மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அமெரிக்கா கருக்கலைப்பு சட்டங்கள் – ஒரு பார்வை

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Dec 25, 2021

siragu abortion2

டெக்ஸாஸ் மாநிலம் அமெரிக்காவில் செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு S.B.8 என்ற வரைவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வரைவு ஆறு வாரக் காலத்திற்குப் பின்னான கருக்கலைப்பைத் தடை செய்யக் கொண்டுவரப்பட்டது. அதன் ஆங்கில வரிகள், a highly restrictive state bill that effectively bans all abortions after six weeks என்பதாகும்.

1973 ஆம் ஆண்டு Roe v Wade என்ற வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றம், கருக்கலைப்பைக் குற்றமாக்குவதன் மூலம் ஒரு பெண்ணின் தனி உரிமை (right to privacy) பாதிக்கப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கியது. அதே போல பதினான்காவது சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் உள்ளதாகக் கூறியது. பதினான்காவது சட்டத் திருத்தம்- fourteenth Amendment-இல் கூறியிருப்பதாவது( nor shall any state deprive any person of life, liberty ,or property without due process of law)

24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்யும் உரிமை தாய்க்கு உள்ளதாகக் கூறியது. Planned parenthood of southeastern Pennsylvania v. Casey (1992), கருக்கலைப்பைத் தடை செய்வது before fetus is viable (கருவறை தாண்டி சிசு உயிர் வாழ்தல்)எனக் கூறியது. Gonzales v. Carhart (2007) கருக்கலைப்பு செய்யும் அரிதான வழிமுறை intact dilation and evacuation இதற்குப் பாதி தடை கூறும் Partial – Birth Abortion Ban Act உறுதி செய்தது. Whole Woman’s Health v. Hellerstedt(2016) நீதிமன்றம் Casey வில் குறிப்பிடப்பட்ட கருக்கலைப்பு உரிமையை உறுதி செய்யும் இரண்டு சரத்துகளை ரத்து செய்தது.

இவை அனைத்தும் டெக்ஸாஸ் நீதிமன்ற தீர்ப்புகள் அல்லது டெக்ஸாஸ் அரசு கொண்டு வந்த கருக்கலைப்பிற்கு எதிரான சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடியபோது வழங்கப்பட்ட தீர்ப்புகள்.

இதற்கிடையில் தான் மேலே கூறப்பட்ட S.B.8, கொண்டு வரப்பட்டது, இதில் மற்றொரு முக்கிய அம்சம் யார் வேண்டுமானாலும் கருக்கலைப்பு செய்பவர்கள், தூண்டுபவர்கள், உதவி செய்கின்றவர்களுக்கு எதிராக வழக்கைப் பதியலாம்.அந்த வழக்கு வெற்றி பெற்றால் $10,000 வழக்கு செலவிற்காக எதிர் வழக்காடியோர் கொடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை, நெருங்கிய சொந்தங்கள் இடையே நடைபெறும் உடல் உறவால் உருவாகும் கருக்களுக்கு விதிவிலக்கு அளிக்கவில்லை. இந்த சட்டத்திற்குத் தடைபோட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

மே 2021, Dobbs v. Jackson Women’s Health Organization உச்சநீதிமன்றம் மிசிசிப்பி மாநிலத்தின் 15 வாரத்திற்குப் பின் கருக்கலைப்பு கூடாது என்ற வழக்கை விசாரிக்க எடுத்துக்கொண்டது. இந்த இரண்டு சட்டங்களுமே Roe மற்றும் Casey வழக்குகளுக்கு எதிரானது.

இந்த தீர்ப்புகளின் மூலம் கருக்கலைப்பு பெண்களின் முடிவு என்பதையும், தேவையான உடல்நலம் என்பதையும் மறுக்கும் காரணத்தால் நாடு தழுவிய அளவில் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் இந்த தீர்ப்புகளால் அமெரிக்காவின் பல மாகாணங்களில் கருக்கலைப்புக்கு எதிரான சட்டங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

நியூ மெக்சிக்கோ, கலிபோர்னியா, ஹவாய் தீவுகள், வெர்ஜினியா, வாசிங்டன், கலோராடோ, கனெக்டிகட் தவிர பெரும்பாலான மற்ற மாநிலங்கள் கருக்கலைப்பு கூடாது என்பதைத் தீவிரமாக்கி வருகின்றன.

பெண்கள் உரிமைகள் குறித்துப் பேசும் இயக்கங்கள், முற்போக்கு எண்ணம் கொண்டோர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புகளை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்கா கருக்கலைப்பு சட்டங்கள் – ஒரு பார்வை”

அதிகம் படித்தது