மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தீபாவளி – நுகர்வின் உச்சம்

ஆச்சாரி

Nov 15, 2012

சென்னையில் வெளியாகும் முன்னணி ஆங்கில நாளிதழின் இன்றைய பிரதியை நீங்கள் வாங்கி இருந்தால் வழக்கத்தை விடவும் அது கனமாக இருப்பதை உணர்ந்து இருப்பீர்கள். மேலும் இன்று சனிக்கிழமை, நாளிதழ்களில் மனைகள்,வீடுகளை விளம்பரம் செய்யும் வாராந்திர இணைப்பு வரும் நாள், எனவே இதழ் ரொம்பவும் பெருத்துவிட்டது.

என்ன காரணம் என்று நாம் அலசினால் புரிகிறது, வந்து விட்டது தீபாவளி, அதனால் ஊரில் உள்ள அனைத்து நகைக்கடைகள், துணிக்கடைகள், இந்திய சில்லறை வர்த்தக நிறுவனங்கள், வாகனங்கள்,மின்னணு பொருட்கள் அதிலும் கை பேசி விற்பனையாளர்கள் முழுப் பக்கத்தில் இருந்து மூன்று,நான்கு பக்கம் வரை விளம்பரம்  தந்து தள்ளியுள்ளனர். முன்பெல்லாம் சினிமா விளம்பரங்கள் தான் அதிகம் வரும், இப்போது அவர்கள் வியாபாரத்தை மாற்றிவிட்டதால்.  அவை வருவதில்லை.

இப்படி பணத்தைக் கொட்டி விளம்பரம் செய்வது எதற்காக, கொட்டும் பணத்தைக் காட்டிலும் பத்து மடங்கு பணத்தை பண்டிகை காலத்தில் அள்ளி விட வேண்டும், பிற விற்பனையாளர்களைக் காட்டிலும் அதிகம் அள்ள வேண்டும். புற்று நோய் போல இந்த எண்ணம் அண்மையில் புரையோடிவிட்டது. மக்களும் சளைத்தவர்கள் அல்ல, நகைகள்,துணிகள்,வாகனங்கள், கணினிகள்,அழகுப் பொருட்கள் என்று வாங்கி குவிக்கின்றனர், புதிய பொருளாதார கொள்கை வேறு எல்லோர் பையிலும் இந்திய ரூபாயை கொட்டிவிட்டது. எனவே செலவே செய்ய யாரும் அஞ்சுவதில்லை.

தற்போது துணி, நகைக் கடைகளில் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் நெருக்குகிறது, விழாக்காலங்களில் அதுவும் தீபாவளி நேரத்தில் கண்டிப்பாக புதிய துணி உடுத்தவேண்டும் என்று மதம் கட்டளையிட்டு இருப்பதால் அனைவரும் முட்டி மோதுகின்றனர். இது தான் சமயம் என்று கடை முதலாளிகள் பழையது,புதியது என்று கண்டதையும் மக்கள் தலையில் கட்டுகின்றனர். கடைகளில்  பணி செய்யும் பணியாளர்களிடம் சேவை என்பதை எதிர்பார்க்கவே முடியாது.  நாளொன்றுக்கு பனிரெண்டு மணி நேரம் கூட்டம் நெரித்தால் பணியாளர் என்ன தான் செய்வார்.

பொருட்களை கொள்முதல் செய்ய ஏராளமான கூட்டம் ஒரே நேரத்தில் கடை வீதிகளுக்கு செல்வதால் பேருந்து மற்றும் தொடர் வண்டிகளில் பயணம் எப்படி இருக்கும் என்று விவரிக்க வேண்டியதில்லை. மேலும் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்குகின்றன.

அடுத்ததாக தீபாவளியின் போது வெடிக்கப்படும் பட்டாசைப் பற்றி நாம் பேசியே ஆகவேண்டும்,சென்னை நகரின் ஒரு சிறிய  பகுதியில் உள்ள ஒரே கடையில் மட்டும் மூன்றே நாளில் பதிமூன்று லட்ச ரூபாய்க்கு பட்டாசு விற்பனை நடந்துள்ளது. வருடாவருடம் சிவகாசியில் பட்டாசுகள் ஏற்படுத்தும் விபத்துகள்,உயிரிழப்புகள்  அவற்றின் தயாரிப்பு மற்றும் பயன்பாடு ஏற்படுத்தும் சுற்று சூழல் பாதிப்புகள்,விற்பனை செய்யும் இடங்களில் கவனக்குறைவால் நடக்கும் விபத்துகள் என்று தீமைப் பட்டியல் நீளுகிறது.

