புகையிலை – தகவல்கள், பழக்கத்தைக் கைவிட எளிய யோசனைகள் .
ஆச்சாரிJun 15, 2013
உலகளவில் புகையிலைப் பழக்கத்தினால் ஏற்படக்கூடிய நோய்கள் ஒன்று மட்டுமே.
தடுக்கப்படக் கூடிய நோய்கள் மற்றும் இறப்புகளில் மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. உலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 55 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புகையிலைப்பழக்கத்தினால் இறக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் புகையிலைப் பயன்பாட்டினால் இறக்கின்றனர். இது எயிட்ஸ் நோய், காசநோய் மற்றும் மலேரியா போன்ற நோய்களினால் ஏற்படும் மொத்த இறப்புகளைக் காட்டிலும் எண்ணிக்கையில் மிக அதிகமாகும்.
- ஒவ்வொரு நாளும் 2200 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் புகையிலைப் பயன்பாட்டினால் இறக்கின்றனர்.
- இந்தியாவில் ஏற்படும் புற்றுநோய்களில் புகையிலைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய் 100 க்கு 40 நோயாளிகளுக்கு உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதிலும் சுமார் 95 சதவீதம் வாய்ப்புற்று நோய்கள் புகையிலைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடியதாகும்.
- மூளை செயலிழக்கும் வாத நோய், மாரடைப்பு நோய், நுரையீரல் நோய்கள், கண்பார்வை இழப்பு மற்றும் இதர நோய்கள் புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படுகின்றன.
புகையிலைப் பழக்கத்திற்கு உட்பட்டோர் பொதுவாக பத்து வருடங்கள் அதிகமாக வயது முதிர்வு ஏற்படுவதாக உணர்வது மட்டுமன்றி புகையிலை உபயோகிக்காதவர்களைக் காட்டிலும் பத்து வருடம் முன்னதாகவே இறந்து விடுகின்றனர்.
இந்தியாவில் காணப்படும் பல்வேறு வகை புகையிலைப் பொருட்கள்
புகைக்கப்படும் புகையிலையின் பல்வேறு வகை
சிகரெட்டுகளில் 4000 க்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்களும், 200 வகையான விசப்பொருட்களும், மற்றும் புற்றுநோயை உருவாக்கும் 60 ரசாயன பொருட்களும் அடங்கியுள்ளன.
மேலும், புகையில்லாத பல்வேறு வகை புகையிலைப் பொருட்கள் உள்ளன. முக்கியமாக ஜர்தா, கைனி, குட்கா, புகையிலையுடன் கூடிய பான் மசாலா, மாவா, மிஸ்ரி மற்றும் ஃகல் போன்றவை மென்று சுவைக்கக்கூடிய புகையிலை வகைகள் ஆகும்.
புகையிலை பயன்பாட்டால் ஏற்படக்கூடிய மிக முக்கியமான நோய்கள்:
அதிக விளைவை ஏற்படுத்தக்கூடிய நோய்கள்:
- நெடுநாள் சுவாசப்பாதை நோய்கள், ஆஸ்துமா, காசநோய் மற்றும் அடிக்கடி ஏற்படும் சுவாசப்பாதை நோய்கள்.
- இருதய இரத்தக் குழாய் நோய்கள்
- நுரையீரல் புற்றுநோய் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும் அழுகிய கால் புண்கள்.(Buerger’s Disease)
பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல் நலக்கோளாறுகள்:
- குழந்தை கருத்தரிப்பு குறையும் பாதிப்புகள்.
- தானாகவே நிகழும் கருச்சிதைவுகள்.
- எடை குறைந்த குழந்தைகள் குழந்தை பிறக்கும் போது இறத்தல்.
- கர்பப்பை வாய் புற்றுநோய்.
மூலாதாரம் – சுகாதாரம் மற்றும் மனித சேவைகளைச் சார்ந்த அமெரிக்க நிறுவனம் புகைப் பிடிப்பதனால் ஏற்படும் உடல் நல சீர் கேடுகள் பொது அறுவை சிகிச்சை நிபுணரின் அறிக்கை, அட்லாண்டா நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், தேசிய நெடுநாள் நோய்கள் தடுப்பு மற்றும் நல மேம்பாட்டு மையம், புகைத்தல் மற்றும் உடல் நலம் பற்றிய அலுவலகம், அட்லாண்டா 2004.
