மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மருத்துவக் கல்வியில் இழைக்கப்படும் மாபெரும் அநீதி !

சுசிலா

Jun 6, 2020

siragu neet1
மருத்துவக்கல்வி இளநிலை, மற்றும் மேற்படிப்பில், அகில இந்தியளவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு முற்றிலும் மறுக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது. நமக்கு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டிருப்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கண்ணெதிரே, வழிபறிக்கொள்ளை போல், மத்திய பா.ச.க அரசு இதனை செய்து முடித்திருக்கிறது என்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இந்தக் கொடுமையை உடனே, சரிசெய்வது அவசர அவசியமாகும். இந்திய நாட்டிற்கே, சமூகநீதியை கற்றுக்கொடுத்தது தமிழ்நாடு தான் என்பது வரலாறு. இடஒதுக்கீடு என்பது நம்முடைய நூறு ஆண்டுகால சாதனை. நீதிக்கட்சி ஆட்சியின் போதிலிருந்து, இடஒதுக்கீடு முறை இங்கே நடைமுறையில் இருந்துவருகிறது. மேலும், இது திராவிடர் இயக்கத்தின் சாதனையாக போற்றப்படுகிறது. அடுத்தடுத்து ஆட்சியில் அமர்ந்த திராவிடக்கட்சிகளின் ஆட்சியில், மென்மேலும், உறுதியாக்கப்பட்டு, கல்வியில், வேலைவாய்ப்பில் என பிற்படுத்தப்பட்டோர் 30 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20 விழுக்காடு என இடஒதுக்கீட்டின் மூலம் ஒரு சமுகப்புரட்சியே செய்திருக்கிறது தமிழ்நாடு!

இந்த சமூகப்புரட்சி, ஆதிக்க சக்திகளுக்கு துவக்கத்திலிருந்தே உறுத்தலான விடையமாக தான் இருந்து வருகிறது. ஏனென்றால், மிக முக்கியமாக, திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள், போராட்டங்கள் காரணமாக, 1950 -ல், இந்திய அரசமைப்புச்சட்டம் செயல்பாட்டிற்கு வந்து, 40 ஆண்டுகள் கழித்து, 1990-ல் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் மட்டும், முதன்முதலாக, 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதற்காக, அந்த மாமனிதர் கொடுத்த விலை, ஆட்சிபறிப்பு. அதற்கு காரணமானவர்களின் ஆட்சி தான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இந்த சட்டம் இயற்றப்பட்டாலும், அதற்கு இடைக்கால தடையை விதித்து, செயல்பாட்டிற்கு வராமல் இருந்தது. அதன்பிறகு, 1992 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இதுவும் கூட, வேலைவாய்ப்பிற்கு மட்டும் தான். மத்திய அரசு துறைகளில் கல்வியில் இட ஒதுக்கீடு என்பது காங்கிரஸ் ஆட்சியில் அர்ஜூன்சிங் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது பல எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி 2008 முதல் செயல்பாட்டுக்கு வந்தது என்பது இடஒதுக்கீடு வரலாற்றின் உண்மையாகும்.

இந்திய துணைக்கண்டத்திலேயே, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி எனும் பெருமை, தமிழ்நாட்டிற்கு மட்டுமே உண்டு. இங்கே, உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 26 ஆகும். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இந்த கல்லூரிகளை கட்டி, மாபெரும் கல்விப்புரட்சியை செய்துகாட்டிய சிறப்பு திராவிடக்கட்சிகளுக்கு, குறிப்பிட்டு கூறவேண்டுமானால், திராவிட முன்னேற்ற கழகத்தையே சாரும்!

siragu ida odhukkeedu1

இத்தனை ஆண்டுகளாக தங்கள் மட்டுமே அனுபவித்து வந்த ஆதிக்கத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமயம் பார்த்து, காத்திருந்தவர்கள், அவர்கள் ஆட்சி வந்தபிறகு, தகுதி தேர்வு என்ற போர்வையில், நீட் தேர்வு கொண்டுவந்தார்கள். நேரடியாக மோதமுடியவில்லை என்றால், குறுக்கு வழியில் வருவது தானே அவர்கள் வழக்கம். நீட் தேர்வு கொண்டுவந்து, நம் மாணவர்கள் மருத்துவக்கனவை சிதைத்து, நம் வரிப்பணத்தில் கட்டிய மருத்துவக் கல்லூரிகளில், நம் பிள்ளைகள் படிக்க வழியில்லாத சூழ்நிலையை உண்டாக்கி, வடமாநில மாணவர்களை கொண்டுவந்து சேர்க்கும் முறையை கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் பல உயிர்களையும் நாம் இழந்திருக்கிறோம் என்பது, மத்திய பா.ச.க அரசினால், நமக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய வஞ்சகம், மோசடி என்பது மறுக்கமுடியாத உண்மை. இதைவிட, தற்போது கிடைத்திருக்கும் அதிர்ச்சி செய்தி என்னவென்றால், நாம் அரும்பாடுபட்டு உண்டாக்கிய மருத்துவ இடங்களை எல்லா வகையிலும் கபளீகரம் செய்திருப்பது மிகப்பெரிய கொடுமை.

