மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்ப் பெண்டிர் தவிக்கலாமா?

ஆச்சாரி

May 1, 2012

சமீப காலமாக , தமிழக செய்திகளை வாசிக்கும் பொழுது,  குழந்தைகளுக்கும் இளம் பெண்களுக்கும் கவலை அளிக்கும் செய்திகளாகவே இருக்கின்றன.  பாலியல் தொடர்பான அடாவடி  செய்கைகளும், சித்ரவதைகளும் , கொடுமைகளும்,  குற்றங்களும் பெருகிக்  கொண்டு வருகின்றன.    தமிழ் பெண்ணை தாயாகவும்  தெய்வமாகவும் நினைத்து கௌரவிக்கப்பட்ட நாட்கள் மறைந்து கொண்டு வருகின்றனவோ?  தமிழ் மக்கள் அனைவரும் வெட்கமும் வேதனையும் படத்தக்க வகையில்,  இன்று சமூக சூழ்நிலைகள் அமைய காரணம் என்ன?

மகாத்மா  காந்தியின் சில சிந்தனை மொழிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  இவை நம்மை சிந்திக்கவும் ஆவன செய்யவும்  உதவும்.

1 .  தன்னடக்கச் சக்தியானது பெண்களைவிட ஆண்களிடமே குறைவாகக் ணப்படுகிறது.  தன்னடக்கத்தைப் பயில்வது ஆணைவிடப் பெண்ணுக்கு வெகு சுலபம்.   எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதுதான் தன்னடக்கத்தின் முதற்படியாகும்.

2 .  சத்தியத்தையும் அகிம்சையையும்  பலிகொடுத்து விட்டு, அதனால் வரும் சுயராஜ்யத்தை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

3 .  மிருகங்களை  போல நடந்து கொள்கிறவன் , சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.

4 .   பெண்களே!  ஆசைகளுக்கும் ஆண்களுக்கும் அடிமைகளாக இருக்க மறந்து விடுங்கள்.

5 .   எப்பொழுது ஒரு பெண், தனியாக நடு இரவிலும் பாதுகாப்பாக செல்ல முடிகிறதோ , அப்பொழுதுதான் உண்மையான சுதந்திரம் பெறுகிறோம்.

மேலும்  சமூதாயத்தில்,  தெய்வ நம்பிக்கையும் ,  கலாச்சார சிறப்பின் மீது உள்ள நம்பிக்கையும்,  தன்னம்பிக்கையும்,  எதிர் காலத்தை குறித்த நம்பிக்கையும் குறைந்து கொண்டு வருவதாலும் இப்படி  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகிறதோ?   ” நம்பிக்கை குறையும் போது , ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான், ” என்று ஜான் மில்டன் கூறி உள்ளார்.

சமூதாய சீர்கேடுகளை ,  பூனை ஒன்று தன் கண்ணை மூடி கொண்டு  , உலகமே இருட்டாகி விட்டது என்பது போல நடந்து கொள்ளாமல், சமுதாயத்தில் இருக்கும் பிரச்சனைகளை – குறைபாடுகளை – அடையாளம் கண்டு கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். இதில், ஆண் – பெண் பேதமில்லை.  நாகரீக உலகமாக மாறி வருவதை தடுக்க முடியாது. அதற்காக பழம் பெருமைகளை உதறித் தள்ள தேவையும் இல்லையே.  அப்படி செய்தால், தமிழர் என்ற அடையாளத்தை தொலைக்க வேண்டியது வருமே.   கலாச்சார சட்ட திட்டங்களை, கோட்பாடுகளை கட்டாயமாக திணிக் காமல்,  எதனால் அப்படி முன்னோர்கள் காலத்தில் இருந்து சில கட்டுப்பாடுகள் கொண்டு  வரப்படுகிறது என்று காரண விளக்கங் களோடு  சிறு வயது முதல் புரிய வைத்து , பழமையின் சிறப்பை மதிக்க கற்றுக் கொடுப்பது, ஒவ்வொரு தமிழ் பெற்றோரின் கடமையாகும். இதிலும் ஆண் குழந்தை – பெண் குழந்தை என்ற பேத மில்லை.  மகாத்மா காந்தி கூறியுள்ளது போல, “ஒரு மனிதனுக்கு அளிக்க கூடிய கடுமையான தண்டனை, அவனால் புரிந்து கொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப் படுத்தி செய்யச் சொல்வதுதான்.”

