நகைச்சுவை பகுதி – 1
ஆச்சாரிJan 1, 2013
அவன்: மாப்ள.. நேத்து நீயும் நானும் அமெரிக்காவ சுத்திப் பாக்குற மாதிரி கனவு கண்டேன் டா.
இவன்: ஆ… அப்படியா? எங்கெல்லாம் போனோம்?
அவன்: ங்கொய்யால, நீயும் தான கூட வந்த..
இவன்: ஆ…! ! !
*********************************************************************************************************************
அப்பா: (கோபமாக) அடியே.. எம்பையில நூறு ரூவா வச்சிருந்தேன்.
இப்ப காசே இல்ல..
அம்மா: க்கும்.. நீங்க தானே நம்ம புள்ளகிட்ட நூத்துக்கு நூறு எடுன்னு சொன்னீங்க?
********************************************************************************************************************
அவன்: டேய்.. நேத்து தான் நான் பிளாக் பெல்ட் வாங்கினேன் .
இவன்: அப்படியா! நீ காராத்தே கத்துக்கிறத சொல்லவே இல்லையேடா?
அவன்: டேய் . . பேன்ட் லூசா இருந்துச்சுன்னு பெல்ட் வாங்குனேன்டா
*********************************************************************************************************************
தொண்டன்: தலைவரே! நம்ம பேச்சு பிடிக்காம மக்கள்லாம் செருப்பெடுத்து எறியிறாங்க வாங்க ஓடிடலாம்.
தலைவன்: இருப்பா.. எனக்கு ஒரு செருப்பு தான் கெடச்சிருக்கு.
********************************************************************************************************************
அவன்: நான் நீச்சல் கத்துக்கிறேன்டா
இவன்: எங்க?
அவன்: தண்ணீல தான்.
***********************************************************************
அப்பா: டேய்.. ஓட்ட பந்தயத்துல ஏண்டா தோத்த?
மகன்: போப்பா.. எனக்கு பயந்துகிட்டு எல்லாரும் முன்னாடி ஓடிட்டானுக.
****************************************************************************************************************************
-வள்ளி நாயகம்
செய்தி: பெண்களுக்கு எதிரான குற்றங்களை எப்போதும் ஏற்றுக்கொள்வதோ அல்லது மன்னிப்பதோ கூடாது -பான் கீன் மூன்
கருத்து கந்தசாமி: ஏம்பா… இவரு விடுற அறிக்கையப் பாத்தா இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு தயார் ஆகுறார் போல. அப்படி இவர் தேர்தல்ல நின்னா கண்டிப்பா சின்னம், இலங்கையோட புத்த பரி நிர்வாண ப்ராதியாத்தான் இருக்கும். மக்களே நல்லா கேட்டுக்குங்க, இந்தப் பழி பாவத்துக்கெல்லாம் நான் ஆளாக மாட்டேன்.
*********************************************************************************************************************
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நகைச்சுவை பகுதி – 1”