2020-2021 கல்வி ஆண்டில், மருத்துவ மேற்படிப்பில், நீட் மதிப்பெண் அடிப்படையில், கல்லூரிவாரியாகவும், இடஒதுக்கீடு வாரியாகவும் உள்ளடக்கிய ஒரு பட்டியலை மத்திய அரசின் சுகாதரத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும், மருத்துவ கலந்தாய்வுக் குழு ஒன்று தன்னுடைய இணையத்தில் (www.mcc.nic.in) வெளியிட்டுள்ளது. அதிலுள்ள செய்தி என்னவெனில், மாநிலங்களிருந்து, பெறப்படும் அகில இந்திய தொகுப்பு இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு முற்றிலும் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது என்பதாகும்.
அதாவது, 7,981 இடங்களில் ஒரு இடம் கூட பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்படவில்லை. (கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலை காண்க.). கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து, அதாவது நீட் தேர்வு அமலுக்கு வந்ததிலிருந்து, ஏறத்தாழ 11,000 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டு, பொது பிரிவில் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு சான்றாக சொல்லவேண்டுமென்றால், மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு, தமிழ்நாட்டிலிருந்து பெறப்பட்ட அகில இந்திய தொகுப்பிற்கு அளித்த இடங்கள் 941. இதில் ஒரு இடம் கூட பிற்படுத்தப்பட்டோருக்கு தரப்படவில்லை.

மாநில அரசுகளிடமிருந்து, மத்திய அரசிற்கு கொடுக்கப்படும் இளநிலை மருத்துவப்படிப்பிற்கு 15% மற்றும் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கு 50% இடங்களில், அகில இந்திய அளவில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடங்களை அளிப்பதில், முற்றிலுமாக புறக்கணிப்பு நடந்திருக்கிறது. இது தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும், எழுதப்பட்ட கடிதங்களுக்கும் இதுவரை அரசு தரப்பில், எவ்வித பதிலும் தரப்படவில்லை.

அதன்பிறகு, இதன் அடிப்படையில், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு, ஆணையம், அரசமைப்புச்சட்டம் 338-பி பிரிவின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியிருக்கிறது என்பது வரவேற்கக்கூடியது. மத்திய பா.ச.க அரசு, செய்திருக்கும் இந்த சூழ்ச்சிகரமான அநீதி தற்சமயம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போது, கொரோனா காலமாக இருப்பதால், இதில் தொய்வு வராமல் விரைந்து செயல்பட, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். கட்சி பாகுபாடு பாராமல், அனைத்துக்கட்சிகளும் ஒன்று திரண்டு, இந்த சமூக அநீதியை எதிர்த்து, ஒரே குரலாக எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்த அனைத்துக்கட்சிகளும், தங்களுடைய எதிர்ப்பை காட்டுகின்றன என்பது மிகவும் பாராட்டுக்குரிய விடயம். முதல்படியாக, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான திமுக, உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. மேலும், அனைத்து தோழமைகட்சிகளையும் கலந்தாலோசித்து, கண்டன தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, மதிமுக, சிபிஐ, காங்கிரஸ், சிபிஎம், பாமக ஆகிய காட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. மேலும், திராவிடர் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அதிமுக அரசும் உச்சநீதிமன்றத்தில், சமூகநீதிக்காக வழக்கு தொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

நமக்குள், கட்சி வேறுபாடுகள் பல இருந்தாலும், சமூகநீதிக்காக, தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிகளும், ஒருசேர பயணிப்பது என்பது, இது என்றைக்கும் சமூகநீதிமண் என்பதை பறைசாற்றிக்கொண்டே இருக்கிறது என்பதில் நம் எல்லோருக்குமான சிறப்பு!

அனைத்திற்கும் முன்னோடி மாநிலமாக திகழும் நம் தமிழ்நாடு, இந்த விசயத்திலும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தற்போது, வடமாநிலங்களிலும், ராஷ்டிரிய ஜனதாதளம், சமாஜ்வாடி கட்சிகளும் இதற்கு குரல்கொடுக்க முன்வந்திருக்கின்றன.

நீட் தேர்விற்கு எதிராக நாம் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இதற்கும் சட்டப்போராட்டம் செய்யவேண்டிய நிலையை மத்திய பா.ச.க அரசு நம் மீது திணிக்கிறது.

இந்த சமூகஅநீதிக்கு, விரைவில் ஒரு முடிவுகட்ட, அனைவரும் ஓரணியில் திரள்வோம்!

நமக்குள், கட்சி வேறுபாடுகள் பல இருந்தாலும், சமூகநீதிக்காக, தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிகளும், ஒருசேர பயணிப்பது என்பது , இது என்றைக்கும் சமூகநீதிமண் என்பதை பறைசாற்றிக்கொண்டே இருக்கிறது என்பதில் நம் எல்லோருக்குமான சிறப்பு!

அனைத்திற்கும் முன்னோடி மாநிலமாக திகழும் நம் தமிழ்நாடு, இந்த விசயத்திலும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தற்போது, வடமாநிலங்களிலும், ராஷ்டிரிய ஜனதாதளம், சமாஜ்வாடி கட்சிகளும் இதற்கு குரல்கொடுக்க முன்வந்திருக்கின்றன.

நீட் தேர்விற்கு எதிராக நாம் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இதற்கும் சட்டப்போராட்டம் செய்யவேண்டிய நிலையை மத்திய பா.ச.க அரசு நம் மீது திணிக்கிறது.

இந்த சமூகஅநீதிக்கு, விரைவில் ஒரு முடிவுகட்ட, அனைவரும் ஓரணியில் திரள்வோம்!

சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மருத்துவக் கல்வியில் இழைக்கப்படும் மாபெரும் அநீதி !”

அதிகம் படித்தது