வர்மக்கலை மருத்துவர் கிலாட்சன் அவர்களிடம் நேர்காணல்
ஆச்சாரிDec 15, 2012
தற்காப்புக் கலை என்று மட்டுமே அறியப்பட்டு வந்த வர்மக் கலை மருத்துவத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதைப் பற்றி முழுமையாக அறிய வர்மா மருத்துவரான கிலாட்சன் அவர்களுடனான நேர்காணல்.
கே.வர்மா கலையை நீங்கள் எவ்வாறு கற்றீர்கள்? இதற்க்கான தனிப் பள்ளிகள் இருப்பதாய் தெரியவில்லையே?
ப. ஆம். வர்மம் என்பதற்கான தனிப் பள்ளிகள் எதுவும் கிடையாது. சித்தமருத்துவம் பயிலும் மாணவர்கள் வர்மம் என்ற ஒரு எழுத்துவழி பாடம் மட்டும் படிக்கின்றனர் ஆனால் அதை அவர்கள் மருத்துவ முறையில் பயன்படுத்துவது கிடையாது. நான் இதனை எனது தந்தை வழியாகக் கற்றுக்கொண்டேன், இது தலைமுறை வழியாக கற்றுக்கொடுக்கப்படும் ஒன்று. அந்த வகையில் நான் மூன்றாவது தலைமுறை.
கே. இக்கலையை பெண்களுக்கு கற்றுத்தருவீர்களா?
ப. பெண்களுக்கும் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் இந்த மருத்துவ முறையில் விரல்களினால் மிகுதியான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும், இதில் பெண்களை விட ஆண்கள் எளிதாக தேவையான அழுத்தத்தை கொடுக்கலாம்.
கே. இந்த வர்மா மருத்துவ முறை மூலம் எவ்வகையான வியாதிகளை குணப்படுத்தலாம்?
ப. இதனால் மிக முக்கியமாக குணப்படுத்தக்கூடியது என்பது கழுத்து எலும்புத் தேய்மானம், இடுப்பு எலும்புத் தேய்மானம், தோல்பட்டை எலும்பு நழுவல், மூட்டு எலும்பு நழுவல், சைனஸ் ஆகிய வியாதிகள் முற்றிலுமாக மிக குறைந்த செலவில் குணப்படுத்தலாம்.
கே. எலும்பு சம்பந்தமான வியாதிகளின்றி நரம்பு சார்ந்த நோய்களை குணப்படுத்தலாமா?
ப. இடுப்பு எலும்பு டிஸ்க் எனும் இரு எலும்பிற்கு நடுவில் கால்களுக்கு செல்லும் நரம்புகள் இருக்கும். அந்த எலும்பு நகர்ந்து விட்டால் நரம்பினில் அழுத்தம் ஏற்ப்பட்டு கால்களில் மிகுந்த வலி, குடைச்சல், ரத்தஓட்டத் தட்டுப்பாடு ஆகியவை இருக்கும். இவைகளை வர்மத்தினால் குணப்படுத்தலாம்.
கே. எலும்பு இடமாற்றம், எலும்பு முறிவுகளை குணப்படுத்த முடியுமா?
ப. எலும்பு இடமாற்றத்தை வர்மா மூலம் ஆங்கில மருத்துவ காப்புத்தட்டு, திருகாணி போன்று எதுவும் இன்றி எளிய முறையில் குணப்படுத்தலாம். எலும்பு முறிவை வர்மா மூலம் ஒன்றும் செய்ய முடியாது ஆனால் ஆங்கில வைத்திய முறையில் மாவுக்கட்டுப் போட்டு எலும்பு ஒட்டிய பின் அதனை அசைத்து விரைவில் இயல்பு வாழ்கையைத் தொடர வர்மா உதவும்.
கே. ஆர்திரிடிஸ் எனும் எலும்புத் தேய்மானத்தை வர்மா மூலம் குணப்படுத்த முடியுமா? எந்த வயதில் இது ஏற்படும் அபாயம் உள்ளது?
ப. ஆர்திரிடிஸ் என்பது எலும்பு தேய்மானம் என்று பொதுவாக கூறப்படுகிறது ஆனால் உண்மையில் எலும்பு தேயாது. நமது சீரற்ற உணவு முறைகளினால் இரு எலும்புகளின் இடையே உள்ள சொளினிட் என்னும் திரவம் நாளடைவில் குறைந்து எலும்புகளின் இடையே ஏற்படும் உராய்வே ஆர்திரிடிஸ். இவை பொதுவாக 40 வயதிற்கு மேல் வரும் ஆனால் தற்போது 30,35 வயது கணிப்பொறியாளர்கள் போதிய உடற்ப்பயிற்சியின்றி ஆர்திரிடிஸால் அவதிக்குள்ளாகின்றனர்.
