நகைச்சுவை
ஆச்சாரிApr 15, 2013
பெருமாள்: டேய் அய்யப்பா… ஆசையே துன்பத்துக்கு காரணமுன்னு நான் இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்.
அய்யப்பன்: எப்படி?
பெருமாள்: எம் பொண்டாட்டிய நான் ஆசப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணேன். ஆனா இப்போ…
அய்யப்பன்: சரிடா விடு, அழுவாத வீட்டுக்கு வீடு வாசப்படி…
————————————————————————————-
சுரேசு : டேய் ரமேசு நேத்து ராமு, கிணத்துக்குள்ள உக்காந்து படிச்சிட்டு இருந்தான். ஏன்னு சொல்லு?
ரமேசு: தெரியல நீயே சொல்லு.
சுரேசு: அவனகேட்டா சொல்றான் ” கெணத்துக்குள்ள உக்காந்து படிக்கிறதுதான் ஆழமான படிப்பாம்.
————————————————————————————-
ஆசிரியர்: ராமசாமி எந்திரி, வீட்டுப்பாடம் செஞ்சுட்டியா?
ராமசாமி: இல்லசார், நான் ஆஸ்டல் பையன்.
—————————————————————————————
மருத்துவர்: உங்க உடம்பு தேறணும்னா தினமும் ஒரு பச்சமுட்டை சாப்பிடனும் சரியா?
நோயாளி: அய்யய்யோ என்னால முடியாது டாக்டர்
மருத்துவர்: ஏன்?
நோயாளி: எங்க வீட்டுக்கோழி வெள்ள முட்டைதான் போடுது. பச்சமுட்டைக்கு நான் எங்க போறது?
————————————————————————————–
அவன்: மாப்ள… நாய்க்கடிக்கு முதல்ல என்ன செய்யணும்.
இவன்: அதுக்கு நாய்கிட்ட போய் காலைக்கொடுக்கணும்.
————————————————————————————
பேரன்: தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாத்தான் வேலை கெடைக்கும்.
தாத்தா: அப்போ நீ படிச்சா வேல கிடைக்காதா?
———————————————————————————–
பேரன்: பாட்டி ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப்போறேன். என்ன ஆசீர்வாதம் பண்ணு பாட்டி.
பாட்டி: பாத்துடா ராசா, மெதுவா ஓடு. வேகமா ஓடி கைய, கால ஒடச்சுக்காத
————————————————————————————
(கவனமில்லாமல் சாலையைக் கடந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையிடம்…)
டிராபிக் காவலாளி: நில்லு பாப்பா, நான் விசில் அடிச்சும், கை காட்டியும் ஏன் பாப்பா கண்டுக்கல
பாப்பா: ஆலோ… நான் ஒண்ணும் அந்த மாதிரிப் பொண்ணு இல்ல.
———————————————————————————–
(5ம் வகுப்பு படிக்கும் இருமாணவர்கள் பேசிக்கொண்டது)
மாணவர்1: டேய்… கேளுடா கதைய, காந்தி 13 வயசுல கல்யாணம் பன்னாராம், நேரு 14 வயசுல கல்யாணம் பன்னாராம், பாரதியாரு 7 வயசுல கல்யாணம் பன்னாராம்.
மாணவர்2: நிறுத்துடா, எனக்கு இப்பதான் ஒண்ணு புரியுது. நம்ம பேர் ஏன் இன்னும் வரலாறுல வரலன்னு…
————————————————————————————-
சிறுவன்1: டேய் விசேச வீட்ல ஏன் வாழைமரம் கட்டுறாங்க?
சிறுவன்2: ம்… அதக்கட்டாட்டி கீழ விழுந்திரும்ல அதுக்குத்தான் கட்றாங்க.
———————————————————————————–
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “நகைச்சுவை”