தாயும் தேவதையும்
ஆச்சாரிMar 14, 2013
ஒரு ஊர்ல ஒரு தேவதை
குழந்தை கேட்டது
தேவதைனா என்னம்மா
உன்னைப் போலவே இருக்கும்
அந்த தேவதைக்கு ரெண்டு சிறகு
சிறகுன்னா என்னம்மா
உன் கைகள் மாதிரி
வெள்ளையா ஆடை போட்டிருந்தது
வெள்ளைனா என்னம்மா
உன் பேச்சு மாதிரி
கறுப்பா நீனமான கூந்தல்
கருப்புன்னா என்னம்மா
உன் கண்கள் மாதிரி
அவள் கன்னம் ரொம்ப சிவந்திருந்தது
சிவப்புன்னா என்னம்மா
உன் உள்ளங்கை மாதிரி
தேவதை அருள் தந்தது
அருள்னா என்னம்மா
நான் உன்ன பாத்துக்குறது மாதிரி
அப்பா நீதான் தேவதையா என்றது
ஆமான்னு சொல்ல நான் தேவதையும் இல்ல
இல்லன்னு சொன்ன நான் தாயும் இல்ல
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தாயும் தேவதையும்”