புகையிலை யாரையும் விட்டு வைப்பதில்லை – மற்றவர்கள் புகைக்கும் பொழுது வெளி வரும் புகைகூட நச்சு தன்மையுடையது. உயிருக்கு ஊறு விளைவிக்கும்.
அடுத்தவர் புகைக்கும் பீடி அல்லது சிகரெட்டில் இருந்து வெளி வரும் புகை தான் இரண்டாம் தர புகையிலை புகை எனப்படும் ஆகும். (Second- hand Smoke)
- இவ்வகை இரண்டாம் தர புகையிலை புகை என எல்லோருக்குமே பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. வயது வந்தோர், புகைப்பழக்கம் இல்லாதவர்கள், இளம் குழந்தைகள், மற்றும் பச்சிளம் குழந்தைகள், ஆகியோர் இதனால் பாதிக்கப் படுகிறார்கள்.
புகைப்பிடிப்போர் அருகில் இருப்பவர்களுக்கு ஏற்படும் நோய்கள்
(Second- hand smoking)
அதிக விளைவை ஏற்படுத்தக்கூடிய நோய்கள்
- நெடுநாள் சுவாசப்பாதை நோய்கள், ஆஸ்துமா,
காசநோய் மற்றும் அடிக்கடி ஏற்படும் சுவாசப்பாதை
நோய்கள்.
- இருதய இரத்தக் குழாய் நோய்கள்.
- நுரையீரல் புற்றுநோய் திடீர் சிசு மரணம்
உண்டாக்கும் நோய்கள் (கட்டில் இறப்பு)
பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல் நலக்கொளாறுகள்
- குழந்தை பிறப்பு குறையும் பாதிப்புகள்
- எடை குறைந்த குழந்தைகள்
- குழந்தை பிறக்கும் கர்பப்பை கழுத்துப் பகுதியில் புற்றுநோய்.
புகையிலையைக் கைவிடுதல்
நலப்பணியாளர்கள், சமுதாயத்தில் புகையிலை மற்றும் புகைப்பழக்கம் உள்ள ஒவ்வொருவரையும் கண்டறிந்து, அவர்களுக்குத் தெளிவான, மற்றும் உறுதியான தனிப்பட்ட அறிவுரைகளை வழங்குவதன் மூலம் அவர்கள் விரைவில் அதைக் கைவிடுவதற்கு உதவ வேண்டும்.
புகையிலைப் பழக்கத்தைக் கைவிடத் தயாராக புகையிலைத் தொடர்ந்து உபயோகிப்பதால் உடலில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளைப் பற்றியும் தாங்கள் கல்வி அளிக்க வேண்டும். (உ.ம்)புகையிலை வாங்குவதற்கு பணத்தை செலவு செய்யாவிட்டால், அப்பணத்தில் குடும்பத்தின் அடிப்படை செலவுகளான நல்ல உணவு, துணிகள், குழந்தைகளின் கல்வி போன்றவற்றை மேற்கொள்ள முடியும் என்பதை எடுத்துக்கூறுங்கள்.
நான் உங்களுடைய நலப்பணியாளர் அல்லது உங்களைப் பற்றியும் உங்கள் உடல் நலத்தைப் பற்றியும் யார் அக்கறை கொள்வார்களோ, அது போல், நீங்கள் புகையிலை பழக்கத்தை கைவிடுவதற்கு உதவி செய்ய விழைகிறேன். ஏன் எனில், புகையிலைப் பழக்கத்தை கைவிடுதல் என்பது உங்கள் உடல் நலத்திற்கும் மற்றும் உங்களை சுற்றி உள்ளவர்களின் உடல் நலத்திற்கும் மிகவும் இன்றியமையாது.
