நம்பிக்கை – சிறுகதை
ஆச்சாரிJan 15, 2013
கல்லூரியில் இருந்து எப்பொழுதும் நேரத்தோடு வீட்டிற்கு வரும் கவிதா, அன்று வழக்கத்திற்கு மாறாகச் சற்றுத் தாமதமாக வீட்டிற்கு வந்தாள். தன் வீட்டிற்க்குள் நுழையும் போது, உள்ளே பக்கத்து வீட்டு கணபதி மாமாவின் குரலைக் கேட்டதும் அவளின் கால்கள் தன் வீட்டிற்க்குள் செல்லாமல் பின்வாங்கின. உள்ளே என்ன பேசுகிறார்கள் என வெளியே நின்று கவனிக்கலானாள் கவிதா.
கணபதி மாமா கவிதாவின் அம்மா செல்லம்மாளிடம் சொன்னார் “ இங்க பாரும்மா, அப்பா இல்லாத பொண்ணுன்னு நீ ஓம் மகளுக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து வளக்கிற ஆனா ஓம் மக போக்கு சரியில்ல, கொஞ்சம் கண்டிச்சு வையி புரியிதா செல்லம்மா “ என்னன்னே சொல்றீங்க? எனக்கொன்னும் புரியல. கொஞ்சம் வெவரமா சொல்லுங்க. சொல்றன் ஓம் மவ காலேசுக்குப் போறேன்னு சொல்லிட்டு எவன், எவன் கூடவோ சுத்துறா. அவ்வளவு ஏன் இன்னிக்குக் கூட பஸ் ஸ்டாப்ல ஒரு பையனோட கைய புடிச்சுகிட்டு, கொஞ்சம் கூட கூச்சமில்லாம நடந்து போறா! எனக்குப் பாக்க என்னவோ போல இருந்தது. இது இன்னிக்கு மட்டும் இல்லம்மா. ஓம் பொண்ண நான் பல முற அந்தப் பையனோட கைய பிடிச்சிப் போறதப் பாத்திருக்கேன். நாளைக்கு காதலு, கருமாந்திரம்னு ஏதும் வந்துட்டா அது ஒனக்குத் தான் கேவலம்.
நான் சொல்றதச் சொல்லிட்டேன் அப்புறம் உன் விருப்பம். என அவர் வந்த வேலை முடித்து வாசலில் தலை குனிந்து வெளியே செல்லும் போது செல்லமா சொன்னாள் “அண்ணே! கவிதா அவளோட படிக்கிற பசங்களுக்கு உதவி செய்றத தன்னோட கடமையா நெனப்பா. அப்படி இருக்கிற எம் மவ தப்பு பண்ண மாட்டான்னு நான் நம்புறேன். இத நான் பாத்துக்கிறேன்னா நீங்க போங்க, என்றதும் வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த கணபதி மனதிற்குள் “ க்கும் நீங்கெல்லாம் பட்டாத்தான் புத்தி வரும்” நல்ல ஆத்தா, நல்ல மவ. என புலம்பிக்கொண்டே வெளியே நின்ற கவிதாவைப் பார்த்து தலை குனிந்து சென்றார்.
கவிதா தயங்கியவாறு வீட்டிற்க்குள் வந்து, தன் அம்மாவின் கைகளைப் பிடித்து தழு தழுத்த குரலில் கூறலானாள் “அம்மா என் கூடப் படிக்கிற வேலுன்ற பையனுக்கு ரெண்டு கண்ணும் தெரியாது. இன்னிக்கு அவன் தெரியாம பள்ளத்துல விழுந்து கால ஒடச்சிகிட்டு நடக்கவே கஷ்டப் பட்டான். அவன நான் தான் கைத்தாங்களா கூட்டிட்டுப் போய் அவன் வீட்ல விட்டுட்டு வர கொஞ்சம் லேட்டாகிடுச்சு; என அம்மாவிடம் கூறிய கவிதாவின் கண்ணில் ஏனோ நீர் கோர்த்து நின்றது.
அழுதவளைப் பார்த்து செல்லம்மா கேட்டாள் “எதுக்குமா அழுவுற சின்னப்புள்ள மாதிரி? கவிதா சொன்னாள் “ இல்லம்மா அப்பா இல்லன்ற குறையே தெரியாம ஆம்புளப் புள்ள மாதிரி என்ன வளத்த. எம்மேல எவ்ளோ நம்பிக்க வசிருக்கீங்கரத கணபதி மாமாகிட்ட நீங்க சொன்னப்ப தான் தெரிஞ்சிது. அத நெனைச்சுதான்..ம்..ம்” என அழுவதைப் கண்டு செல்லம்மா சொன்னால் “சரி டா சரி டா அழாத” என கவிதாவை அணைத்துக்கொண்டு “ஊரு ஆயிரம் சொன்னாலும் எம் புள்ளையப் பத்தி எனக்குத் தெரியாதா…? போ.. போய் மொகத்த அலம்பிட்டு வா அம்மா ஒனக்கு சூடா டீ போட்டுத்தாறேன்” எனக் கூறி சமையலறைக்குள் சென்றாள்.
கவிதா முகத்தை கழுவி திரும்பியதும் டீ யை நீட்டினாள் செல்லம்மா. அதைப் பைவ்யமாக வாங்கி கவிதா குடித்தாள். டீ சூட்டோடு அம்மாவின் நம்பிக்கையையும் கடைசி வரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும் சூடாக இறங்கியது கவிதாவின் உடலுக்குள்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
very nice story
KEEP GOING MAM … U DO AWESOME WORK… !!
REALLY AWESOME STORY.. !!! I LIKE IT…
Nice and meaningful story
-gowki
super this type of story we need it……….keep up the good work….
beautiful and nice story with full of twist
beautiful story….
nice story. continue writing. GUNA
ரொம்ப அழகான கதை!!!!!! மிகவும் ரசித்து படித்தென்!!!!!!!!!!