மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிறந்தேன்… (கவிதை)

முனைவர் த.தமிழ்ச்செல்வம்

Dec 24, 2022

doc6k2q6bwp6eo1gfwncizm

பிறந்தேன் – பிறந்தபயன் (ஞானம்), கற்றேனா!!

கற்றேன்- கற்றபடி (தர்மம்), நடந்தேனா!!

நடந்தேன் – நடந்தவழி (நேர்மை), நின்றேனா!!

நின்றேன் – நின்றஇடம் (நியாயம்), உணர்ந்தேனா!!

உணர்ந்தேன் – உணர்ந்தவுடன் (உண்மை) நிலைத்தேனா!!

நிலைத்தேன் – நிலைத்துசில (ஈகை), செய்தேனா!!

செய்தேன் – செய்தபணி (புகழ்), களித்தேனா!!

களித்தேன் – களித்தபடி (அமைதி), வாழ்ந்தேனா!!

வாழ்ந்தேன் – வாழ்வதற்கே (கர்மம்), பிறந்தேனா!!


முனைவர் த.தமிழ்ச்செல்வம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிறந்தேன்… (கவிதை)”

அதிகம் படித்தது