மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வேலி காத்தான் மரம் – கவிதை

ஆச்சாரி

Jan 15, 2013

-யாருமே தண்ணியே ஊத்தாம

எங்க ஊரச் சுத்தி

வெயில் காலத்தில கூட

பச்சப் பசேல்னு வளருது

வேலிக்காத்தான் மரம்

-பள்ளிக் கூடம் லீவு வுட்டா

எல்லாரும் அதுமேல தான் ஏறி

வண்டி ஓட்டுவோம்

பனங்காய் வண்டியும்..

அதுல தான் செய்வோம்

-முனிம்மா ஆயா மாட்டை

அதுல தான் கட்டுவோம்

அடுப்பெரிக்க எல்லாப் பொம்பளைகளும்

அதத்தான் வெறகா  வெட்டியாருவாங்க.

-உண்மையாவே

எங்க ஊருக்காரங்களுக்கு

இன்னமும் தெரியாது

வெள்ளைக்காரன் போட்ட வெதன்னோ . . .

நிலத்தடி நீர உறிஞ்சும்னோ. . .

Many curricula fail to support learning with understanding because they present too many justbuyessay.com/ disconnected facts in too short a timethe mile wide, inch deep problem

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வேலி காத்தான் மரம் – கவிதை”

அதிகம் படித்தது