மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அய்யாக்கண்ணு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம்May 24, 2017

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெல்லியில் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.

Siragu farmers

தமிழக முதல்வரின் பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டத்தைக் கைவிட்டு தமிழகம் திரும்பினர் விவசாயிகள். இதையடுத்து இந்தியாவின் 16 மாநிலங்களின் விவசாயிகள் கூடி விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார் அய்யாக்கண்ணு.

அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் முதல்வரை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை. வேளாண் துறை அமைச்சரையும், துறை செயலரையும் சந்தித்து ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னை சேப்பாக்கத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார். மீண்டும் நடக்கவிருக்கும் இந்தப் போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக அமையும் என்று கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அய்யாக்கண்ணு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம்”

அதிகம் படித்தது