நகைச்சுவை
ஆச்சாரிMar 14, 2013
பயணி : ஏய் ஆட்டோ கோயம்பேடு எவ்வளவு?
ஆட்டோ ஓட்டுனர் : ம்….. அத ஆட்டோகிட்டியே கேளு
——————————————————————————————————————
வந்தவர் : இந்தாப்பா…. ஒரு சூட்கேஸ் கொடு
கடைக்காரர் : அலோ சார் வெத்தல பாக்கு கடையில வந்து
சூட்கேஸ் கேக்குறீங்களே
வந்தவர் : மிஸ்டர், இது பெட்டிக்கட தானே
—————————————————————————————————————————————————-
அவன் : டேய்… நேத்து ஒரு ஓட்டல்ல சாப்பிட்டு முடிச்சிட்டுப்
பாக்குறேன் கைல காசே இல்ல.
இவன் : அடடா…. அப்புறம் என்னடா பண்ண
அவன் : அப்புறமென்ன பாக்கெட்டுல இருந்து எடுத்துக்
கொடுத்திட்டேன்.
—————————————————————————————————————————————————
கணவன் : அலோ… யார் பேசுறது?
மனைவி : நாந்தாங்க செல்லம்மா பேசுறேன்.
கணவன் : ம்…. நாம்மட்டும் என்ன கோவமாவா பேசுறேன்?
அவன் : அழகில்லாத பொண்ணப் பாத்தா நாய் எப்படிக் குரைக்கும்?
இவன் : வவ்…. வவ்…. வவ்…. ன்னு
அவன் : அப்போ… அழகான பொண்ணப் பாத்தா?
இவன் : வாவ்…. வாவ்…. வாவ்…. ன்னு
ராமு : மாப்ள… அடிமைக்கும் கொத்தடிமைக்கும் என்னடா
வித்தியாசம்?
சோமு : டேய்…. ஒரு பொண்ண காதலிக்கும் போது நீ அடிம
அதே பொண்ண கல்யாணம் பண்ணா நீ கொத்தடிம.
——————————————————————————————————————————————————–
வில்லுப் பாட்டுக் கச்சேரியில்….
பாடுபவர் : ம்… தன்னானனே தானே னான னன்னே…மகாத்துமா காந்தி உப்ப எடுத்தார்
குழுவினர் : ஆமா உப்ப எடுத்தார், அந்த உப்ப எடுத்தார், அங்க உப்ப எடுத்தார்
அழகா உப்ப எடுத்தார், அப்படி உப்ப எடுத்தார் ,அய்யைய்யோ உப்ப எடுத்தார்.
பார்வையாளர் : (எழுந்து) யப்பா…. டேய்… காந்தி ஒரு தடவ தான் உப்ப எடுத்தாரு
நீங்க ஏண்டா இத்தன தடவ உப்ப எடுக்குறீங்க…
—————————————————————————————————————————————————
மாமன் : மாப்ள… எனக்கு ரெண்டு பசங்கய்யா…பெரியவன் டாக்டராகிட்டான்
சின்னவன் ரௌடியாகிட்டான்.
மச்சான் : அப்போ… கொலகார குடும்பம்னு சொல்லு.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
லட்டு பத்தி சொன்னது சூப்பர்