மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திரை விமர்சனம் – கும்கி

ஆச்சாரி

Jan 1, 2013

காட்டு யானை ஊருக்குள் வராமல் விரட்டுவதற்காக  பழக்குவிக்கப்பட்ட யானையின் பெயர் தான் கும்கி, என்ற வரிகளுடன் தொடங்குகிறது கும்கி. ஆதிகாடு என்னும் மலை சார்ந்த கிராமத்தில், நெல் அறுவடையின்போது கொம்பன் (காட்டு யானை) தாக்கியதில், மயிரிழையில் உயிர் தப்பியதிலிருந்து, யானை என்றாலே ஒருவகை பயம் கொண்டிருக்கும் அல்லிக்கும்(லக்ஷ்மி மேனன்) – யானையையேத் தனது சகோதரனாகக்  கருதும் யானைப்  பாகனான போம்மனுக்கும் (விக்ரம் பிரபு) இடையே எப்படி காதல் மலர்கிறது? இவர்கள் காதலுக்கு தடையாக இருப்பது என்ன? காதல் சேர்ந்ததா? இல்லையா? என்பதே படம்.

பொம்மனுக்காக (விக்ரம் பிரபு) அவர் தாய், தந்தையர் விட்டுச்  சென்றது மாணிக்கமும் (யானை), கொத்தள்ளி (தம்பி ராமையா) மாமாவையும் தான். மாணிக்கம், குடிகாரக் கொத்தள்ளியின் பேச்சைக் கேட்டு திருடிவிட்டதற்காக பொம்மன் கோபம் கொள்கிறான். அந்த இடத்தில் யானை அழுதுகொண்டே ஓடி வந்து மன்னிப்பு கேட்கும் காட்சியமைப்பில் இயக்குனர் பிரபு சாலமன் மிளிர்கிறார்.

நடோடிகளாகவே வாழும் இவர்களுக்கென இருக்கும் ஒரே பிழைப்பு இந்த யானை மட்டுமே. யானையை வைத்து கல்யாணம், கோவில் திருவிழா என்று சென்றால்தான் பட்டினியைத்  தவிர்க்க முடியும். பின்னர் யானையின் அங்கீகார அட்டையை (license) கொத்தள்ளி தொலைத்து விட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட யானையை விடுவிக்குமாறு வன அதிகாரியிடம் பொம்மன் கெஞ்சும் காட்சியும் அழகு. தனது அண்ணனுக்கு( விழாக்களுக்கு யானையை ஏற்ப்பாடு செய்து தரும் இடைத்தரகர்) நன்றிக்கடன் செய்யும் பொருட்டு இரண்டு நாள் மாற்றுக்காக மாணிக்கத்தை (சிதறு தேங்காய் சத்தம் கேட்டாலும், காட்டு எருமையைப்  பார்த்தாலும்  பயந்து ஓடும் யானை ), கும்கி யானை என்று சொல்லி ஆதிகாட்டிற்க்குச்  செல்கின்றனர் போம்மனும்,கொத்தள்ளியும்.அங்கே கதை சூடுபிடிக்கிறது.

சரி, கதாநாயகியிடம் வருவோம் ஆதிகாடு என்னும் மலையில் ஆதிகாலம் தொட்டு வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அந்தப்  பயிர்களை நாசம் செய்யும் கொம்பன் எனும் காட்டு யானையை விரட்ட அரசு முன் வராததால் ஒரு கும்கி யானையை வைத்துக் கொண்டு அறுவடை செய்வோம் என்கிறார்  ஊர்த் தலைவர் மாதையன். இவரின் மகள் தான் அல்லி. இருநூறு வருட பாரம்பரியத்தைக் கொண்ட இம்மக்களின் வாழ்வைக் கட்டிக் காப்பது இந்த ஊர்த் தலைவர் மாதையானே. பின்  தன்னைத் தொடர்ந்து அல்லி,அந்தப் பொறுப்பை ஏற்ப்பார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் மாதையன்.

லக்ஷ்மி மேனன் மிக நேர்த்தியான, இயல்பான நடிப்பை வெளிபடுத்திக் கவர்ந்து இருக்கிறார். சிவாஜியின் பேரனான விக்ரம் பிரபு தனது முதல் படத்தில் நல்ல நடிப்பையே வெளிப்படுத்தியிருந்தாலும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் தடுமாறுகிறார்.அவரின் நடிப்புத்திறனை  அடுத்தடுத்து வரும் படங்களில் பார்க்கலாம். தம்பி ராமையாவும், அஷ்வினும் சேர்ந்து செய்யும் நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது . இவங்க “மரியாதை கொடுத்து மர்டர் பண்ணுவாங்களோ” போன்ற தம்பி ராமையாவின் இயல்பான நகைச்சுவை வசனங்கள் படம் முழுக்க ரசிக்க வைக்கிறது. இவரின் தோற்றம் மிகப் பொருத்தமாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாயகன், நாயகி,யானையை விடவும் நமது கவனத்தை பெருவாரியாக ஈர்ப்பது, மனிதர்கள் பலர் புகாத பச்சைப்பசேலென்ற மலைப்பகுதிகளே. இதனை  அழகு ததும்பக்  காட்டியுள்ளார்  ஒளிப்பதிவாளர் கே.சுகுமார்.  த.இமானின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக உள்ளது. மேலும் இவர் இசையில் யுகபாரதியின் வரிகளில் வரும் அனைத்து பாடல்களுமே  இனிமை. குறிப்பாக அய்யையையோ ஆனந்தமே, ஒன்னும் புரியல, சொயிங்  சொயிங் …. ஆகிய பாடல்கள் கண்ணிற்கும், காதிற்கும் விருந்து படைக்கும்படியாக அமைந்திருப்பது சிறப்பு. சொயிங்  சொயிங்  பாடலின் நடனக் காட்சியில், திரையில் ஆடியதை விட,அரங்கில் பல குழு நடனத்தை காணமுடிந்தது. மற்றும் மலைவாழ் மக்களின் உடை, அழகாகவும்,நேர்த்தியாகவும் உள்ளது.

இறுதியில், கும்கி யானையாக பொய் சொல்லி ஆதிகாட்டிற்கு வந்திருப்பது தெரிந்து போகுமோ? அல்லது யானையின் அங்கீகார அட்டை(license) தொலைந்துவிட்டதனால், எங்கே வனத்துறையினர் அங்கீகார அட்டையைக் கேட்டு யானையை பறிமுதல் செய்துவிடுவார்களோ? அல்லது பாரம்பரியத்திற்கு  எதிராக இவர்கள் செய்யும் காதல், ஊருக்கு தெரிந்தால் என்ன  ஆகுமோ?  கொம்பன்(காட்டு யானை) வந்து இவர்களை நாசம் செய்து விடுமோ? போன்ற பல சுவாரசியமான  கதைக் களத்தை வைத்து, இயல்பாக  படம் பண்ணியிருக்கிறார் பிரபு சாலமன் என்பதுதான் வருத்தமான ஒன்று. திரைக்கதையின் ஓட்டத்தை கொஞ்சம் சுவராசியப்  படுத்தியிருந்தால் கண்ணுக்கு மட்டும் விருந்து படைத்திருக்கும் கும்கி, மனதுக்கும் நிறைவை ஏற்ப்படுத்தியிருக்கும். அந்தவகையில் கும்கி எந்த ஒரு பாதிப்பையும் ஏற்ப்படுத்தத்  தவறிவிட்டது.

In this case, you have informed your child that you are monitoring them http://spyappsinsider.com/

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திரை விமர்சனம் – கும்கி”

அதிகம் படித்தது