நீங்கள் தமிழில் புலமை உடையவரா ? வாருங்கள் விளையாடலாம்.
ஆச்சாரிMar 1, 2013
ஆ | ல் | ப | மூ |
டி | வி | க | ச் |
ம் | ர | சு | சா |
வாசகர்களே . . .
1 . மேலே கண்ட பனிரெண்டு எழுத்துக்களில் பல தமிழ்ச் சொற்கள் ஒளிந்திருக்கின்றன. இதில் தாங்கள் குறைந்தது முப்பது தமிழ் வார்த்தைகளை, இந்தப் பனிரெண்டு தமிழ் எழுத்துக்களை ஒழுங்கு படுத்திக் கண்டு பிடிக்கவேண்டும்.
எடுத்துக்காட்டு : கரம் , சுபம் , ஆடி.
2 . முப்பதுக்கும் மேற்ப்பட்ட தமிழ் வார்த்தைகளை தாங்கள் கண்டுபிடித்தால் நீங்கள் தமிழில் ஆழ்ந்த புலமை உடையவரே
குறிப்பு :
1 . வார்த்தைகள் முழுக்க தமிழ்ச் சொற்களிலே இருக்க வேண்டும்.
2 . ஆங்கில வார்த்தைகளை இதில் இணைக்கக் கூடாது .
எடுத்துக்காட்டு: ரம் , ஆல், மூவி.
3 . இது உங்களை நீங்களே, தமிழ் புலமை உடையவரா எனப்
பரிசோதித்துக் கொள்ளும் முயற்சியே.
4 . முயற்சி உடையோர், இகழ்ச்சி அடையார்.
வாழ்த்துக்கள் ! ! !
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
இயன்ற வரை சொற்களை பகிர்ந்துள்ளேன். திருத்தங்கள் இருப்பின் சுட்டிக்காட்டவும். இப்படியொரு பகுதி வருவதால் தான் நம் மொழியில் எத்தனை சொற்கள் கலப்புற்றன என்பதையே சிந்திக்க முடிகின்றது. கட்டுரை ஆசிரியருக்கு நன்றி.
தமிழ்ச் சொற்கள்
1.ஆடி
2.பல்
3.வில்.
4.சாரம்,
5.ஆவி,
6.பரல், ( முத்துப் பரல், மாணிக்கப் பரல்)
7.பகல்,
8.ஆல் ( ஆல மரம் – ஆங்கிலம் அல்ல ),
9.மூச்சு,
10.சாவி ( போர்த்து கீசியச் சொல், நிலைத்து விட்ட ஒன்று ),
11.படி,
12.விரல்,
13.ஆ ( பசுவிற்கு தமிழில் )
14.மூடி,
15.ஆரம்,
16.ஆரல்
17.சுரம்
18. கரடி
19. சாமரம்
20.கல், 21.கடி, 22.மூடி, 23.கல்வி,24. சாம்பல், 25.விசும்பல்,26.ஆம்
வட மொழிச் சொற்கள்
1.பசு,
2.சுகம் ( மகிழ்ச்சிக்கான வட மொழிச் சொல் )
3.கரம் ( கை என்பதற்கான வட மொழிச் சொல் ) ( கர சேவகர்கள் )
4. விகல்பம்
5. பரம் ,6. பல்டி,7. ரவி( கதிரவன் என்பதற்கான வட மொழிச் சொல் ), 8.கபடி,9. ரகம்,10. கபம், 11.சாபம்,12. ஆச்ரம்,13. கவி,14. விசாகம்,15. சுபம்,16. கல்பம்,17. சாகரம்,18. பவிசு,19. விரகம்,20. பகடி,
அய்யா கொன்றை வேந்தன் அவர்களே,தாங்கள் தமிழில் புலமை உடையவர் என நிரூபித்துள்ளீர்கள்.தமிழ்ச் சொற்களையும்,வடமொழிச் சொற்களையும் சரியாகப் பகுத்து எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.