மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சித்த மருத்துவம்

ஆச்சாரி

Mar 15, 2013

             1.            காய்ச்சல் தீர:

                                                நார்த்தங்காய்  இலைகளை நன்றாக வேக வைத்து, அந்நீரைக் கசாயம் செய்து குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும்.

                2.            இளம் நரை மறைய:

                                                நெல்லி வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய்,  நெல்லிக்காய் இவைகளை இளமையில் நரை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் விரைவில் இளநரை மறையும் கருமுடி வளரும்..

                3.            ஞாபக சக்திக்கும், பல் உறுதிக்கும்:

                                                தினமும் ஒரு மாதுளம்பழத்தை சாப்பிட்டோ, அல்லது மூன்று வேளை உணவுகளிலும் கொஞ்சம் மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி பெருகும், எலும்பு உறுதிப்படும்,  பற்கள் உறுதிப்படும்.

                4.            பேன் அழிய:

                                                மலை வேம்பு மர இலையை நன்கு அரைத்து இருவேளை தலையில் பூசி குளித்து வர பேன் ஒழியும்.

                5.            கொழுப்பு குறைய:

                                                தினமும் நாம் உண்ணும் உணவில் பூண்டு, வெங்காயம்  (சிறியது, பெரியது) அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் தேவையற்ற கொழுப்பு                குறையும்.

                6.            ஜீரண சக்திக்கு:

                                                உணவில் நார்த்தங்காய் ஊறுகாய் சேர்த்து உண்டு வர, மலச்சிக்கல் தீர்ந்து நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.

                7.            வாய்ப்புண் குணமாக:

                                                மணத்தக்காளிக்கீரை,  அகத்திக்கீரை என்ற இவ்விரு கீரைகளையும் நன்கு சமைத்து சாப்பிட்டு வந்தால் இரண்டு நாளில் வாய்ப்புண் தீரும்.

                8.            மூக்கடைப்பு நீங்க:

                                                புதிதாய் மலர்ந்த புத்தம் புது ரோஜாப் பூவை நன்கு முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

                9.            வேர்க்குரு சரியாக:

                                                பப்பாளிக்காய் பாலை,  வெங்காயச் சாறுடன் கலந்து வேர்க்குரு உள்ள இடத்தில் தடவி வந்தால் வேர்க்குரு குணமாகும்.

                10.          நெஞ்சுவலி நீங்க:

                                                சுத்தமான தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து, இதை நன்கு சுட வைத்த பின் கொஞ்சம் ஆறிய மிதமான சூட்டில் உள்ள இக்கலவையை நெஞ்சில் தடவினால்  நெஞ்சுவலி குணமாகும்.

                11.          வயிற்றுப்பூச்சி ஒழிய:

                                                உணவில் தினமும் அன்னாசிப் பழம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சித் தொல்லை ஒழியும்.

                12.          பல் உறுதி பெற:

                                                மாமரத்திலுள்ள மா இலையைக் காய வைத்து, நன்கு பொடியாக்கிய பின்,  இத்தூளைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பல் உறுதி பெறும்.

That condition prevails when the student investigator has produced an excellent custom essays writing service study, fulfilled the promises made in the proposal, worked closely with advisors, and communicated fully with chapter committee members

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சித்த மருத்துவம்”

அதிகம் படித்தது