மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

படியுங்கள் . . .சிரியுங்கள் . . .சிந்தியுங்கள் . . .

ஆச்சாரி

Apr 1, 2013

செய்தி:    31 அங்குலத்திற்கு நீளமான முடி காணிக்கை செலுத்தினால் 5  லட்டுகள் இலவசம்    – திருப்பதி தேவஸ்தானம்

அறிவிப்பு.

சிந்தனை: இந்த திட்டத்தால விற்காத பழைய லட்டும் போனியாகும், ரோம விற்பனையும்  நடக்கும். ஆக ஒரு கல்லுல

ரெண்டு மாங்கா.

 —————————————————————————————————————————————-

 

செய்தி:    கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட  10  செண்ட் நிலம் வழங்கப்படும் .  -மத்திய அரசு திட்டம்

சிந்தனை: க்கும்… என்னைக்கு நீங்க போட்ட திட்டமெல்லாம்  ஏழை மக்களுக்கு முழுசா போய்ச்சேந்திருக்கு.

இடைத்தரகர்கள் நிலங்களை வளச்சுப்போட ரொம்ப நல்ல வாய்ப்பு தவறவிடாதீர்.

—————————————————————————————————————————————-

 

செய்தி:    திகார் சிறையில் உச்சகட்டப் பாதுகாப்பில் இருந்த கைதிகள்  ரேஷ்மா( 30), ராம்சிங் தற்கொலை.

சிந்தனை: தற்கொலை பண்ண அன்னிக்கு காவலர்கள் எல்லாம்  காலங்காத்தால வெண்பொங்கல் சாப்பிட்டு

வந்திருப்பாங்கன்னு  நெனைக்கிறேன்.

—————————————————————————————————————————————-

 

செய்தி:    இந்தியாவில் பிரபலமான பெண்கள் பட்டியலில் சோனியாவுக்கு முதல் இடம்.

சிந்தனை:  ஒரு தாலி அறுந்ததுக்கு ஒன்னரை  லட்சம் தமிழ் பெண்களோட  தாலிய அத்த இந்தப் பிரபலத்துக்கு முதல்

இடம் கொடுத்திட  வேண்டியது தான்.

—————————————————————————————————————————————-

செய்தி:    இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடாது. -காங்கிரஸ் அறிவிப்பு.

சிந்தனை:  நீங்க வேற நாட்டுப் பிரச்சனைகள்ல இதுவர தலையிட்டதே  இல்லையா? அய்யோ சாமி … இது ஒலக மாக

நடிப்புடோவ்.

 

—————————————————————————————————————————————-

செய்தி:    மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகல்.

சிந்தனை: தமிழக மக்களே … உசாரு உசாரு…. உங்க பொன்னான ஒட்டு.

 

—————————————————————————————————————————————-

 

செய்தி:    இலங்கை அரசைக் கண்டித்து நடிகர் –நடிகைகள் ஏப்ரல்-2  உண்ணாவிரதம்.

சிந்தனை: ம்… நடிகர்-நடிகைகலெல்லாம் அன்னிக்குத்தான் கால்சீட்  ப்ரீ  போல..

 

—————————————————————————————————————————————-

 

செய்தி:    பாலியல் வழக்கில் சிக்கியவர்கள் தேர்தலில் நிற்கத் தடை.  -இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

சிந்தனை: ஏங்க…சார். இந்தப் பாலியல் வழக்குல சிக்குனவங்க மட்டும் தான்   கேட்டவங்களா? ஏன்… இந்த ஊழல் பண்றது,

அரசு எடத்த அபகரிச்சது, ஓட்டுக்கு பணம் கொடுக்கிறது, கொல பண்றது , மக்கள் திட்டத்துல வர்ர பணத்த சுருட்டுறது, ரௌடிங்க  இவங்களெல்லாம் தேர்தல் நிக்கலாம்னு உங்க சட்டம் சொல்லுதா? என்ன கொடும

சரவணன்?

—————————————————————————————————————————————-

செய்தி:    உழைத்தால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் -முன்னாள் நீதிபதி. ஏ.ஆர்.லட்சுமணன்.

சிந்தனை:  கணம் கோட்டார் அவர்களே! இதே மாதிரிதான் எங்க கிராமத்தில  எனக்கு வெவரம், தெரிஞ்சு, பல குப்பன்களும், சுப்பன்களும்  கொட்டுர மழையிலும், கொளுத்துற வெயிலிலும் கடுமையா  உழைக்கிறாங்க ஆனால் இது வரை அஞ்சு பைசா கூட மிச்சம்  இல்லாம நல்லது கெட்டதுக்கு வட்டிக்காரங்கிட்டதான் கடன்  வாங்கி வாழ்றாங்க. ஒரு வேளை நீங்க சொல்லுறது… பணக்கார  பய புள்ளைக்குத்தான்னு நினைக்குறேன்.

—————————————————————————————————————————————-

 

செய்தி:    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பைக் கொலை செய்ய  தற்கொலை படை தயார்-தலிபான் தீவிரவாதிகள்.

சிந்தனை: ம்… ஆடுனவன் காலும், பாடுனவன் வாயும் என்னைக்கு சும்மா இருந்துச்சு? போடுங்க போடுங்க போட்டுக்கிட்டே இருங்க. நீங்கள்  கேட்டுக்கொண்டிருப்பது தலிபான் எப்.எம்.

 

—————————————————————————————————————————————-

But you cant use it too often because it will lose its effectiveness if readers can predict when and how youre http://writemypaper4me.org going to use it

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “படியுங்கள் . . .சிரியுங்கள் . . .சிந்தியுங்கள் . . .”

அதிகம் படித்தது