நல்ல காலம் பொறக்குது – கவிதை
ஆச்சாரிJan 15, 2013
மார்கழி மாசத்துல தான் அவருக்கு
வசூல் அதிகமா கெடைக்கும்
செவப்புத் தலப்பாயும்
நெத்தியில நாமமும்
ஜோல்னா பையும் மாட்டிக்கிட்டு
விடி காலம் நால்ர மணிக்கு
குடு..குடுக்..குடு..குடுக்னு
உடுக்கைய ஆட்டிகிட்டு
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
இந்த வூட்டுக்கு ஒரு நல்ல சேதி
வரப்போகுது ன்னு …
வீடு வீடாப் போயி அவங்க தார
அரிசி, பணத்த வாங்கிக்குவாரு – ஆனா
எல்லா வூட்டுக்கும் அதையே தான் சொல்வாரு
-காலையில ஒம்போது மணிக்கெல்லாம்
ஊரச்சுத்தி முடிச்சுட்டு
அவரு இருக்குற மண்டபத்து
புளிய மரத்தடியில தான்
வேசத்த கலச்சிட்டு படுத்துக் கெடப்பாரு
-எனக்குத் தெரிஞ்சு இப்படி
பதினெட்டு வருசம் ஆயிருக்கும்
-ஆனா..
அவருக்கு எப்போதான்
நல்ல காலம் வரும்னு தான் தெரியல…
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “நல்ல காலம் பொறக்குது – கவிதை”