மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மொழிகளின் பரிமாற்றம் – 2

ஆச்சாரி

May 1, 2012

“வளி தொழில்”என்பது தமிழரின் கடல் மேலாண்மையைக் குறிப்பது. வளி=காற்று. சங்கு விளையும் பாண்டிக்கடலில் முக்குளித்து முகிழ்த்த பண்டிதர் மிகுதி. ஆம் “பண்டிதம்” என்பது நேர் இணையாக ஆங்கிலத்தில் (Profound) ஆழ்ந்த (ஆழம் அல்லது ஆழ்ந்த அறிவு ) ஞானம் உடையவர்கள் என்பதாகத்தான் பொருள்படும். இது தவிர்த்து நம் தமிழ் கூறும் நல்லுலகில் பாண்டை / பண்டு மற்றும் பண்டிதன் என்ற சொற்கள், பண்டித என்ற தொடர்புடைய வேர்ச் சொற்களாக அறிய முடியும்.

பண்டை என்பது பழைய என்று பொருள் படும். அதாவது பழமையான மட்டுமல்லாது, பழமை மாறாத நிலை என்பதாகவும் நீட்சி பெறும். அப்படிப்பட்டவர்களை பாண்டை என்பதும் வழக்கு. இது ஒரு வகையில் அழுக்கு என்பதாகவும் அதன் சார்புடைய பழமை என்பதையும் குறிப்பதால் பாண்டை என்பது பாண்டியர்/ பாண்டியன் என்பதாக, பழமை மாறாதவர்கள் என்பதனைக் குறிக்கும் சொல்லாகவும் விரிவடைகிறது. அப்படியானால் இப்படி பழமையும் ஆழமும் கண்டவர்களை, சங்கம் அமைத்த பாண்டியர்கள் தமிழ் ( ஆழம் கண்டு ) வளர்த்த சான்றோர்களை அவர்கள் கல்வி,கேள்விகளின் வரிசை ( தரம்) அறிந்து, அழைத்த சொல் பண்டிதர் என்ற சொல். அது பிற்பாடு ஒரு சாதிக்கு பெயராகவும் (பண்டிட்) வடமொழியின் முதன்மை(அல்லது மேன்மை) சொல்லாகவும் முன்னிறுத்தி தன்னிலைப்படுத்திக் கொண்டனர். ஆனால் பின் நாட்களில் ” பண்டிதம்” என்பதே வட மொழிச் சொல் என்று கற்பிதம் செய்யவும்/ நிலை நாட்டியும் விட்டனர். நாம்தான் பாண்டைகளாய் ( மனதில் புற அழுக்கு உடையவர்களாய்) பாண்டியர் ( மீனவர்களே) குலம் அழியப் பார்த்திருக்கிறோம்.

நாளும் சுவடிகள் தேடி தம் வாழ்வையும் பணியையும் அழியாச் சுவடுகளாக்கிய தமிழ் தாத்தா அவர்களை, நம் தமிழர்கள் வாழ்த்தும் போதும் – ” பண்டு தமிழுக்கு தொண்டு செய்த பெருந்தகை ” என்றுதானே பெருமிதம் கொள்கிறோம் ? இதில் உள்ள பண்டு என்பது பண்டைய / பழமையான / மிக ஆழ்ந்த ஆழமான தமிழுக்கு தொண்டு செய்தவைதான் என்பது நன்கு விளங்கும்.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்று உணராமலா பாடினார் பாரதி ?

“பூஜா “ இப்போது தமிழர்கள் வரிந்து கட்டி தம் மக்களுக்கு சூட்டும் பெயர். பூச்சூடும் பூவையருக்கு பூஜாவால் என்ன வந்தது ? ஏன் அவர்கள் சூட்டும் பூக்களில் கூஜாக்கள் வேண்டா விருந்தாளியாகத் தொங்க வேண்டும் ?  பூவரசி, பூவழகி, பூவிழி, பூங்கொன்றை, பூங்கோதை என்றெல்லாம் சூட்டிக்கொள்ள விருப்பமில்லை ? “ஜா”க்கிகள் முட்டுக்கொடுத்து தங்களின் தரத்தை மேண்மைப்படுத்தினால் ஒரு வேளை சமூக உயர்வு கிட்டுமோ  என்னவோ ?

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் முன் இந்தக் கூஜாவின் பிறப்பு எங்கே ? அதைப்பார்ப்போம். ” பூ” என்பது மலர்களைக் குறிக்கும் பல தமிழ்ச் சொற்களில் ஒன்று. மதம் என்ற நிறுவன அமைப்பிற்கு முன்னர் தமிழர்கள் நிலங்களின் வகை பிரித்து அதன் மலர்களையும் முன்னிலைப்படுத்தியே வாழ்ந்தனர். அவைகளை அந்த அந்த நிலங்களின் குறியீட்டாகவும் கொண்டானர். போருக்குச் சென்றாலும் வெற்றி பெற்றவன் ” வாகை “ சூடுவதும், தன் நாட்டின் அடையாளமாக வேப்பந்தார் அணிந்த வேந்தனாக பாண்டியனும் என்று, மலர்களின் வகையும் வரிசையும் தமிழ்  இலக்கியம் தோறும் பூத்து நிற்கும். பூஜாக்கள் வருவதற்கு முன்னர் நம் தமிழ்க் குடும்பங்களில் முல்லை, குறிஞ்சி, பூவாயி, மலர்விழி என்று இல்லங்கள் தோறும் இல்லத்தரசிகள் மணம் பரப்பினர். இன்று ? இது மட்டுமா ?

