மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: பெப்சி மற்றும் கோக் நிறுவனங்கள் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு



Mar 6, 2017

பெப்சி மற்றும் கோக் நிறுவனங்கள் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுத்து உபயோகித்து வந்தனர். இந்நிறுவனங்களுக்கு தண்ணீர் கொடுக்கப்படுவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

Siragu Thamirabarani_River

எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை முடிவில் பெப்சி மற்றும் கோக் நிறுவனங்கள் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த இத்தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள், பொதுமக்கள், பெண்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: பெப்சி மற்றும் கோக் நிறுவனங்கள் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு”

அதிகம் படித்தது