சிறகின் புதிய பகுதி அறிமுகம் – என் கேள்விக்கு என்ன பதில்:
ஆச்சாரிOct 1, 2013
அன்பிற்குரிய சிறகு இணைய இதழ் வாசகர்களுக்கு கனிவான வணக்கம். மக்கள் நலம் பயக்கும் பல்விதமான செய்திகளை வழங்கி வந்த எமது இதழின் படைப்புகள் பலவற்றை படித்துவிட்டு, தம் வாழ்வின் முன்னேற்றத்திற்கான பல்வித சந்தேகங்களைக் கேள்வி வடிவில் பின்னூட்டங்கள் வாயிலாகவும், அலைபேசி, தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாகவும் பல வாசகர்கள் தொடர்பு கொண்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கான வழிகாட்ட வேண்டியே, உங்களுக்காக இந்தப் புதிய பகுதியை அறிமுகப்படுத்துகிறோம். இந்தப் பகுதியில், வாசகர்களாகிய நீங்கள் உங்களுடைய சந்தேகங்களை கேள்விகளாக சிறகுக்கு அனுப்பலாம்.
சிறகில் கேள்வி கேட்கக்கூடிய தலைப்புகள்:
* கல்வி
* தொழில்
* வேலைவாய்ப்பு
* மருத்துவம்
* சட்டம்
-மேற்கண்ட தலைப்புகளில் உங்களுக்கு ஏற்படும் கேள்விகளை எங்களுக்கு அனுப்பினால் அவற்றிற்கான பதிலை, அந்தந்தத்துறையில் அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து பெற்று சிறகில் வெளியிடுவோம்.
சிறகில் கேள்வி கேட்கக்கூடாத தலைப்புகள்:
* அரசியல்
* திரைப்படம்
* மட்டைப்பந்து
* ஆன்மீகம்
- மேற்கண்ட தலைப்புகளில் வாசகர்கள் எவ்விதமான கேள்விகளையும் கேட்க வேண்டாம் என அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.
வாசகர்கள் கவனத்திற்கு. . .
1. ஒருவர் பல தலைப்பில், எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
2. கேள்விகளை editor@siragu.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 044-2810971 என்ற தொலைபேசியிலும் அழைத்து விபரம் பெற்றுக்கொள்ளலாம்.
3. இது முழுக்க முழுக்க வாசகர்களாகிய உங்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு எங்களால் ஆன முயற்சியாகும்.
இப்படிக்கு . . .
சிறகு நிர்வாகக் குழு
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறகின் புதிய பகுதி அறிமுகம் – என் கேள்விக்கு என்ன பதில்:”