மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்Mar 7, 2017

இந்திய கடல் எல்லை ஆதம்பாலம் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர் ராமேஸ்வரம் மீனவர்கள். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Siragu fishermen- murder

இதில் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்சோ(22) என்பவர் பலியானார். மேலும் படகு ஓட்டுநர் சரோன் என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தங்கச்சிமடத்தில் மீனவர் அமைப்புகள் ஆலோசனை நடத்தி, தேவாலயம் முன்பு, துப்பாக்கிச்சூட்டில் பலியான மீனவர் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இலங்கைக் கடற்படையினர் நடத்திய படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை மீனவரின் உடலை பெறப்போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்”

அதிகம் படித்தது