மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டார் மதுசூதனன்Feb 10, 2017

அதிமுக-வின் அவைத்தலைவர் மதுசூதனன், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதனையடுத்து மதுசூதனனை அதிமுக-வின் அவைத்தலைவர் பதவியிலிருந்து நீக்கினார் சசிகலா.

Siragu madhusoodhananஇதற்கு பதிலளித்த மதுசூதனன், தன்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்று கூறியுள்ளார். தொடர்ந்து சசிகலா பொதுச்செயலாளராக தேர்வானதை ஏற்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

மேலும், அதிமுக விதியில் தற்காலிகமான பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வழிகள் இல்லை என்றும், ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே பொதுச்செயலாளராக ஆக முடியும் என்றும் கூறியுள்ளார் மதுசூதனன். இதனையடுத்து சசிகலாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டார் மதுசூதனன்”

அதிகம் படித்தது