நகைச்சுவை
ஆச்சாரிApr 1, 2013
முருகன்: டேய் செழியா! கப்பலே கவுந்தாலும் கன்னத்துல கை வைக்கக் கூடாதுடா.
செழியன்: ஏன்டா?
முருகன்: கன்னத்துல கைவச்சா அப்புறம் எப்படி நீச்சல் அடிக்கிறது.
———————————————————————————————————————————–
அவன்: சார்.. உங்க செல்போன் நல்லா இருக்கே ஏங்க வாங்குனீங்க?
இவன்: ஓட்டப்பந்தயத்துலதான்.
அவன்: எத்தன பேரு கலந்துக்கிட்டாங்க?
இவன்: இந்தப் போனுக்கு சொந்தக்காரன், போலிசு, அப்புறம் நானு.
———————————————————————————————————————————–
பாலு: ஏன்டா வேலு… ஏன் எல்லாப் பணத்துலையும் காந்தி சிரிச்சுக்கிட்டே… இருக்காரு.
வேலு: ம்…அழுதா நோட்டு நனஞ்சிடும்ல.
———————————————————————————————————————————–
மாணவன்: சார்… செய்யாத தப்புக்கு தண்டணை கொடுப்பீங்களா சார்?
ஆசிரியர்: தரமாட்டேன் ஏன்?
மாணவன்: நான் கோம் ஒர்க் செய்யல சார்.
———————————————————————————————————————————–
ஆசிரியர்: மேடம், உண்மைக்கு எதிப்பதம் என்னது கேட்டா உங்க மகனுக்கு சொல்லத் தெரியல.
அம்மா: அவனுக்கு பொய் சொல்லத் தெரியாது சார்.
————————————————————————————————————————————–
ஆசிரியர்: ராமு இங்க வா, இந்த உலக வரைபடத்துல அமெரிக்கா எங்க இருக்குன்னு கண்டுபுடி பாப்போம்.
கறுப்புச்சாமி: (உலக வரைபடத்தில் அமெரிக்காவைக் காட்டி) இந்தா இருக்கு சார்.
ஆசிரியர்: குட், இப்ப பாலா வா, அமேரிக்காவ கண்டுபிடிச்சது யார்ன்னு சொல்லு பாப்போம்.
கறுப்புச்சாமி: கறுப்புச்சாமி சார்.
———————————————————————————————————————————–
மாணவன்: சார்… பேப்பர்ல மார்க் போடும் போது எனக்கு முட்டை போடாதீங்க
ஆசிரியர்: ஏன்?
மாணவன்: எங்கப்பா ஐயப்பனுக்கு மால போட்ருக்கார்.
————————————————————————————————————————————
ஆசிரியர்: மண் அரிப்பைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
மாணவன்: மண்ணுக்கு சொரிஞ்சுவிடனும்.
————————————————————————————————————————————
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “நகைச்சுவை”