மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

Team – கல்வித் தொண்டு

ஆச்சாரி

Aug 2, 2011

இந்தியர்கள் அறிவு சார்ந்த வேலைகளில் உலகளவில் கொடி கட்டி பறந்தாலும், கிராம புற மற்றும் நகர அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளது.பெரும்பாலான பள்ளிகளுக்கு கட்டிடம் சரியாக இல்லை. உட்கார மேஜை வசதி சரியாக இருக்காது..அரசாங்கம்  கல்விக்கு செய்யும் செலவு கடலில் கரைத்த பெருங்காயமாக உள்ளது. இதைக் கருத்திற் கொண்டு கி.பி 2000 ஆண்டின் ஏப்ரல் மாதம் ஏழைப்பள்ளிகளின் வளர்ச்சி பற்றி ஒரு சிலரிடையே விவாதிக்கப்பட்டு பின் தொலை பேசியிலும் மின்னஞ்சலிலும் விவாதத்தில் வளர்ந்து விதையாக வித்திடப் பட்டது தான்

TEAM (TEAM for Educational Activities in Motherland)(http://www.IndiaTEAM.org)

என்ற அமைப்பு. மிக பெரிய தொகையை நம்மால் கல்வி வளர்ச்சிக்கு செலவிடுவது மிகவும் கடினம். அவ்வாறே செலவிட்டாலும் ஒரு  சில பள்ளிக்கு தான் நம்மால் உதவமுடியும். எனவே இத்திட்டதின் படி ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குறுந்தொகையை ,அதாவது $10 ஒவ்வொரு மாதமும் குழுவிடம் செலுத்துவார்கள். உதாரணமாக 100 பேர் மூன்று மாதம் $10 கொடுத்தால் ,அது $3000 ஆக பெருகும். குலுக்கல் முறையில் 6 பேரை தேர்ந்தெடுத்து ஆளுக்கு $500 பிரித்து கொடுக்கபடும். தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேரும் இந்தியாவில் உள்ள ஏழைப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து $500 தொகைக்குண்டான பள்ளி உட்கட்டமைப்புக்கான பணிகளை மேற்கொள்ளுவார்கள். பணிகள் செவ்வனே முடிந்த பின், ரசீது மற்றும் புகைப்படங்களை அமைப்பிடம் சமர்ப்பிப்பர். 50 மாதங்களில் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு பள்ளியையாவது மேம்படுத்தி இருப்பார்கள்.

இந்த அமைப்பின் வெற்றிக்கு முக்கிய காரணம் பணத்தை நன்கொடையாக கொடுப்பவர்களே வளர்ச்சி பணிக்கு பணத்தை செலவழிப்பது தான்.இதை படிக்கும் போது ஒருவர் மாதம் $10 கொடுப்பதால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட போகிறது என்று தோன்றும். சிறு துளி பெரு வெள்ளம் என்ற பழ மொழிக்கு ஏற்ப கடந்த பத்தாண்டுகளில் இவ்வமைப்பினர் தாயகக்கல்வி வளர்ச்சிக்காக செய்த மொத்த தொகை அரை மில்லியன் வெள்ளியையும் தாண்டி விட்டது .ஆச்சரியமாக இருக்கிறதா? தமிழ் நாட்டுப்பள்ளிகளுக்கு இவ்வமைப்பினரால் செய்ய பட்ட உதவிகளை காண இந்தச் சுட்டியை (http://www.indiateam.org/projects/Pub_PrjList.php?state=TamilNadu) அழுத்திப்பாருங்கள். இதைப்படிக்கும் வெளி நாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் தமிழக பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதை ஒரு சமுதாயக்கடமையாக ஏற்று கொண்டு இவ்வமைப்பில் தங்களையும் ஈடுபடுத்தி சேவை மனப்பன்மையோடு பணி செய்தால் தாய் நாட்டின் கல்வி வளர்ச்சியில் ஒரு புரட்சியே ஏற்படுத்த முடியும்..இதை படிக்கும் உங்களுக்கும் இது போன்ற சமூகப்பணியை ஆற்ற ஆர்வமாக இருந்தால் info@indiateam.org என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Now there is http://essaysheaven.com/ no single technique by which this can be achieved

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “Team – கல்வித் தொண்டு”

அதிகம் படித்தது