மனித குல வழக்கில், இயற்கை நியதியாக பெண் பருவம் அடைவதை, தொல்குடித் தமிழர் இன்றளவும் பெண் பூப்பெய்தி விட்டாள் என்றுதான் வழக்கில் உள்ளது. இன்று வேண்டுமானால் பூப்பு நீராட்டு என்பது மஞ்சள் நீராட்டு என்பது முன்னிலைப்படுத்தப்படலாம், இதுவும் ஒருவகை மொழி வழி இன அழிப்பே.

எனது நண்பர், பணியிடத்தில் ஷியாம் என்று பெயர் வைத்திருந்தார். நம் ஊரில் உள்ள நிறப்பிரிகை அட்டவணைப்படியும் கூட அவர் நல்ல வெளிறிய நிறமாகத்தான் இருந்தார். அவரிடம் நான், நீங்கள் உங்கள் பெயருக்கு எதிரான நிறமாக இருக்கிறீர்கள் என்றேன். அவர் என் பெயருக்கும் நிறத்திற்கும் என்ன என்றார். பெயரின் பொருள் தெரியாமலே பெயருக்கு உரியவரும், பெற்றவர்களும் வைக்கிறார்கள், இருக்கிறார்கள். இது அறியாமையா அல்லது அறிவீனமா ? என்று தெரியவில்லை. நண்பரிடம், ஐயா உங்கள் பெயரின் பொருள் கருமை. அப்படியானால் உங்களை கருப்பையா என அழைக்கலாம். அதுவும் தவறில்லை. தமிழர் வழிபாட்டுத் தெய்வங்களில் கருப்பர் முதன்மைக் காவல் தெய்வம் என்றேன். இன்றைக்கு ஐம்பது ஆண்டுகள் முன்னர் வரை கருப்பன்/ கருப்பர் என்பது நம் பெயர்களாக இருந்தன. அதுமட்டுமல்ல பாரதியார் பாடிய வழித்துணைப் பாடலில் கூட கருப்பரை மறக்கவில்லை :

கேள்வி: காட்டு வழி போகையிலே…..! அண்ணே.. கள்ளர் பயமிருந்தால்…?

பதில் : நம்ம வீட்டு குல தெய்வம் கருப்பர் வந்து காக்குமய்யா…!!

என்று மண் மணம் மாறாத தமிழர் பண்பாட்டுப் பதிவினை அவர் பாடலிலும் பார்க்கலாம்.

இன்று சாஸ்த்தாவாகிப்போன ஐயனார் அப்பன் அவரது காவல் தெய்வங்களாக இருப்பது சின்னக்கருப்பரும் கடுத்த கருப்பரும்தான். கடுத்த என்பது கடுமையான, வலிமையான என்பது மட்டுமல்ல வயதில் சின்னவருக்கு மூப்பாக இருப்பதாலும்தான்.

மொழி வளர்ச்சிக்கு பரிமாற்றம், இன்றியமையாதது. ஆனால் ஒரு இனத்தின் அழிப்பிற்கு மொழியின் அடையாள அழிப்பும் இன்றியமையாததாகி விடுகிறது. உரிமைப்பொருளை இழந்தவர்கள் ஊமையாக இருந்தால் மீட்கவே முடியாது. நாம் மொழியால் ஊமையாகவும், ஊனமாகவும் உள்ளபடியால் விழிப்புணர்ச்சியாவது அவசியமாகிறது.

முயன்றால் வாகை சூடலாம்.

பரிமாற்றம் தொடரும்…

I never saw http://essayprofs.com/ such a country of readerspeople sitting on benches, in the metro, etc

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “மொழிகளின் பரிமாற்றம் – 2”
  1. rajkumar says:

    சாத்தன் தான் சாஸ்தாவாகிவிட்டது. சாத்தன் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டு அபிஷேக முறை திணிக்கப்பட்டு விட்டது. சாத்தன் வழிபாடு பூட்டன் வழிபாடு என்று பூசிக்கப்பட்டது [பூசை தமிழ் தான்] நம் நடுக்கல் அய்யனார் அப்பனுக்கு தான். பச்சை மாமிசமும், காய் கறிகளும் வைத்து பூசித்தவன் வீழ்ந்து போனது தானே நம் வரலாறு.

  2. vivek says:

    மிக அருமையான பதிவு.

அதிகம் படித்தது