மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறதுMar 16, 2017

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் ஏப்ரல் 12ல் நடைபெற உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று(16.03.17) துவங்குகிறது.

Siragu By-election-in-RK-Nagar

இத்தேர்தலில் அதிமுக-வின் சசிகலா அணி சார்பாக தினகரன் போட்டியிட உள்ளார். திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிட உள்ளார். தே.மு.தி.க சார்பில் ப.மதிவாணன் என்பவரும், ஜெ., அண்ணன் மகள் தீபாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் ஓ.பி.எஸ் அணி சார்பாகவும் தங்களது வேட்பாளர்களை இத்தொகுதியில் நிறுத்த உள்ளனர்.

இத்தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 23. வாபஸ் பெற வேண்டிய தேதி மார்ச் 27. ஏப்ரல் 12ல் நடைபெறும் இத்தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை ஏப்ரல் 15ல் நடைபெறும்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது”

அதிகம் படித்தது