அதிக தாமதாகிவிடவில்லை என்று நீங்கள் உணர வேண்டும் என நான் நினைக்கிறேன். புகையிலைப் பழக்கத்தை எந்த வயதில் கைவிட்டாலும் கூட உங்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் அடையும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். நான் உங்களுடைய நலப்பணியாளர் என்ற முறையில், நீங்கள் எப்போது புகையிலை பழக்கத்தை கைவிடத்தயாராக இருகிறீர்கள் என நான் தெரிந்து கொண்டால்தான், நான் உங்களுக்கு முழுமையாக உதவ முடியும் என கூறுங்கள்.
புகைப்பழக்கத்தை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள்
புகைப் பழக்கத்தை கைவிட்டால் நீங்கள் சுகமாக இருப்பதையும், உணவு சுவையாக இருப்பதையும் உணரத் துவங்குவீர்கள்.
எனவே புகைப்பழக்கத்தை கைவிட்ட
2மணி நேரத்திற்குப் பின்:
உங்கள் உடலை விட்டு ‘நிகோட்டின்’ வெளியேறிவிடும்.
12 மணி நேரத்திற்குப்பின்:
உங்கள் உடலை விட்டு கார்பன் மோனாக்சைடு வெளியேறி, உங்கள் நுரையீரலின் வேலைப்பாடு மேன்மையைத் துவங்கும்.
2 நாட்களுக்குப் பின்:
வாசனை சக்தி மேம்படும். உடலின் செயல்பாடுகள் எளிதாகும். மேலும் நுரையீரல்களுக்குள் உள்ளே காற்று அதிக அளவில் செல்லும்.
2மாதங்களுக்குப் பின்:
நுரையீரல்கள் அதிக திறனுடன் வேலை செய்யும். உள்ளிருக்கும் சளியை வெளியே உந்தித் தள்ள முடியும். உடலின் கை, கால் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் நன்கு ஏற்படும்.
12 மாதங்களுக்குப் பின்:
தொடர் புகைப்பழக்கம் உள்ளவராக இருந்தால் கூட இருதய நோய்கள் தாக்கும் அபாயம் பாதியாக குறைந்துவிடும்.
10வருடங்களுக்குப் பின்:
தொடர் புகைப்பழக்கம் இருந்தால் கூட நுரையீரல் புற்றுநோய் தாக்கும் அபாயம் பாதியாகக் குறைந்துவிடும்.
15வருடங்களுக்குப் பின்:
புகைப்பழக்கம் இல்லாத மனிதனுக்கு இருப்பது போல மாரடைப்பு மற்றும் மூளை செயலிழக்கும் வாதநோய் போன்ற நோய்கள் தாக்காது.
புகைப்பழக்கத்தை கைவிட உதவும் சில யுத்திகள்:
- மிகவும் உறுதியுடன் இருங்கள்.
- கைவிடுவதற்கு ஒரு தேதியை நிர்ணயித்துக்கொண்டு, அதை கண்டிப்பாக கடைப்பிடியுங்கள்.
- புகைப்பழக்கத்தைத் தூண்டக்கூடிய புகையிலைப் பொருட்கள், தீமூட்டிகள், தீப்பெட்டிகள், மற்றும் சாம்பல் தட்டுகள் போன்றவற்றை தூக்கியெறிந்து விடுங்கள். அவை உங்களுக்குத் தேவைப்படாது.
- உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் புகைப்பழக்கத்தை கைவிடுவதைத் தெரிவியுங்கள். அதற்கு அவர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுங்கள்.
- உங்களைப் புகைப்பிடிக்கத் தூண்டும் சந்தர்ப்பங்களைக் கண்டறிந்து, அவற்றை தவிர்த்து விடுங்கள். உதாரணத்திற்கு, பீடி விற்கும் கடையைக் காண நேரிடுதல் அல்லது யாரேனும் புகைப்பதைப் பார்க்க நேரிடுதல் அல்லது புகையிலையைப் பயன்படுத்துவதைக் காண நேரிடுதல்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
very useful with photos
keep it up & Thanks for your assignment
Regards..
Ramesh
Bangalore
0 8970039857
திருமதி இ.ரா.கலைச்செல்வி அவர்களின் `புகையிலை – தகவல்கள், பழக்கத்தைக் கைவிட எளிய யோசனைகள்’. மிகச்சிறந்த பயனுள்ள கட்டுரை.
வாழ்த்துக்கள்.
– வெ.மதியழகன்