அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்
Jan 21, 2017
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டனர். இத்தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
இதையடுத்து நேற்றுகாலை (20.01.17)வெள்ளை மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழா அமெரிக்க தேசிய கீதத்துடன் துவங்கியது. பின் அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார் டொனால்ட் ட்ரம்ப். மேலும் துணை அதிபராக பென்ஸி பதவியேற்றார். இருவருக்கும் அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
தொடர்ந்து அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் பேசியபோது, அமெரிக்காவை மேலும் வலுப்படுத்துவேன் என்று கூறினார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப்-க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்”