Quality Engineering என்ற ஒரு வருட பட்டயப் படிப்பும் உள்ளது.

இந் நிறுவனமானது சென்னையில் உள்ள Dr.M.G.R பல்கலைக்கழகத்துடன் இப்பயிற்சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்(M.O.U) செய்துள்ளது.

இதுவரை இந்நிறுவனத்தின் மூலம் சுமார் நூற்றைம்பது பேருக்கும் மேற்பட்டோருக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளனர். இந்நிறுவனம் சம்மந்தமாக உங்களுக்கு ஏதேனும் தகவல்கள் தேவைப்படின் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரி மற்றும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

SRI DURGHA LAKSHMI INC, (SDLINC)

20A, மூப்பனார் நகர்,

ஐந்தாவது தெரு,

சென்னை – 21

(குறிப்பு: தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகில்)

தொலைபேசி எண் : 9600162099,

மின்அஞ்சல் : sdlincndt@gmail.com

இணையதள முகவரி : www.sdlinc.co.cc

Revise each pair twice, combining them into a cheap writing service for essaysheaven.com/ single sentence to make an effective qualification

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “பொறியியல் துறை வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரும் NDT கல்வி”
  1. m.sikkandar badusha says:

    நான் இந்த துறையில் சேர விரும்புகிறோன். நான் 2-ம் ஆண்டு DME படித்து வருகிறோன். ஆகையால் ஒரு வருடத்திருக்கு எவ்வளவு தொகை ஆகும்? Plz

அதிகம் படித்தது