மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அறிஞர் க. பூரணச்சந்திரன் – இணையதள அறிமுகம்

காசி விசுவநாதன்

Oct 18, 2014

pooranachandran1அறிஞர் திரு..பூரணச்சந்திரன்அவர்கள் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ் துறைத்தலைவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வேலூர் ஊரிசு கல்லூரியில் இயற்பியல்இளங்கலைப் பட்டம் பெற்றவர் தொடர்ந்து தமிழிலும், ஆங்கிலத்திலும்முதுகலைப்பட்டம் பெற்றவர். வடமொழியை நன்கு கற்று தேர்ச்சிபெற்றவர். இதுஅவரது பிற்கால ஆய்வுகளுக்கு பெரும் உதவியாக இருந்தது. மார்க்சியசிந்தனையுடன் கூடிய, நல்ல திறனாய்வாளர். விமர்சனக்கலையை தமிழில்முனைப்புடன் வளர்த்தவர். இதழியலில் பல ஆய்வுகள் மேற்கொண்டவர். இதழியல்குறித்த பல நூல்கள் எழுதியுள்ளார். பல இலக்கியம் சார்ந்த சிற்றிதழ்களின்வளர்ச்சியிலும், தமிழகத்தில் புதிய நாடகக்கலை குறித்த கருத்தரங்கு, பட்டறைஆகியவற்றை ஒருங்கினைப்பதிலும் முன்னின்று செயலாற்றியவர்.  முற்போக்குதிரைப்படங்களையும் விமர்சனத்தையும் இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தமுயற்சி எடுத்தவர். பணி ஓய்விற்குப்பின் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின்வேண்டுகோளுக்கு இணங்க ” இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத் திறனாய்வுவரலாறு ” என்ற திட்டப்பணியினையும் திறம்பட செய்து முடித்தவர். நல்லவிமர்சகர், சிறந்த மொழிபெயர்ப்பாளர். அண்மையில் ஆனந்த விகடன் இவருக்கு 2011ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கி உள்ளது.  தமிழில்இவர் எழுதிய நூல்கள் பல். அவற்றுள் குறிப்பிட்ட சில :-

  1. கவிதை மொழி அமைப்பு தகர்ப்பும்.
  2. செய்தித் தொடர்பியல் கொள்கைகள்.
  3. பத்திரிக்கை – தலையங்கம் – கருத்துரை.
  4. அமைப்பு மைய வாதமும் பின்னமைப்பு வாதமும்.
  5. இந்திய மொழிகள் ஓர் அறிமுகம் ( தமிழில் வெளிவந்த முதல் மொழி வரலாற்று நூல் ).
  6. தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு – 1900 முதல் 1980 வரை.
  7. நவீன மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள்.
  8. இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள்.
  9. கவிதையியல்.

ஆகியவையும், 17க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களும், 6 க்கும் மேற்பட்ட  தொகுப்புநூல்களும் பதிப்பித்துள்ளார். இது தவிர தமிழ்ப்பலகலைக்கழகம், புதுவைப்பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்குத் திட்டப்பணிகளும், இந்திய மொழிகள்நடுவண் நிறுவனத்திற்காக – மொழிபெயர்ப்புக் கையேடு என்ற நூலினையும், தமிழ்இலக்கியத்தில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் மேம்பாடும், மற்றும் தமிழ் இலக்கியசுற்றுச்சூழல் ஆகிய நூல்களையும் செய்துள்ளார்.

சமுதாயத்தின்பால்தெளிந்த சிந்தனையும், அதன் முற்போக்கு வளர்ச்சிக்குத் தன் முழு உழைப்பையும்ஓயாது செய்து வருபவர். கல்லூரி வகுப்பறைகள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றில்இவரது சொற்பொழிவுகள், தேர்ந்த ஞானத்தின் வெளிப்பாடு. தக்க தகவுடைய சான்றுகூறி ஐயமற விளக்கம் தரும் ஆற்றல் கொண்டவர்.

“பிற நாட்டு நல்லறிஞர்சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்; அவற்றை வெளிநாட்டார்வணக்கஞ் செய்தல் வேண்டும்” என்ற பாரதியின் வழிநின்று சிறந்த நூல்களை தமிழில்மொழிபெயர்த்து வருகிறார்.

அறிஞர் க. பூரணச்சந்திரன் அவர்களின் சமூகம் சார்ந்த கட்டுரைகள், விமர்சனங்கள், கேள்வி – பதில் பகுதிகள், நூல் அறிமுகம் – மதிப்புரைகள், உலகத் திரைப்பட அறிமுகங்கள், மொழியியல் கொள்கை என பல்வேறு தலைப்புகளை சமூகம் சார்ந்து எழுதப்பட்டுவரும் அனைத்தும்தொகுக்கப்பட்டு இணைய தளமாக http://www.poornachandran.com என வடிவம் பெற்றுள்ளது.

இந்த இணையதளம் அறிஞர் க.பூரணச்சந்திரன் அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள விரும்பும் மாணவர்கள், ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் உள்ளதனால், தமிழர்கள், தமிழ் மாணவர்கள், புலம் பெயர் தமிழர்கள் என அனைவரிடமும் இந்த இணையதளம் சென்றடைந்தால், மொழி வளர்ச்ச்சி குறித்த சிந்தனையாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் நன்மை பயக்கும்.


காசி விசுவநாதன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிஞர் க. பூரணச்சந்திரன் – இணையதள அறிமுகம்”

அதிகம் படித்தது