பெண்களை  எச்சரிக்கையாகவும்  கவனமாகவும் இருக்க சொல்லி , குழந்தை பருவத்தில் இருக்கும் வளர்க்கப்படுவது இயற்கையாக கருதப்படுகிறது.  எந்த அநியாயம் நடந்தாலும், அந்த பெண்ணின் கவனக்குறைவோ அல்லது அவளது முன் எச்சரிக்கையற்ற செயல் களோ குற்றமாக கருதப்பட்டு , அந்த  பாதிக்கப்பட்ட பெண்ணே குற்ற வாளியாகவும் சமூகத்தால் பார்க்கப்படுகிறாள்.   பெண்களை யும்  பெண்களின் உணர்வுகளையும்  தனக்கு சமமாக நினைத்து , மதித்து , தன்னால் எந்த அளவுக்கும் அவளுக்கு தொந்தரவுகள் இல்லாமல் இருக்க முயல வேண்டும் என்று ஆண்களுக்கும் குழந்தை பருவத்திலே இருந்து பொறுப்பு மற்றும் பாதுகாப்பு உணர்ச்சியுடன் ஊட்டி ,  எத்தனை பெற்றோர்கள்  வளர்க்கிறார்கள்?

லியோ டால்ஸ்டாய் கூறி இருப்பது :  ”  ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களே ஒழிய தம்மை மாற்றி கொள்ள நினைப்பதில்லை.”  சமூதாய மாறுதல்கள் வர , ஒவ்வொரு வீட்டிலும் மாறுதல்கள் வருவது மிக அவசியம்.

பெண்களுக்கு நடனம், இசை, சமையல்  மற்றும் கல்வி கற்றுக்   கொடுப்பது மட்டும் போதாது.  தற்காப்பு கலைகளை ஒவ்வொரு பெண்ணும் கற்று கொள்வது மிகவும் அவசியமானது.  தான் பலவீன மானவள் அல்ல என்பதைப் புரிய வைக்க அந்த தற்காப்புக் கலைகள் மிகவும்  உதவும்.

வல்லரசாக இந்தியா வர, ஆண் பெண் – ஒரு வரின்  ஒருவர்  உணர்வு களையும் வளர்ச்சிகளையும் சுதந்திரத்தையும் மதித்து – சம உரிமை  கோட்பாடுகளுடன் அங்கீகரிக்க பழகிக் கொண்ட சமுதாயமாக வர வேண்டியது, கட்டாயமாக  இருக்கிறது.  அது வரை,  பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான துயரச்  செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கும் அவல நிலையை மாற்ற முடியாது.

Committee on developments in the science of learning pay for essay through paypal

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தமிழ்ப் பெண்டிர் தவிக்கலாமா?”
  1. ரத்னவேல் நடராஜன் says:

    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

  2. ரத்னவேல் நடராஜன் says:

    அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

  3. ஆசியா உமர் says:

    சித்ரா,எனக்குள் எழுந்த பல கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் விடை கிடைத்தது எனலாம்.நச்சென்று சொல்ல்யிருக்கீங்க.

  4. ஆனந்தி says:

    மிக பக்குவ பட்ட எழுத்து….
    //ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களே ஒழிய தம்மை மாற்றி கொள்ள நினைப்பதில்லை.”// உண்மை தான்…:-(

    //பெண்களுக்கு நடனம், இசை, சமையல் மற்றும் கல்வி கற்றுக் கொடுப்பது மட்டும் போதாது. தற்காப்பு கலைகளை ஒவ்வொரு பெண்ணும் கற்று கொள்வது மிகவும் அவசியமானது. தான் பலவீன மானவள் அல்ல என்பதைப் புரிய வைக்க அந்த தற்காப்புக் கலைகள் மிகவும் உதவும்.//
    சபாஷ்…பலே…சித்ரா….கன்னா பின்னா என்று இதை வழி மொழிகிறேன்…;-)

அதிகம் படித்தது