மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தீபா ஆதரவாளர்கள் துவக்கினர்Jan 13, 2017

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின் சசிகலா அதிமுக-வின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். சசிகலாவை ஏற்றுக்கொள்ளாத பலரும் ஜெயலலிதா-வின் அண்ணன் மகள் தீபாவை அரசியலில் ஈடுபட வலியுறுத்தி வருகிறார்கள்.

Siragu deepa

இந்நிலையில் அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தீபா ஆதரவாளர்கள் நாமக்கலில் தொடங்கி உள்ளனர். இந்த அறிவிப்பு மோகனூர் அருகே உள்ள நெய்க்காரன்பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் இதற்கான கூட்டம் நடத்தப்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்ல.ராசாமணி கட்சிக் கோடியை அறிமுகப்படுத்தினார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பின் கொங்கு மண்டலத்தில் இனியன் சம்பத், அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் துவங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து ஈரோட்டில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை துவக்கியுள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தீபா ஆதரவாளர்கள் துவக்கினர்”

அதிகம் படித்தது