மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இன்று காவிரி வழக்கு: கலவரம் ஏற்படாமல் இருக்க 144 தடை உத்தரவு



Sep 27, 2016

உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து சென்ற 12 ந்தேதி நடந்தது போன்று கலவரம் ஏற்படாமலிருக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

siragu-cavery-water

தமிழகத்துக்கு 6000 கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும் அதை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது. இந்த காவிரி பிரச்சினையால் கலவரங்கள் ஏற்பட்டும் வந்தது. இந்நிலையில் இன்று காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் 2 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இவ்வழக்கு இன்று நடைபெறுவதையடுத்து கர்நாடகத்தில் வாழும் தமிழ் மக்கள் கலவரம் நடக்குமோ என்ற பீதியில் உள்ளனர். இதனால் இன்று பள்ளி, அலுவலகங்கள் செல்வதை தவிர்த்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இன்று காவிரி வழக்கு: கலவரம் ஏற்படாமல் இருக்க 144 தடை உத்தரவு”

அதிகம் படித்தது