IIT-JEE 2013 நுழைவுத்தேர்வுக்கு தயாராகுங்கள்
ஆச்சாரிDec 15, 2012
IIT மற்றும் IIM போன்ற கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்பில் 2013ம் கல்வியாண்டில் சேர விரும்பும் மாணவர்கள், ஐஐடி-ஜேஇஇ தேர்வை, மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என்ற 2 புதிய முறைகளில் எழுத வேண்டியுள்ளது.
இதில் ஜேஇஇ மெயின் தேர்வானது, 2013 ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இத்தேர்வின் முடிவுகள் வெளிவந்தவுடன், அதில் முதல் 1,50,000 இடங்களைப் பெற்றவர்கள், அட்வான்ஸ்டு தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
IIT யில் சேர்வதற்கு IIT அட்வான்ஸ்டு மற்றும் Board தேர்வில் பெரும் மதிப்பெண் அடிப்படையில் முதல் 20சதவீத மாணவர்களுக்குக் கிடைக்கும்.
NIT யில் சேர்வதற்கு 40 சதவீத மதிப்பெண் +2 தேர்வின் அடிப்படையிலும் 60 சதவீதம் IIT Main தேர்வின் அடிப்படையிலும் வைத்து முதல் தகுதி மாணவர்க்கு இடம் கிடைக்கும்.
மாணவர்கள் www.jeeadv.iitd.ac.in என்ற தளத்தில், ஆன்லைன் பதிவை செய்ய வேண்டும்.
பொதுப்பிரிவுக்கு பதிவுக் கட்டணமாக ரூ.1800 வசூலிக்கப்படுகிறது. SC/ST/PD பிரிவுக்கு ரூ.900. பெண்களுக்கு கட்டணம் கிடையாது. பதிவு கட்டணமானது, 2013ம் ஆண்டு மே 8 முதல் 13(last date) வரையில், ஏதேனுமொரு ஸ்டேட் வங்கி கிளையில்(CBS-core banking solution வசதியுள்ள) செலுத்தப்பட வேண்டும்.
அட்வான்ஸ்டு தேர்வு ஆப்லைன் முறையில் நடைபெறும். ஜுன் 2ம் தேதி நடைபெறும் இத்தேர்வின் கால விபரம்,
பேப்பர் 1-காலை 9 முதல் நண்பகல் 12 வரை
பேப்பர் 2-பிற்பகல் 2 முதல் மாலை 5 வரை
கேள்வித்தாள்கள் ஆப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். மேலும் விபரங்களுக்கு www.jeeadv.iitd.ac.in என்ற வலைத்தளம் செல்க.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
பயனுள்ள தகவல். Objective ( ) என்பதனை அடைப்புக்குறிக்குள் வைத்து, “தெரிவு செய்தல்” என்பதாக அந்தச் சொல்லுக்கு தமிழில் பயன் படுத்தலாம். இப்படியாக நாம் தமிழில் கலைச் சொற்களை உருவாக்கி செழுமைப்படுத்தலாம். நன்றி.