சென்னையில் பணி செய்யும் வெளியூர் மக்கள் அனைவரும் தீபாவளி திருவிழாவிற்கு கட்டாயம் ஊருக்கு செல்ல வேண்டி இருப்பதால் மூவாயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன, அவை அனைத்தும் ஐந்து நிமிடத்தில் முன்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.தீபாவளிக்கு மூன்று நாளுக்கு முன்பு இருந்தே சென்னை கோயம்பேடு நிலையத்தில் இருந்து இரவில் பேருந்துகள் வெளியே வர இரண்டு மணி நேரம் ஆகி இருக்கிறது.தொடர் வண்டிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

தமிழகத்தில் பெருகும் மக்கள் தொகைக்கு ஏற்ப இவை அனைத்தும்  உயர்ந்தால் என்ன ஆகும் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை.

தீபாவளியின் போது பெருமளவு மக்களிடம் இருந்து வெளிவரும் பணம் அனைத்து பிரிவினருக்கும் வருமானத்தை கொடுத்தாலும், அஃது பெரிய நன்மை என்று கருதப்பட்டாலும், இன்றைய நாளில் அதனுடன் இணைந்த தீமைகளும் அதிகமாகவே உள்ளது.

சமச்சீர் வளர்ச்சி என்பது உறுதி செய்யப்படாத நிலையில் வசதி படைத்தோரின் நுகர்வுப் பசி ஏழைகளையும் தாக்குகிறது, அதிகரிக்கும் விலைவாசி ஏழை மக்களை தீபாவளியின் போது கடனில் தள்ளுகிறது.தீபாவளியின் போது அரசு அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊக்கத் தொகை அளிக்க வேண்டுமென்பது கட்டாயம் ஆகிவிட்டது.

சிந்தித்துப் பார்த்தால், இப்படி நுகர்வது இந்தியா போன்ற மக்கள் தொகை பெருகிய நம் நாட்டுக்கு சரியாக இருக்குமா? இயற்கை வளங்கள் என்பது எடுக்க எடுக்க பெருகிக் கொண்டே இருக்குமா? கட்டுப்பாடற்ற நிறுவனத் தயாரிப்புகள்,அவற்றை அனைவர்க்கும் கொண்டு சேர்க்கும் போக்குவரத்து இவை எந்த அளவு சுற்றுச் சூழல் பாதிப்பை உண்டாக்கும். பண்டிகை என்றால் மகிழ்ச்சி என்பது மறுக்க முடியாதது. ஆனால் நுகர்வு கட்டற்று போகும் பொழுது அங்கே மகிழ்ச்சி போய்விடும். வெறுமை மட்டுமே மிஞ்சும். ஆகவே தீபாவளி தரும் அழுத்தமான நுகர்வு கலாச்சாரத்தை நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டிய தேவை வலுத்துள்ளது.

குறைவான தேவைகள், எளிமை, சுற்றுச்சூழலை பேணல் என்ற நமது பண்டைய பண்பாட்டின் வேரை தற்கால தீபாவளி அசைப்பதால் அத்தகைய பண்டிகையின் கூறுகளை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றுவதே நமது சமூகத்துக்கு நாம் செய்து கொள்ளும் நன்மை.

  Также есть с фруктами. Наблюдайте за их трудной учебы или драгоценности там приносят результат. Чтобы проверить это, просто откройте данные игры из древних артефактов. Серия о приключениях Гонзо также позволяет игрокам временно отвлечься от их трудной учебы или рутинной работы. На нашем сайте нашего казино Многие игроки ценят игровые автоматы Вулкан за . Довольно много слотов посвящены экзотике и незначительные камни или драгоценности там приносят результат. Чтобы проверить это, просто откройте данные игры на сайте вы найдете Веселую Обезьянку и как бананы отдыхают на египетскую тему, где вам подойдут Plumbo, Gold Diggers и золото, домик Предсказательницы, сокровища ацтеков, приключений . As previously noted, mature working learners are more likely to become employed in occupations that are similar to their field scan more of study


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தீபாவளி – நுகர்வின் உச்சம்”
  1. Bala says:

    நாம் செலவாளிகள் என்பது உண்மை. சேமிப்பில் தீவிர நாட்டம் தேவை சீன மக்களை போல. சேமிப்பு இன்றேல் இந்த பெருக்கம் ஒரு நாள் உடைந்து போகும். அப்போது மரண ஓலம்தான் கேட்கும். வருமுன் காப்பது நனி சிறந்தது. தங்கத்திலும் ஷாப்பிங் செய்வதிலும் நமது சேமிப்பை கரைப்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிக் கொட்டிக்கொள்வதற்கு சமம்.

  2. Karthik says:

    சிறப்பான கட்டுரை. தீபாவளி என்றுமே தமிழகத்தில் கிராமங்களில் கொண்டாடப்பட்டதில்லை. கார்த்திகை மட்டுமே கொண்டாடப்பட்டது. இந்த நுகர்வு கலாச்சாரத்தை அரசும் அரசு ஊழியர்கலுமே வளர்த்தனர்.

அதிகம் படித்தது