மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெற்றோர்களையும் மாணவர்களையும் ஏமாற்றும் கல்விக் குழுமங்கள்

கி.ஆறுமுகம்

Jun 27, 2015

kalvi2நமது நாட்டில் கல்வியை வியாபாரமாக மாற்றிய மாபெரும் பெருமை நமது அரசியல் கட்சிகளையும், அதில் இருப்பவர்களை மட்டும் சேர்வதில்லை, மக்களையும் சேரும். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும், பிள்ளைகள் நன்கு படித்து நல்ல வேலைக்குச் சென்று சமுதாயத்தில நல்ல நிலையில் முன்னேற வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதனால் இவர்கள் எந்தப் பள்ளி மற்றும் கல்லூரி சிறந்தது என்று தேடுகிறார்கள். இவர்கள் தேடலை பயன்படுத்தும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள், கல்வியை வியாபாரமாக மாற்றுகிறார்கள்.

பெற்றோர்களைக் கவர்வதற்கு தங்கள் பள்ளியில் பயின்ற மாணவர்கள் இத்தனை சதவிகிதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர், இந்த ஆண்டு எங்கள் கல்விக் குழுமம் இத்தனை சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது என்று விளம்பரம் செய்கிறார்கள். இந்த கவர்ச்சியினைப் பார்க்கும் பெற்றோர்கள் சிறிதும் சிந்திப்பதில்லை, நாம் பிள்ளைகளை சேர்க்க இருக்கும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைப் பற்றிய விவரங்களை அறிய Regional Office of Education என்ற அரசு அலுவலகம் ஒன்று இருப்பதை மறந்துவிடுகின்றனர். அந்த அலுவலகம் சென்று கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் பெறாமல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செய்யும் விளம்பரங்களை மட்டும் பார்த்துவிட்டு பிள்ளைகளைக் கொண்டுச்சென்று படிப்பதற்குச் சேர்க்கின்றனர்.

kalvi5இந்தத் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தங்களது கல்வி பயிற்றுவிக்கும் முறையே சிறந்தது என்று சமுதாயத்தில் மக்களிடம் சிறிது நல்ல பெயர் பெற்றுவிட்ட பின்னர், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் நடத்தும் கல்விக் குழுமங்கள் இன்னும் பல கல்லூரிகள், பல பள்ளிகளை பல இடங்களில் புதியதாகத் தொடங்குகின்றனர். அந்தப் புதியதாகத் தொடங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு AICTE(All India Council of Technical education)என்பதும், பள்ளிகளுக்கு Regional Office of Education என்பதும் உள்ளது. இங்கு சென்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கும் கல்லூரி மற்றும் பள்ளியைப் பற்றிய முழுவிவரங்களை தெரிந்து கொள்வதில்லை. அந்தக் கல்வி குழுமத்திற்கு சமூகத்தில் நல்ல பெயர் உள்ளது, நல்ல தேர்ச்சி சதவிகிதம் உள்ளது, அதில் படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று உள்ளனர் என்பதை மட்டுமே பார்க்கின்றனர்.

kalvi3ஆனால் இந்தக் கல்விக் குழுமங்கள், ஒரு இடத்தில் இயக்கும் தனது பள்ளியை மற்றும் கல்லூரிக்கு அரசிடம் இருந்து பெறவேண்டிய அனுமதிகள் அனைத்தையும் முறையாகப் பெற்றுக் கொண்டு, அதன் அடிப்படையில் பிறகு புதியதாக துவங்கும் பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட வேண்டிய அனுமதியையும், வழிமுறைகளையும் அரசிடமிருந்து பெறுவதில்லை. அதன் பழைய அனுமதியை பயன்படுத்தி, அதன் பெயரை பயன்படுத்தி ஒரு இடத்தில் இருந்து மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்களைக் கொடுத்து பெற்றோர்களையும் அரசையும் ஏமாற்றம் செய்கின்றனர்கள். இது போன்று தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர் ஒருவர் அந்தப் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்குச் செல்லும் போது, அவர் பயின்ற பள்ளி வழங்கிய சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட புதிய பள்ளிகள், சில மாணவர்களின் பெற்றோரிடம், நீங்கள் Regional Office of Education அலுவலகம் சென்று உங்கள் மகன் அல்லது மகள் பயின்ற பள்ளியையும், அது வழங்கிய சான்றிதழ்களையும் சரி பார்த்துக் கொண்டு வரவேண்டும் என்று செல்லும் போதுதான் அவர்கள் செய்யும் மோசடிகள் பெற்றோர்களுக்குத் தெரியவரும்.

