அதிமுக எம்.பி-க்கள் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை
Jan 21, 2017
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி, அதை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள்.
இதனையடுத்து அவசர வரைவு சட்டம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின் அதிமுக எம்.பி –க்கள் ராஷ்டிரபதி பவன் சென்று குடியரசு தலைவரை சந்தித்து ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதனால் இன்று இரவுக்குள் குடியரசு தலைவர் ஜல்லிக்கட்டு அவசர வரைவு சட்டத்திற்கு அனுமதி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபடுவோர் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என்று கூறி வருகிறார்கள்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “அதிமுக எம்.பி-க்கள் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை”