மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இலங்கை அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை: தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும்Nov 14, 2016

பாரம்பரிய மீன்பிடி உரிமைப் பெற்ற இடங்களில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் பொழுது எல்லை தாண்டி வந்ததாக மீனவர்களை கைது செய்தும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்தும் வந்தனர் இலங்கை கடற்படையினர்.

siragu-boats

இலங்கை அரசு கைது செய்யப்பட்ட மீனவர்களை அவ்வப்போது விடுவித்து வந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்காது இருந்து வருகிறது.

டெல்லியில் அண்மையில் இலங்கை- இந்திய மீனவர்கள் மற்றும் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து தற்போது இலங்கை கைவசம் உள்ள 120 தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசு. இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் இக்கோரிக்கையை பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலங்கை அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை: தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும்”

அதிகம் படித்தது