pasanga-paavam6அப்போது புதிய பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கு முயலும் போது கடும் மனஉளைச்சலுக்குத் தள்ளப்படுகின்றனர் பெற்றோர்கள். மேலும் பெற்றோர்கள் சிலவற்றை சிந்தித்துப் பார்ப்பதும் இல்லை, ஒரு காலத்தில் தனியார் பள்ளிகள் துவங்கும் போது matric என்ற புதிய கல்விமுறை, அரசு பள்ளிகளைத் தாழ்த்தி தாங்கள் வழங்கும் கல்வியே சிறந்தது என்று வியாபாரம் செய்தது. தற்போது CBSE என்று அதிகம் உள்ளது, matric சென்றுவிட்டது. CBSE க்கு அடுத்த படியாக ICSE மற்றும் IB என்ற Boarding School படிப்புகள் உள்ளது. இதில் தற்போது பணம் சம்பாதிக்கும் தனியார் கல்வி குழுமம் தற்போது மேலும் முன்னேறி International School, Global School என்று கல்வியை வியாபாரம் செய்கின்றனர். கல்வி என்பதைக் காட்டி பெற்றோர்களை மோசடி செய்கின்றனர்.

இந்தத் தனியார் கல்விக் குழுமம் அனைத்தும் மிகவும் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குகிறதா?, அப்படி தரமான சிறந்த கல்வியை வழங்குகிறது என்றால், எதற்காக மிக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. இவர்கள் சமூகத்தில் தங்களையும் தங்கள் கல்விக் குழுமங்களை முன்னிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று மட்டும்தான் சிந்திக்கின்றனர் தவிர, மாணவர்களை சிறந்த முறையில் உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிந்திப்பதில்லை. அவர்களின் வியாபாரம் சிறக்க மாணவர்களை கருவியாக்குகின்றனர். படி படி என்று அழுத்தம் கொடுக்கின்றனர். பெற்றோர்களையும் மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றனர். அதில் பணிபுரியும் ஆசிரியர்களையும் மன அழுத்தம் மற்றும் பணிச்சுமை அதிகரிக்க செய்கின்றனர்.

பல தனியார் கல்விக் குழுமத்துடன் தாங்கள் போட்டி போட்டு, தாங்கள் தான் சிறந்தவர்கள் என்று நிரூபிக்க போராடுகின்றனர். ஏன் தனியார் கல்விக் குழுமம் மட்டும் தான் சரியான கல்வியை வழங்குகிறதா?, அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்றவர்கள் முட்டாள்களாக இருக்கிறார்களா?. 20 அல்லது 30 வருடத்திற்கு முன் எத்தனைத் தனியார் கல்விக் குழுமம் இருந்தது. அதில் படித்தவர்களா நமது நாட்டில் இன்று உள்ள விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் பயின்றவர்கள் தானே? சிறிது சிந்தித்து பாருங்கள்.

kalvi1இன்று தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்களது செயல்திறனை, அரசுப் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள், பின்னால் வரும் சமூகத்தில் யார் சிறந்து செயல்படுவார்கள் என்பது புரியும். கல்வி என்பது மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கிறதா இன்றைய கல்வி. இதனைத் தான் ஐன்ஸ்டின் கூறினார் “education is not the learning of facts. It’s Rather the training of the mind to think” அதிகம் படித்தவன் நான், அதிக மதிப்பெண் பெற்றவன் என்பவர்கள் எல்லாம் வாழ்க்கையில் என்ன சாதித்திருக்கின்றனர். அவர்கள் ஒரு நிறுவனத்தில் மாத வருமானத்திற்கு வேலை செய்கிறவர்களாக, மட்டும்தான் இருப்பார்கள். அதிகம் படிக்காதவர்கள் தமது அறிவாற்றலினாலும், சிந்தனைத் திறமையினாலும் விஞ்ஞானிகளாகக் கூட உருவாகி இருக்கிறார்கள். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியைத் தேர்ந்தெடுக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெற்றோர்களையும் மாணவர்களையும் ஏமாற்றும் கல்விக் குழுமங்கள்”

அதிகம் படித்தது