கே. எலும்பு இட நழுவல் சரியாக எந்த இடத்தில் உள்ளது என்று கண்டுபிடிக்க உங்களுக்கு x-ray தேவைப்படுமா?
ப. இல்லை x-ray தேவையில்லை. வர்மாவில் தொட்டுப் பார்த்தே எந்த இடத்தில் எலும்பு நழுவல் இருக்கிறது என்பதைக் கண்டுபிக்கலாம். முதலில் எலும்பு பாதிக்கும்-பின் நரம்பு பாதிக்கும்-அதன் பின்னர் தான் வலி தெரியும். அந்த வகையில் நோயாளியே இந்த இடத்தில் வலி இல்லை என்றாலும் நாங்கள் சரியாக எந்த இடத்தில் பிரச்சனை என்பதை தொட்டுப் பார்த்து கூறிவிடுவோம் . கீழே விழுந்து சிலருக்கு எலும்பு நசுங்கிவிடும். இந்த பிரச்சனைக்கும் வர்மாவில் கத்தி இன்றி தீர்வு இருக்கிறது.
கே. சிலர் கொஞ்ச நேரம் உட்கார்திருந்தாலே கால் வலிக்கிறது என்கிறார்கள் அது எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன ?
ப. சிலர் தூங்கும் போது கால் தசை(calf muscle)பிடிப்பு ஏற்படும். அது எதனால் ஏற்படுகிறது என்றால் முதலில் இதயம் ரத்தத்தை சீர்படுத்துகிறது. இரண்டாம் இதயம் எனப்படும் கால் தசையானது ரத்த ஓட்டத்தை சீர்படுத்த வேண்டும். அது சரியாக நடைபெறாத போது தான் கோரகிலி எனும் அந்த வலி ஏற்படுகிறது. இதனை கால் வர்மப் புள்ளிகளில் நீவி விடுவதால் நரம்புகளில் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்ப்படுத்தலாம். சிலருக்கு இரு விரல்கள் சிக்கி கொள்ளும். அதையும் வர்மாவில் நீவி விட்டு சீர்படுத்தலாம்.
கே. உங்களிடம் கணிப்பொறியாளர்கள் கை வலி என்றும் அணுகுகின்றனரா? எதனால் ஏற்படுகிறது?
ப. கை விரல் வலி என்றும் வருகின்றனர். கழுத்து அசைவற்று இருப்பதினால் கழுத்து எலும்பு தேய்மானம் ஏற்படும் .கழுத்திலிருந்து தான் கைகளுக்கு நரம்பு செல்கிறது. கை பாதித்திருந்தால் கண்டிப்பாக கழுத்தும் பாதிக்கப்பட்டிருக்கும்.
கே. நீங்கள் மருந்து ஏதேனும் கொடுகின்றீர்களா? அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரைகள்?
ப. மருந்து எதுவும் கொடுப்பதில்லை. வரும் அனைவர்க்கும் மிக எளிய உடற்பயிற்சி அவசியம் தேவை என்று உடற்பயிற்ச்சியின் அவசியத்தை கூறுகிறேன். பின் வாயு நிறைந்த உருளைக்கிழங்கு, வாழைக்காய் முற்றிலுமாக தவிர்க்க வலியுறுத்துகிறேன். காற்றோட்டமுள்ள நடைபயிற்சி மேற்கொள்ள வலியுறுத்துகிறேன். மனதை குழப்பமின்றி,மன அழுத்தமின்றி வைத்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்று.
கே. ஒருவர்க்கு நோய் வராமல் இருக்க முன் எச்சரிக்கையாக எதைக் கடைபிடிக்க சொல்கிறீர்கள்?
ப. ஒருவருக்கு 25 வயதில் முழு உடல் வளர்ச்சி ஏற்பட்டுவிடும். 25 முதல் 40 வயதில் உடற்பயிற்சி, சீரான உணவு முறை மேற்கொண்டு புகையிலை போன்றவற்றை தவிர்த்தால் நிச்சயம் அதன்பின் நல்ல உடல்நிலை கொண்டு இனிய வாழ்வை வாழலாம்.
