மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிந்தனையும் சிரிப்பும்.

ஆச்சாரி

Apr 15, 2013

1. செய்தி: ஆசிட் ஊற்றியதால் இறந்து போன வினோதினிக்குப் பின்னும் ஆசிட் விற்பனைக்குத் தடை இல்லை என உயார்நிதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்தகவல்.

சிந்தனை: பல வினோதினிகள் இறந்த பின்புதான் இதற்குத் தடை செய்வாங்க போல. வரும் முன் காக்கத் தவறும் தமிழகம் ஒளிரட்டும்.

 

2. செய்தி: பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரப்படும். -வெங்கய்யா நாயுடு பேச்சு

சிந்தனை: எத்தனை நாளைக்குத்தான் இந்த மதத்த வச்சே பொழப்பு நடத்துவீங்க. கொஞ்சம் மனிதத்தையும் பாருங்கய்யா.

 

3. செய்தி: தமிழர்களின் மனக்குறைகளைத் தீர்க்காவிட்டால் இலங்கையில் மீண்டும் உள்நாட்டுப் போர் மூளும். – அமெரிக்கத் தூதர் எச்சரிக்கை.

சிந்தனை: கலகம் பிறந்தால் தான் ஞாயம் பிறக்கும் என்ற கருத்தைக் கச்சிதமாகக் கவ்விக்கொண்டீர் போங்கள்.

 

4. செய்தி: பேருந்து, ரயில் நிலையம், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகளில் 100 ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும்.  –சட்டசபையில் அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு.

சிந்தனை: இப்படி மக்களுக்குத் தேவையான நல்ல திட்டங்களைப் போடுவதை விட்டுட்டு சந்துக்கும், பொந்துக்கும் மதுக்கடைகளைத் திறந்து கல்லாகட்டுவது ஞாயமா?

 

5. செய்தி: நமது பல்கலைக்கழகங்களில், கல்வி நிறுவனங்களில் “கற்பிக்கும் முறையில் சீர்திருத்தம் தேவை”
– பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்.
சிந்தனை: அப்பாடா… இப்பவாவது உங்களுக்கு இது தெரிஞ்சதே!! ஆதிகாரத்த கையில வச்சுகிட்டு ஏனய்யா பேசணும், செயல்படுத்தலாமே.

 

6. செய்தி: கறுப்புப் பண விவகாரத்தில் அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றுவதை உறுதி செய்யுங்கள். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அத்வானி ‘திடீர்’ வேண்டுகோள்.

சிந்தனை: அய்யா, நான் தெரியாமத்தான் கேட்குறேன். இந்தியாவுல எந்தக்கட்சி கொடுத்த வாக்குறுதிய நிறைவேத்துச்சு? அதிலும் கறுப்புப் பணம்னா யாராவது வாயத்திறப்பாங்களா?

 

7. செய்தி: ராஜூவ் காந்தி காலத்திலிருந்து இலங்கைத்தமிழ் மக்களுக்கு இன்று வரை காங்கிரஸ் கட்சி உறுதுணையாக நிற்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது -பா.சிதம்பரம்
சிந்தனை: அம்மாடியோவ்… என்னா நடிப்பு? இவருக்குத்தான் ஆஸ்கார் அவார்டு கொடுக்கணும். தவிர, இந்த மாதிரி கூச்சமில்லாமல் புழுகிறதுக்கு எல்லாம் பல வருட பயிற்சி வேணும்.

 

8. செய்தி: இலங்கைத் தமிழ் மீனவர்கள் கொடுக்கும் புகாரின்  பேரில்தான் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் செல்கின்றனர்.  - நாராயணசாமி
சிந்தனை: அய்யா… இப்படி அறிவுப்பூர்வமா பேச உங்களால மட்டும் தான் முடியும். எங்க இப்படி பேசச் சொல்லித் தாராங்கன்னு சொல்ல முடியுமா?

 

9. செய்தி: 2014-ஆம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் 140 தொகுதிகளின் முடிவை (பேஸ்புக்) முகப்பு புத்தகம், டிவிட்டர்  தீர்மானிக்கும். -ஆய்வில் தகவல்

சிந்தனை: அப்போ அடுத்த வருசம் வரப்போற ஆட்சிய, இணையத்த பயன்படுத்துறவங்களாலதான் மாத்தி அமைக்க முடியும்னு சொல்றீங்க. இனி என்ன மோடியாவது…. ராகுலாவது….

 

10. செய்தி: ராகுல் எப்போது வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம். ஆதை நான் வரவேற்கிறேன்.
- மன்மோகன்சிங்

சிந்தனை: இப்படித்தான் சொல்லனும்னு மேல் இடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கும் போல.

 

11. செய்தி:ஆஸ்திரேலியாவில், இங்கைக்கு எதிரான உண்ணா நிலைப் போராட்டத்தில் குதித்தனர் அங்குள்ள  வெள்ளை இனத்தவரான கிரிஸ்டினோ, கேரி. (இவர்கள் அங்கு தஞ்சமடைந்த தமிழர்களுக்கு உதவி வருகின்றனர்)
இவர்களின் கோரிக்கைகள்:
1.மனித குலத்துக்கெதிரான போரை நடத்தி போர்க்குற்றம் புரிந்தவர்களை சர்வதேச விசாரனைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும்.
2.இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும்.
3. தமிழர்களின் விருப்பத்தை அறிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

சிந்தனை: உங்களுக்கு இருக்கிற அந்தத் தமிழ் உணர்வு கூட இங்கிருக்கிற சிலதமிழர்களுக்கும், இறையாண்மையைக் கட்டிக்காக்குற இந்தியர்களுக்கும் இல்லையேனு வருத்தமா இருக்கு.

 

12. செய்தி: இந்திய எம்.பிக்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

சிந்தனை: கோடை விடுமுறையைக் கழிக்க உங்களுக்கு அந்த இடம்தான் கெடச்சதா மந்திரிமார்களே?

 

But our teens are being raised in a world that prompts them to share facebook spy app their thoughts at any moment

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிந்தனையும் சிரிப்பும்.”

அதிகம் படித்தது