மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பொறியியல் கல்வி பயின்றால் வேலை பெற என்ன செய்ய வேண்டும் – தொடர் – 2

பா. வேல்குமார்

Sep 17, 2016

பொறியியல் கல்வி படித்து விட்டு, வேலைக்கான தகுதித் திறனை வளர்ப்பதற்கு என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

பொறியியல் பட்டப்படிப்பில் பல்வேறு துறைகள் இருந்தாலும், ஒவ்வொரு துறையிலும் மென்பொருளின் பங்களிப்பு இன்றியமையாத் தேவையாக உள்ளது. மென்பொருள் சம்பந்தமான படிப்பு எவ்வாறு ஒவ்வொரு பொறியியல் படிப்பிலும் துறை ரீதியாக பயன்படுத்தப்படுகிறது என்பது இன்று கல்லூரிகளில் பொறியியல் படிப்பைப் படிக்கும் அநேக பட்டதாரிகளுக்குத் தெரிவதில்லை.

siragu-engineering2-1

கிராமப்புறத்தில் பொறியியல் கல்வி பயிலும் பல பொறியியல் பட்டதாரிகளுக்கு இன்னும் தன்னுடைய துறை ரீதியான, வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு என்ன மென்பொருள் சம்பந்தப்பட்ட படிப்பினைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவில்லை.

மேலும் இன்று படித்து முடித்துவிட்டு வெளியே வரும் பொறியியல் பட்டதாரிகள் அனைவருமே எதிர்பார்ப்பது கை நிறைய சம்பளம்.

அவ்வாறு கை நிறைய சம்பளத்தைப் பெறுவதற்கு குறைந்தது நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்பதை ஒவ்வொரு நிறுவனத்திற்கும் நேர்முகத்தேர்விற்கு செல்லும்போதுதான், பொறியியல் கல்வியைக் கற்ற நம் பட்டதாரிகளுக்குப் புரிகின்றது.

பொறியியல் துறை ரீதியான மென்பொருளின் பங்களிப்பு :

ஒவ்வொரு பொறியியல் சம்பந்தப்பட்ட படிப்புகளிலும், மென்பொருளின் பங்களிப்பை வரும் வாரங்களில் தொடர்ச்சியாகப் பார்ப்போம்.

இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering):

siragu-engineering2-2

இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) படிப்பில் எப்படி மென்பொருளின் பங்களிப்பு உள்ளது, அதில் நிறுவனங்களுக்கு பணித்திறன் சம்பந்தப்பட்ட படிப்புகள் எவை என்பதைப் பார்ப்போம்.

AutoCad:

ஆட்டோகேட் என்னும் மென்பொருளை பயன்படுத்தி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்களின் வடிவமைப்பை மேற்கொள்ளலாம். 2D மாடலிங் என்று அழைக்கப்படும் இம் மென்பொருள் சம்பந்தப்பட்ட படிப்பு இயந்திரப் பொறியியல் படிப்பில் வாகனங்களின் மற்றும் இயந்திரங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களின் வடிவமைப்பை மேற்கொள்ள உதவும் மென்பொருள் ஆகும்.

 siragu-engineering2-4ஒரு இயந்திரப் பொறியாளர், வடிவமைப்பு சம்பந்தப்பட்ட படிப்பினைக் கற்றுக்கொள்வதற்கு அடிப்படைதான் இம் மென்பொருள் படிப்பு.

மேலும் இயந்திரப் பொறியாளர், இம்மாதிரி வடிவமைப்பு சம்பந்தப்பட்ட படிப்பினை படித்து முடித்தவுடன், மேலும் இதற்கு அடுத்த மென்பொருள் படிப்பினையும் தெரிந்து கொள்வதோடு, கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்க வேண்டும்.

நம்முடைய பணி வாய்ப்பினை தக்க வைப்பதற்கு, நாம் நம்முடைய துறை ரீதியில் கற்றுக் கொள்வதில் ஆர்வத்துடனும், பணியில் திறனையும் வளர்த்துக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

ஆர்வமும், திறமையும் இருந்தால் இயந்திரப் பொறியாளர் படிப்பிலும் கை நிறைய சம்பாதிக்கலாம்.

siragu-engineering2-3இன்று நகரப் பகுதிகளிலும் மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலும் பொறியியல் சம்பந்தப்பட்ட படிப்புகளில் படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில்லை என்ற கருத்துக்கள் பரவலாக உள்ளது.

அதில் உண்மையில்லை, பொறியியல் துறை ரீதியான, படிப்புகளில் விழிப்புணர்வு இல்லை என்பதையே இது காட்டுகிறது.

 அடுத்த வாரம் மற்றும் ஒரு பொறியியல் படிப்பைப் பற்றி பார்ப்போம்….


பா. வேல்குமார்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பொறியியல் கல்வி பயின்றால் வேலை பெற என்ன செய்ய வேண்டும் – தொடர் – 2”

அதிகம் படித்தது