மேலும் சரியான நேரங்களில் உணவு எடுத்துகொள்வது மிக முக்கியமான ஒன்று இல்லையெனில் வயிற்றில் வாயு, புண் போன்றவை ஏற்ப்படும் அபாயம் உள்ளது.
கே. தற்காப்புக் கலை என்றே அறியப்படும் வர்மக் கலையின் பிறப்பிடம் எது?
ப. முற்காலத்தில் கன்னியாகுமரி(கேரளா சேர்ந்தது) தான் வர்மத்தின் பிறப்பிடம். வர்மத்தை பற்றிய ஓலைச்சுவடிகள் யாவும் இன்றைய கேரளா, கன்னியாகுமரி பகுதிகளில் பிரிந்து இருக்கிறது. ஆரம்ப காலத்தில் வர்மம் தற்காப்புக் கலையாக மட்டுமே பயன்படுத்தப் பட்டு வந்தது பின்னர் அதனை மருத்துவக்கலையாக பயன்படுத்தப்பட்டது.
கே. நீங்கள் தலைமுறை தலைமுறையாக வர்மத்தை கற்று வருகிறீர்கள், மற்றவருக்கு கற்றுத்தராததின் காரணம் என்ன?
ப. வர்மம் ஒரு தற்காப்புக் கலையாதலால் அதனை தவறாக அல்லது கோபத்தில் கடுமையாக பயன்படுத்தினால் மரணம் நேரும் அபாயம் உள்ளது. எனவே இதனை மருத்துவமாகபயன்படுத்தும் போது மிக பொறுமையாக கவனமாக செயல்படவேண்டும். பெரும்பாலான இளம்வயதினர் அதிகம் கோபம் கொள்வர். இதனைக் கற்று பொறுமையாக செயல்படும்பக்குவமற்றவர்களாய் இருப்பர்.மேலும் மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாகவே மற்றவர்க்கு இதனை கற்றுத் தருவதில்லை. நான் இதனை ஆறு வருடம் எனது தந்தையிடம் கற்றுக்கொண்டேன் பின்னர் இரண்டு வருடம் அவரின் மேற்பார்வையில் சிகிச்சை புரிந்தேன். அதன் பின்னர் தான் தனியாக மருத்துவம் புரியத் துவங்கினேன்.
கே. எலும்பு நழுவல்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் லட்சக் கணக்கில் செலவு ஆகிறது மேலும் பல நாள் கழித்து தான் இயல்பு வாழ்க்கை மேற்கொள்ள முடியும். வர்மா முறையில் எப்படி இருக்கும்?
ப. ஆங்கில மருத்துவ முறையில் ஆகும் செலவை விட வர்மா முறையில் எலும்பு நழுவல்களுக்கு மிகக் குறைந்த செலவில் பூரண குணம் செய்ய முடியும். மேலும் இதில் இன்று சிகிச்சை முடிவடைகிறதென்றால் அடுத்த நாளிலிருந்து இயல்பு வாழ்கையைத் தொடரலாம்.
இந்த வர்மம் மருத்துவ முறையின் வாயிலாக எலும்பு நழுவல், நரம்பு சம்பந்தமான வியாதிகள் யாவும் கத்தி இன்றி ரத்தம் இன்றி பரிபூரணமாக குணமடைய வழியுள்ளது.
தொடர்புக்கு.
கிலாட்சன்- 9840111722 / 9790989440
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
he is not worthful what he spoke here
i went 2 him for wrist pain, he asking xray, mri report, bloodtest (he does’nt ever understand that report english)
he is charging 500 rs for consultation
i trust verma method but he is worthful person
Gladson is really a great talented person
Very very super
எங்கள் தாய் மொழியில் கலப்புடன் கருத்துப் பதிவிட்ட அன்பருக்கு நன்றி. வேற்று மொழியினை முடிந்தவரை முயற்சி செய்த உங்களைப்போன்றவர்கள் தான் தமிழை வளர்க்கின்றனர். நன்றி. லெங்த் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு எங்கள் தாய்த் தமிழில் “விரிவாக” “நீளமாக” என்றும் இடம் கருதி பொருள் விளக்கம் தரும் வகையில் சொற்கள் உள்ளது.
மிக சிறப்பான நேர்காணல். நன்றி சிறகு.
thampi romba length ah poguthu……..